1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
2அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.The same was in the beginning with God.
3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.All things were made by him; and without him was not any thing made that was made.
4அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.In him was life; and the life was the light of men.
5அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.And the light shineth in darkness; and the darkness comprehended it not.
6தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.There was a man sent from God, whose name was John.
7அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.The same came for a witness, to bear witness of the Light, that all men through him might believe.
8அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.He was not that Light, but was sent to bear witness of that Light.
9உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.That was the true Light, which lighteth every man that cometh into the world.
10அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.He was in the world, and the world was made by him, and the world knew him not.
11அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.He came unto his own, and his own received him not.
12அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name:
13அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.Which were born, not of blood, nor of the will of the flesh, nor of the will of man, but of God.
14அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth.
15யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.John bare witness of him, and cried, saying, This was he of whom I spake, He that cometh after me is preferred before me: for he was before me.
16அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.And of his fulness have all we received, and grace for grace.
17எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.For the law was given by Moses, but grace and truth came by Jesus Christ.
18தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.No man hath seen God at any time, the only begotten Son, which is in the bosom of the Father, he hath declared him.
19எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,And this is the record of John, when the Jews sent priests and Levites from Jerusalem to ask him, Who art thou?
20அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.And he confessed, and denied not; but confessed, I am not the Christ.
21அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.And they asked him, What then? Art thou Elias? And he saith, I am not. Art thou that prophet? And he answered, No.
22அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.Then said they unto him, Who art thou? that we may give an answer to them that sent us. What sayest thou of thyself?
23அதற்கு அவன் கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.He said, I am the voice of one crying in the wilderness, Make straight the way of the Lord, as said the prophet Esaias.
24அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.And they which were sent were of the Pharisees.
25அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.And they asked him, and said unto him, Why baptizest thou then, if thou be not that Christ, nor Elias, neither that prophet?
26யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.John answered them, saying, I baptize with water: but there standeth one among you, whom ye know not;
27அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.He it is, who coming after me is preferred before me, whose shoe's latchet I am not worthy to unloose.
28இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.These things were done in Bethabara beyond Jordan, where John was baptizing.
29மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.The next day John seeth Jesus coming unto him, and saith, Behold the Lamb of God, which taketh away the sin of the world.
30எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.This is he of whom I said, After me cometh a man which is preferred before me: for he was before me.
31நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும்பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.And I knew him not: but that he should be made manifest to Israel, therefore am I come baptizing with water.
32பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.And John bare record, saying, I saw the Spirit descending from heaven like a dove, and it abode upon him.
33நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.And I knew him not: but he that sent me to baptize with water, the same said unto me, Upon whom thou shalt see the Spirit descending, and remaining on him, the same is he which baptizeth with the Holy Ghost.
34அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.And I saw, and bare record that this is the Son of God.
35மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது,Again the next day after John stood, and two of his disciples;
36இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.And looking upon Jesus as he walked, he saith, Behold the Lamb of God!
37அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.And the two disciples heard him speak, and they followed Jesus.
38இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.Then Jesus turned, and saw them following, and saith unto them, What seek ye? They said unto him, Rabbi, (which is to say, being interpreted, Master,) where dwellest thou?
39அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.He saith unto them, Come and see. They came and saw where he dwelt, and abode with him that day: for it was about the tenth hour.
40யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.One of the two which heard John speak, and followed him, was Andrew, Simon Peter's brother.
41அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.He first findeth his own brother Simon, and saith unto him, We have found the Messias, which is, being interpreted, the Christ.
42பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.And he brought him to Jesus. And when Jesus beheld him, he said, Thou art Simon the son of Jona: thou shalt be called Cephas, which is by interpretation, A stone.
43மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.The day following Jesus would go forth into Galilee, and findeth Philip, and saith unto him, Follow me.
44பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.Now Philip was of Bethsaida, the city of Andrew and Peter.
45பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.Philip findeth Nathanael, and saith unto him, We have found him, of whom Moses in the law, and the prophets, did write, Jesus of Nazareth, the son of Joseph.
46அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.And Nathanael said unto him, Can there any good thing come out of Nazareth? Philip saith unto him, Come and see.
47இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.Jesus saw Nathanael coming to him, and saith of him, Behold an Israelite indeed, in whom is no guile!
48அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.Nathanael saith unto him, Whence knowest thou me? Jesus answered and said unto him, Before that Philip called thee, when thou wast under the fig tree, I saw thee.
49அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.Nathanael answered and saith unto him, Rabbi, thou art the Son of God; thou art the King of Israel.
50இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.Jesus answered and said unto him, Because I said unto thee, I saw thee under the fig tree, believest thou? thou shalt see greater things than these.
51பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.And he saith unto him, Verily, verily, I say unto you, Hereafter ye shall see heaven open, and the angels of God ascending and descending upon the Son of man.
1Aathiyilae vaarththai irunthathu, antha vaarththai thaevanidaththilirunthathu, antha vaarththai thaevanaayirunthathu.In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
2Avar aathiyilae thaevanotirunthaar.The same was in the beginning with God.
3Sakalamum avar moolamaay unndaayittaு; unndaanathontum avaraalaeyallaamal unndaakavillai.All things were made by him; and without him was not any thing made that was made.
4Avarukkul jeevan irunthathu, antha jeevan manusharukku oliyaayirunthathu.In him was life; and the life was the light of men.
5Antha oli irulilae pirakaasikkirathu; irulaanathu athaip pattikkollavillai.And the light shineth in darkness; and the darkness comprehended it not.
6Thaevanaal anuppappatta oru manushan irunthaan, avan paer yovaan.There was a man sent from God, whose name was John.
7Avan thannaal ellaarum visuvaasikkumpati antha oliyaik kuriththuchchaாtchikodukka saatchiyaaka vanthaan.The same came for a witness, to bear witness of the Light, that all men through him might believe.
8Avan antha oliyalla, antha oliyaikkuriththuch saatchikodukka vanthavanaayirunthaan.He was not that Light, but was sent to bear witness of that Light.
9Ulakaththilae vanthu entha manushanaiyum pirakaasippikkira oliyae antha meyyaana oli.That was the true Light, which lighteth every man that cometh into the world.
10Avar ulakaththil irunthaar, ulakam avar moolamaay unndaayittaு. Ulakamo avarai ariyavillai.He was in the world, and the world was made by him, and the world knew him not.
11Avar thamakkuch sonthamaanathilae vanthaar, avarukkuch sonthamaanavarkalo avarai aettaுkkollavillai.He came unto his own, and his own received him not.
12Avarutaiya naamaththinmael visuvaasamullavarkalaay avarai aettaுkkonndavarkal eththanaipaerkalo, aththanai paerkalum thaevanutaiya pillaikalaakumpati, avarkalukku athikaarangaொduththaar.But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name:
13Avarkal, iraththaththinaalaavathu, maamsa siththaththinaalaavathu purushanutaiya siththaththinaalaavathu piravaamal, thaevanaalae piranthavarkal.Which were born, not of blood, nor of the will of the flesh, nor of the will of man, but of God.
14Antha vaarththai maamsamaaki, kirupaiyinaalum saththiyaththinaalum nirainthavaraay, namakkullae vaasampannnninaar; avarutaiya makimaiyaik kanntoom; athu pithaavukku orae paeraanavarutaiya makimaikku aetta makimaiyaakavae irunthathu.And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth.
15Yovaan avaraikkuriththuch saatchikoduththu: enakkup pinvarukiravar enakku munnirunthavar, aakaiyaal avar ennilum maenmaiyullavar entu naan solliyirunthaenae, avar ivarthaan entu saththamittuk koorinaan.John bare witness of him, and cried, saying, This was he of whom I spake, He that cometh after me is preferred before me: for he was before me.
16Avarutaiya paripooranaththinaal naamellaarum kirupaiyinmael kirupai pettaோm.And of his fulness have all we received, and grace for grace.
17Eppatiyenil niyaayappiramaanam Mosesyin moolamaayk kodukkappattathu, kirupaiyum saththiyamum YesuKristhuvin moolamaay unndaayina.For the law was given by Moses, but grace and truth came by Jesus Christ.
18Thaevanai oruvanum orukkaalung kanndathillai, pithaavin matiyilirukkira oraepaeraana kumaaranae avarai velippaduththinaar.No man hath seen God at any time, the only begotten Son, which is in the bosom of the Father, he hath declared him.
19Erusalaemilirunthu yootharkal aasaariyaraiyum laeviyaraiyum yovaanidaththil anuppi: neer yaar entu kaettapoluthu,And this is the record of John, when the Jews sent priests and Levites from Jerusalem to ask him, Who art thou?
20Avan maraுthaliyaamal arikkaiyittathumanti, naan Kristhu alla entum arikkaiyittan.And he confessed, and denied not; but confessed, I am not the Christ.
