யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.
தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப்போய்,
பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தேபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,
அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கேயிருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாய்ப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக்கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.
மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,
அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.
கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப்பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.
கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.
even city is | וּלְכָלֵ֣ב | ûlĕkālēb | oo-leh-ha-LAVE |
And unto | בֶּן | ben | ben |
Caleb son | יְפֻנֶּ֗ה | yĕpunne | yeh-foo-NEH |
the of | נָ֤תַן | nātan | NA-tahn |
Jephunneh he | חֵ֙לֶק֙ | ḥēleq | HAY-LEK |
gave | בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE |
part a | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
among children | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
the | אֶל | ʾel | el |
of Judah, according | פִּ֥י | pî | pee |
the to commandment | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
Lord the | לִֽיהוֹשֻׁ֑עַ | lîhôšuaʿ | lee-hoh-SHOO-ah |
of to | אֶת | ʾet | et |
Joshua, | קִרְיַ֥ת | qiryat | keer-YAHT |
the city | אַרְבַּ֛ע | ʾarbaʿ | ar-BA |
Arba of | אֲבִ֥י | ʾăbî | uh-VEE |
the father | הָֽעֲנָ֖ק | hāʿănāq | ha-uh-NAHK |
of | הִ֥יא | hîʾ | hee |
Anak, which Hebron. | חֶבְרֽוֹן׃ | ḥebrôn | hev-RONE |