1கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்,Speak unto the children of Israel, and say unto them, When either man or woman shall separate themselves to vow a vow of a Nazarite, to separate themselves unto the LORD:
3அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும்,He shall separate himself from wine and strong drink, and shall drink no vinegar of wine, or vinegar of strong drink, neither shall he drink any liquor of grapes, nor eat moist grapes, or dried.
4தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.All the days of his separation shall he eat nothing that is made of the vine tree, from the kernels even to the husk.
5அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.All the days of the vow of his separation there shall no razor come upon his head: until the days be fulfilled, in the which he separateth himself unto the LORD, he shall be holy, and shall let the locks of the hair of his head grow.
6அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக் கூடாது.All the days that he separateth himself unto the LORD he shall come at no dead body.
7அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.He shall not make himself unclean for his father, or for his mother, for his brother, or for his sister, when they die: because the consecration of his God is upon his head.
8அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.All the days of his separation he is holy unto the LORD.
9அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேயவிரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு,And if any man die very suddenly by him, and he hath defiled the head of his consecration; then he shall shave his head in the day of his cleansing, on the seventh day shall he shave it.
10எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.And on the eighth day he shall bring two turtles, or two young pigeons, to the priest, to the door of the tabernacle of the congregation:
11அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப் பாவநிவரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக.And the priest shall offer the one for a sin offering, and the other for a burnt offering, and make an atonement for him, for that he sinned by the dead, and shall hallow his head that same day.
12அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும்.And he shall consecrate unto the LORD the days of his separation, and shall bring a lamb of the first year for a trespass offering: but the days that were before shall be lost, because his separation was defiled.
13நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,And this is the law of the Nazarite, when the days of his separation are fulfilled: he shall be brought unto the door of the tabernacle of the congregation:
14சர்வாங்க தகனபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும் பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,And he shall offer his offering unto the LORD, one he lamb of the first year without blemish for a burnt offering, and one ewe lamb of the first year without blemish for a sin offering, and one ram without blemish for peace offerings,
15ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன் காணிக்கையாகச் செலுத்தக்கடவன்.And a basket of unleavened bread, cakes of fine flour mingled with oil, and wafers of unleavened bread anointed with oil, and their meat offering, and their drink offerings.
16அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரண பலியையும் அவனுடைய சர்வாங்க தகனபலியையும் செலுத்தி,And the priest shall bring them before the LORD, and shall offer his sin offering, and his burnt offering:
17ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதானபலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக.And he shall offer the ram for a sacrifice of peace offerings unto the LORD, with the basket of unleavened bread: the priest shall offer also his meat offering, and his drink offering.
18அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்.And the Nazarite shall shave the head of his separation at the door of the tabernacle of the congregation, and shall take the hair of the head of his separation, and put it in the fire which is under the sacrifice of the peace offerings.
19நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து,And the priest shall take the sodden shoulder of the ram, and one unleavened cake out of the basket, and one unleavened wafer, and shall put them upon the hands of the Nazarite, after the hair of his separation is shaven:
20அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டக்கடவன்; அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது பின்பு நசரேயன் திராட்சரசம் குடிக்கலாம்.And the priest shall wave them for a wave offering before the LORD: this is holy for the priest, with the wave breast and heave shoulder: and after that the Nazarite may drink wine.
21பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார்.This is the law of the Nazarite who hath vowed, and of his offering unto the LORD for his separation, beside that that his hand shall get: according to the vow which he vowed, so he must do after the law of his separation.
22பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
23நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:Speak unto Aaron and unto his sons, saying, On this wise ye shall bless the children of Israel, saying unto them,
24கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.The LORD bless thee, and keep thee:
25கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.The LORD make his face shine upon thee, and be gracious unto thee:
26கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.The LORD lift up his countenance upon thee, and give thee peace.
27இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.And they shall put my name upon the children of Israel, and I will bless them.
1Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
2Nee Israel puththirarotae sollavaenntiyathu ennavental: purushanaakilum sthireeyaakilum karththarukkentu viratham pannnnikkonndavarkalaayirukkumpati nasaraeya virathamaakiya oru viseshiththa poruththanaiyaip pannnninaal,Speak unto the children of Israel, and say unto them, When either man or woman shall separate themselves to vow a vow of a Nazarite, to separate themselves unto the LORD:
3Appatippattavan thiraatcharasaththaiyum mathupaanaththaiyum vilakkakkadavan; avan thiraatcharasaththin kaatiyaiyum matta mathupaanaththin kaatiyaiyum, thiraatcharasaththinaal seytha evvithamaana paanaththaiyum kutiyaamalum, thiraatchappalangalaiyaavathu thiraatcha vattalkalaiyaavathu pusiyaamalum,He shall separate himself from wine and strong drink, and shall drink no vinegar of wine, or vinegar of strong drink, neither shall he drink any liquor of grapes, nor eat moist grapes, or dried.
4Thaan nasaraeyanaayirukkum naalellaam thiraatchachcheti vithaimuthal tholvaraiyilullavaikalinaal seyyappatta yaathontaiyum pusiyaamalum irukkakkadavan.All the days of his separation shall he eat nothing that is made of the vine tree, from the kernels even to the husk.
5Avan nasaraeya virathangaakkum naalellaam savarakan kaththi avan thalaiyinmael padalaakaathu; avan karththarukkentu virathangaakkum kaalam niraivaeraுmalavum Parisuththamaayirunthu, than thalaimayirai valaravidakkadavan.All the days of the vow of his separation there shall no razor come upon his head: until the days be fulfilled, in the which he separateth himself unto the LORD, he shall be holy, and shall let the locks of the hair of his head grow.
6Avan karththarukkentu virathangaakkum naalellaam yaathoru piraethaththanntaiyil pokak koodaathu.All the days that he separateth himself unto the LORD he shall come at no dead body.
7Avan than thaevanukkentu seytha nasaraeya viratham avan thalaimael irukkirapatiyaal, maranamataintha than thakappanaalaakilum thaayinaalaakilum sakotharanaalaakilum sakothariyinaalaakilum thannaith theettuppaduththalaakaathu.He shall not make himself unclean for his father, or for his mother, for his brother, or for his sister, when they die: because the consecration of his God is upon his head.
8Avan nasaraeyanaayirukkum naalellaam karththarukkup Parisuththamaayiruppaan.All the days of his separation he is holy unto the LORD.
9Avananntaiyilae oruvan saduthiyil maranamatainthathinaal, nasaraeyavirathamulla avanutaiya thalai theettuppattathaeyaakil, avan than suththikarippin naalaakiya aelaam naalil than thalaimayiraich siraiththukkonndu,And if any man die very suddenly by him, and he hath defiled the head of his consecration; then he shall shave his head in the day of his cleansing, on the seventh day shall he shave it.
10Ettam naalil iranndu kaattuppuraakkalaiyaavathu iranndu puraakkunjukalaiyaavathu aasarippuk koodaaravaasalil aasaariyanidaththil konnduvarakkadavan.And on the eighth day he shall bring two turtles, or two young pigeons, to the priest, to the door of the tabernacle of the congregation:
11Appoluthu aasaariyan ontaip paavanivaranapaliyaakavum, mattaொntaich sarvaanga thakanapaliyaakavum seluththi, pinaththinaal avanukku unndaana theettaை nivirththiseythu, avan thalaiyai annaalil Parisuththappaduththuvaanaaka.And the priest shall offer the one for a sin offering, and the other for a burnt offering, and make an atonement for him, for that he sinned by the dead, and shall hallow his head that same day.
12Avan thirumpavum than virathanaatkalaik karththarukkentu kaaththu, oru varushaththu aattukkuttiyaik kuttanivaaranapaliyaakak konnduvarakkadavan; avanutaiya nasaraeya viratham theettuppattathinaal senta naatkal viruthaavaakum.And he shall consecrate unto the LORD the days of his separation, and shall bring a lamb of the first year for a trespass offering: but the days that were before shall be lost, because his separation was defiled.
13Nasaraeyanukkuriya piramaanamaavathu: avan virathangaakkum naatkal niraivaerina ante, avan aasarippuk koodaaravaasalilae vanthu,And this is the law of the Nazarite, when the days of his separation are fulfilled: he shall be brought unto the door of the tabernacle of the congregation:
14Sarvaanga thakanapaliyaaka oru varushaththu paluthatta oru aattukkuttiyaiyum paavanivaaranapaliyaaka oru varushaththu paluthatta oru pennnnaattukkuttiyaiyum, samaathaanapaliyaaka paluthatta oru aattukkadaavaiyum,And he shall offer his offering unto the LORD, one he lamb of the first year without blemish for a burnt offering, and one ewe lamb of the first year without blemish for a sin offering, and one ram without blemish for peace offerings,
15Oru kootaiyil ennnneyilae pisaintha pulippillaatha melliya maavinaal seytha athirasangalaiyum, ennnney thadavappatta pulippillaatha ataikalaiyum, avaikalukku aduththa pojanapaliyaiyum, paanapalikalaiyum karththarukkuth than kaannikkaiyaakach seluththakkadavan.And a basket of unleavened bread, cakes of fine flour mingled with oil, and wafers of unleavened bread anointed with oil, and their meat offering, and their drink offerings.