21Appoluthu avarkal: pinnai yaar? Neer eliyaavaa entu kaettarkal atharku: naan avan alla entan. Neer theerkkatharisiyaanavaraa entu kaettarkal. Atharkum: alla entan.And they asked him, What then? Art thou Elias? And he saith, I am not. Art thou that prophet? And he answered, No.
22Avarkal pinnum avanai Nnokki: neer yaar? Engalai anuppinavarkalukku naangal uththaravu sollumpatikku, ummaikkuriththu enna sollukireer entu kaettarkal.Then said they unto him, Who art thou? that we may give an answer to them that sent us. What sayest thou of thyself?
23Atharku avan karththarukku valiyaich sevvaipannnungal entu aesaayaa theerkkatharisi sonnapatiyae, naan vanaantharaththilae kooppidukiravanutaiya saththamaayirukkiraேn entan.He said, I am the voice of one crying in the wilderness, Make straight the way of the Lord, as said the prophet Esaias.
24Anuppappattavarkal pariseyaraayirunthaarkal.And they which were sent were of the Pharisees.
25Avarkal avanai Nnokki: neer Kristhuvumalla, eliyaavumalla, theerkkatharisiyaanavarumallavental, aen njaanasnaanang kodukkireer entu kaettarkal.And they asked him, and said unto him, Why baptizest thou then, if thou be not that Christ, nor Elias, neither that prophet?
26Yovaan avarkalukkup pirathiyuththaramaaka: naan jalaththinaalae njaanasnaanangaொdukkiraேn; neengal ariyaathirukkira oruvar ungal naduvilae nirkiraar.John answered them, saying, I baptize with water: but there standeth one among you, whom ye know not;
27Avar enakkup pinvanthum ennilum maenmaiyullavar; avarutaiya paatharatchaைyin vaarai avilppatharkum naan paaththiranalla entan.He it is, who coming after me is preferred before me, whose shoe's latchet I am not worthy to unloose.
28Ivaikal yorthaanukku akkaraiyil yovaan njaanasnaanangaொduththa peththaaparaavilae nadanthana.These things were done in Bethabara beyond Jordan, where John was baptizing.
29Maraுnaalilae yovaan Yesuvaith thannidaththil varakkanndu: itho, ulakaththin paavaththaich sumanthutheerkkira thaeva aattukkutti.The next day John seeth Jesus coming unto him, and saith, Behold the Lamb of God, which taketh away the sin of the world.
30Enakkuppin oruvar varukiraar, avar enakku munnirunthapatiyaal ennilum maenmaiyullavarentu naan sonnaenae, avar ivarthaan.This is he of whom I said, After me cometh a man which is preferred before me: for he was before me.
31Naanum ivarai ariyaathirunthaen; ivar isravaelukku velippadumporuttaka, naan jalaththinaalae njaanasnaanang kodukka vanthaen entan.And I knew him not: but that he should be made manifest to Israel, therefore am I come baptizing with water.
32Pinnum yovaan saatchiyaakach sonnathu: Aaviyaanavar puraavaippola vaanaththilirunthirangi, ivarmael thanginathaik kanntaen.And John bare record, saying, I saw the Spirit descending from heaven like a dove, and it abode upon him.
33Naanum ivarai ariyaathirunthaen; aanaalum jalaththinaal njaanasnaanangaொdukkumpati ennai anuppinavar; Aaviyaanavar irangi yaarmael thanguvathai nee kaannpaayo, avarae Parisuththa aaviyinaal njaanasnaanangaொdukkiravarentu enakkuch solliyirunthaar.And I knew him not: but he that sent me to baptize with water, the same said unto me, Upon whom thou shalt see the Spirit descending, and remaining on him, the same is he which baptizeth with the Holy Ghost.
34Anthappatiyae naan kanndu, ivarae thaevanutaiya kumaaran entu saatchi koduththu varukiraேn entan.And I saw, and bare record that this is the Son of God.
35Maraுnaalilae yovaanum avanutaiya seesharil iranndupaerum nirkumpothu,Again the next day after John stood, and two of his disciples;
36Yesu nadanthupokirathai avan kanndu: itho, thaeva aattukkutti entan.And looking upon Jesus as he walked, he saith, Behold the Lamb of God!
37Avan appatich sonnathai avviranndu seesharungaettu, Yesuvukkup pinsentarkal.And the two disciples heard him speak, and they followed Jesus.
