Bible

Strong's Hebrew Concordance

Strong's Hebrew #403

Base Word
אָכֵן
Short Definitionfirmly; figuratively, surely; also (adversative) but
Long Definition

surely, truly, indeed

truly, indeed (strong assertive force), but indeed, but in fact (emphasizing a contrast)

Derivationfrom H3559 (compare H3651)
International Phonetic Alphabetʔɔːˈken̪
IPA modʔɑːˈχen
Syllableʾākēn
Dictionaw-KANE
Diction Modah-HANE
Usagebut, certainly, nevertheless, surely, truly, verily
Part of speechadv

Bible Verses (18 occurrences)

Genesis 28:16

யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.

Exodus 2:14

அதற்கு அவன்: எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.

1 Samuel 15:32

பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.

1 Kings 11:2

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.

Job 32:8

ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.

Psalm 31:22

உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

Psalm 66:19

மெய்யாய் தேவன் எனக்குச்செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

Psalm 82:7

ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.

Isaiah 40:7

கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.

Isaiah 45:15

இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்.

Occurences : 18