16Avaikalai aasaariyan karththarutaiya sannithiyil konnduvanthu, avanutaiya paavanivaarana paliyaiyum avanutaiya sarvaanga thakanapaliyaiyum seluththi,And the priest shall bring them before the LORD, and shall offer his sin offering, and his burnt offering:
17Aattukkadaavaik kootaiyilirukkum pulippillaatha appangalodungaூdak karththarukkuch samaathaanapaliyaakach seluththi, avanutaiya pojanapaliyaiyum paanapaliyaiyum pataippaanaaka.And he shall offer the ram for a sacrifice of peace offerings unto the LORD, with the basket of unleavened bread: the priest shall offer also his meat offering, and his drink offering.
18Appoluthu nasaraeyan aasarippuk koodaaravaasalilae, poruththanai seyyappatta than thalaiyaich siraiththu, poruththanai seyyappatta than thalaimayirai eduththu, samaathaanapaliyingeel erikira akkiniyil podakkadavan.And the Nazarite shall shave the head of his separation at the door of the tabernacle of the congregation, and shall take the hair of the head of his separation, and put it in the fire which is under the sacrifice of the peace offerings.
19Nasaraeyan poruththanai seyyappatta than thalaimayiraich siraiththukkonndapinpu, aasaariyan aattukkadaavinutaiya vaevikkappatta oru munnanthotaiyaiyum, kootaiyil irukkiravaikalilae pulippillaatha oru athirasaththaiyum pulippillaatha oru ataiyaiyum eduththu, avanutaiya ullangaikalil vaiththu,And the priest shall take the sodden shoulder of the ram, and one unleavened cake out of the basket, and one unleavened wafer, and shall put them upon the hands of the Nazarite, after the hair of his separation is shaven:
20Avaikalaik karththarutaiya sannithiyil asaivaattakkadavan; athu asaivaattappatta maarkkanndaththodum, aeraெduththup pataikkappatta munnanthotaiyodum, aasaariyanaich serum; athu Parisuththamaanathu pinpu nasaraeyan thiraatcharasam kutikkalaam.And the priest shall wave them for a wave offering before the LORD: this is holy for the priest, with the wave breast and heave shoulder: and after that the Nazarite may drink wine.
21Poruththanaipannnnina nasaraeyanukkum, avan than kaikku uthavukirathaiyallaamal, than nasaraeya virathaththinimiththam karththarukkuch seluththum kaannikkaikkum aduththa piramaanam ithuvae. Avan seytha poruththanaiyinpatiyae than poruththanaiyin piramaanaththukkaerka seythu theeravaenndum entu sol entar.This is the law of the Nazarite who hath vowed, and of his offering unto the LORD for his separation, beside that that his hand shall get: according to the vow which he vowed, so he must do after the law of his separation.
22Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
23Nee aaronodum avan kumaararodum sollavaenntiyathu ennavental: neengal Israel puththirarai aaseervathikkumpothu, avarkalaip paarththuch sollavaenntiyathaavathu:Speak unto Aaron and unto his sons, saying, On this wise ye shall bless the children of Israel, saying unto them,
24Karththar unnai aaseervathiththu, unnaik kaakkakkadavar.The LORD bless thee, and keep thee:
25Karththar thammutaiya mukaththai unmael pirakaasikkappannnni, unmael kirupaiyaayirukkakkadavar.The LORD make his face shine upon thee, and be gracious unto thee:
26Karththar thammutaiya mukaththai unmael pirasannamaakki, unakkuch samaathaanam kattalaiyidakkadavar enpathae.The LORD lift up his countenance upon thee, and give thee peace.
27Ivvithamaay avarkal en naamaththai Israel puththirarmael koorakkadavarkal; appoluthu naan avarkalai aaseervathippaen entu sol entar.And they shall put my name upon the children of Israel, and I will bless them.