38Yesu thirumpi, avarkal pinsellukirathaik kanndu: enna thaedukireerkal entar. Atharku avarkal: rapee, neer engae thangiyirukkireer entu kaettarkal; rapee enpatharkup pothakarae entu arththamaam.Then Jesus turned, and saw them following, and saith unto them, What seek ye? They said unto him, Rabbi, (which is to say, being interpreted, Master,) where dwellest thou?
39Avar: vanthu paarungal entar. Avarkal vanthu avar thangiyiruntha idaththaik kanndu, antaiyaththinam avaridaththil thanginaarkal. Appoluthu aerakkuraiyap paththumanni vaelaiyaayirunthathu.He saith unto them, Come and see. They came and saw where he dwelt, and abode with him that day: for it was about the tenth hour.
40Yovaan sonnathaik kaettu, avarukkup pinsenta iranndupaeril oruvan seemon paethuruvin sakotharanaakiya anthiraeyaa enpavan.One of the two which heard John speak, and followed him, was Andrew, Simon Peter's brother.
41Avan muthalaavathu than sakotharanaakiya seemonaik kanndu: maesiyaavaik kanntoom entu sonnaan; maesiyaa enpatharkuk Kristhu entu arththamaam.He first findeth his own brother Simon, and saith unto him, We have found the Messias, which is, being interpreted, the Christ.
42Pinpu, avanai Yesuvinidaththil koottikkonnduvanthaan. Yesu avanaip paarththu: nee yonaavin makanaakiya seemon, nee kaepaa ennappaduvaay entar; kaepaa enpatharkup paethuru entu arththamaam.And he brought him to Jesus. And when Jesus beheld him, he said, Thou art Simon the son of Jona: thou shalt be called Cephas, which is by interpretation, A stone.
43Maraுnaalilae Yesu kalilaeyaavukkuppoka manathaayirunthu, pilippuvaikkanndu: nee enakkup pinsentu vaa entar.The day following Jesus would go forth into Galilee, and findeth Philip, and saith unto him, Follow me.
44Pilippenpavan anthiraeyaa paethuru enpavarkalutaiya ooraakiya pethsaayithaa pattanaththaan.Now Philip was of Bethsaida, the city of Andrew and Peter.
45Pilippu naaththaanvaelaik kanndu: niyaayappiramaanaththilae Mosesyum theerkkatharisikalum eluthiyirukkiravaraik kanntoom; avar yoseppin kumaaranum naasaraeththooraanumaakiya Yesuvae entan.Philip findeth Nathanael, and saith unto him, We have found him, of whom Moses in the law, and the prophets, did write, Jesus of Nazareth, the son of Joseph.
46Atharku naaththaanvael: naasaraeththilirunthu yaathoru nanmai unndaakakkoodumaa entan. Atharkup pilippu: vanthu paar entan.And Nathanael said unto him, Can there any good thing come out of Nazareth? Philip saith unto him, Come and see.
47Yesu naaththaanvaelaith thammidaththil varakkanndu avanaikkuriththu: itho, kapadatta uththama isravaelan entar.Jesus saw Nathanael coming to him, and saith of him, Behold an Israelite indeed, in whom is no guile!
48Atharku naaththaanvael: neer ennai eppati ariveer entan. Yesu avanai Nnokki: pilippu unnai alaikkiratharku munnae, nee aththimaraththin geelirukkumpothu unnaik kanntaen entar.Nathanael saith unto him, Whence knowest thou me? Jesus answered and said unto him, Before that Philip called thee, when thou wast under the fig tree, I saw thee.
49Atharku naaththaanvael: rapee, neer thaevanutaiya kumaaran, neer isravaelin raajaa entan.Nathanael answered and saith unto him, Rabbi, thou art the Son of God; thou art the King of Israel.
50Yesu avanukkup pirathiyuththaramaaka: aththimaraththin geelae unnaik kanntaen entu naan unakkuch sonnathinaalaeyaa visuvaasikkiraay; ithilum perithaanavaikalaik kaannpaay entar.Jesus answered and said unto him, Because I said unto thee, I saw thee under the fig tree, believest thou? thou shalt see greater things than these.
51Pinnum, avar avanai Nnokki: vaanam thiranthirukkirathaiyum, thaevathootharkal manushakumaaranidaththilirunthu aeraுkirathaiyum irangukirathaiyum neengal ithumuthal kaannpeerkal entu meyyaakavae meyyaakavae ungalukkuch sollukiraேn entar.And he saith unto him, Verily, verily, I say unto you, Hereafter ye shall see heaven open, and the angels of God ascending and descending upon the Son of man.