Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 20:6 in Tamil

Home Bible Leviticus Leviticus 20 Leviticus 20:6

லேவியராகமம் 20:6
அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்பற்றி கெட்டுப்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகச் செய்வேன்.

Tamil Easy Reading Version
“மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவனிடமும் எவனாவது அறிவுரை கேட்க நாடிச் சென்றால் நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் என்னில் நம்பிக்கையற்றவனாக இருப்பதால் அவனை மற்ற ஜனங்களை விட்டு தனியே பிரித்து வைப்பேன்.

Thiru Viviliam
குறிசொல்வோரையும், மைபோடுவோரையும் பின்பற்றி வழி தவறியோரை எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவர்களை அவர்கள் இனத்தில் இராதபடி அழிப்பேன்.

Leviticus 20:5Leviticus 20Leviticus 20:7

King James Version (KJV)
And the soul that turneth after such as have familiar spirits, and after wizards, to go a whoring after them, I will even set my face against that soul, and will cut him off from among his people.

American Standard Version (ASV)
And the soul that turneth unto them that have familiar spirits, and unto the wizards, to play the harlot after them, I will even set my face against that soul, and will cut him off from among his people.

Bible in Basic English (BBE)
And whoever goes after those who make use of spirits and wonder-workers, doing evil with them, against him will my face be turned, and he will be cut off from among his people.

Darby English Bible (DBY)
— And the soul that turneth unto necromancers and unto soothsayers, to go a whoring after them, I will set my face against that soul, and will cut him off from among his people.

Webster’s Bible (WBT)
And the soul that turneth after such as have familiar spirits, and after wizards, to go astray after them, I will even set my face against that soul, and will cut him off from among his people.

World English Bible (WEB)
“‘The person that turns to those who are mediums, and to the wizards, to play the prostitute after them, I will even set my face against that person, and will cut him off from among his people.

Young’s Literal Translation (YLT)
`And the person who turneth unto those having familiar spirits, and unto the wizards, to go a-whoring after them, I have even set My face against that person, and cut him off from the midst of his people.

லேவியராகமம் Leviticus 20:6
அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
And the soul that turneth after such as have familiar spirits, and after wizards, to go a whoring after them, I will even set my face against that soul, and will cut him off from among his people.

וְהַנֶּ֗פֶשׁwĕhannepešveh-ha-NEH-fesh
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
תִּפְנֶ֤הtipneteef-NEH
אֶלʾelel
הָֽאֹבֹת֙hāʾōbōtha-oh-VOTE
וְאֶלwĕʾelveh-EL
הַיִּדְּעֹנִ֔יםhayyiddĕʿōnîmha-yee-deh-oh-NEEM
לִזְנֹ֖תliznōtleez-NOTE
אַֽחֲרֵיהֶ֑םʾaḥărêhemah-huh-ray-HEM
וְנָֽתַתִּ֤יwĕnātattîveh-na-ta-TEE
אֶתʾetet
פָּנַי֙pānaypa-NA
בַּנֶּ֣פֶשׁbannepešba-NEH-fesh
הַהִ֔ואhahiwha-HEEV
וְהִכְרַתִּ֥יwĕhikrattîveh-heek-ra-TEE
אֹת֖וֹʾōtôoh-TOH
מִקֶּ֥רֶבmiqqerebmee-KEH-rev
עַמּֽוֹ׃ʿammôah-moh

Cross Reference

லேவியராகமம் 19:31
அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

ஏசாயா 8:19
அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?

லேவியராகமம் 20:27
அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

ஓசியா 4:12
என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம் போனார்கள்.

எசேக்கியேல் 6:9
என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,

சங்கீதம் 73:27
இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.

1 நாளாகமம் 10:13
அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.

உபாகமம் 18:10
தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

எண்ணாகமம் 15:39
நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.

லேவியராகமம் 19:26
யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.

யாத்திராகமம் 34:15
அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;


Tags அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று அவனைத் தன் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்
Leviticus 20:6 in Tamil Concordance Leviticus 20:6 in Tamil Interlinear Leviticus 20:6 in Tamil Image