1 ⁽வரையாடு ஈனும் பருவம் தெரியுமோ?␢ மான்குட்டியை ஈனுதலைப்␢ பார்த்தது உண்டா?⁾

2 ⁽எண்ணமுடியுமா␢ அவை சினையாயிருக்கும் மாதத்தை?␢ கணிக்க முடியுமா␢ அவை ஈனுகின்ற காலத்தை?,⁾

3 ⁽குனிந்து குட்டிகளை அவை தள்ளும்;␢ வேதனையில் அவற்றை வெளியேற்றும்.⁾

4 ⁽வெட்ட வெளியில் குட்டிகள் வளர்ந்து␢ வலிமைபெறும்; விட்டுப் பிரியும்;␢ அவைகளிடம் மீண்டும் வராது.⁾

5 ⁽காட்டுக் கழுதையைக்␢ கட்டற்று திரியச் செய்தவர் யார்?␢ கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?⁾

6 ⁽பாலைநிலத்தை அதற்கு வீடாக்கினேன்;␢ உவர் நிலத்தை அதற்கு உறைவிடமாக்கினேன்.⁾

7 ⁽நகர அமளியை அது நகைக்கும்;␢ ஓட்டுவோன் அதட்டலுக்கும் செவிகொடாது.⁾

8 ⁽குன்றுகள் எங்கும் தேடும் மேய்ச்சலை;␢ பசுமை அனைத்தையும் நாடி அலையும்.⁾

9 ⁽காட்டெருமை உனக்கு ஊழியம் செய்ய விரும்புமா?␢ உன் தொழுவத்தில் ஓர் இரவேனும் தங்குமா?⁾

10 ⁽காட்டெருமையைக் கலப்பையில் பூட்டி␢ உழுதிடுவாயோ? பள்ளத்தாக்கில் பரம்படிக்க␢ அது உன் பின்னே வருமோ?⁾

11 ⁽அது மிகுந்த வலிமை கொண்டதால்␢ அதனை நம்பியிருப்பாயோ?␢ எனவே, உன் வேலையை␢ அதனிடம் விடுவாயோ?⁾

12 ⁽அது திரும்பி வரும் என நீ நம்புவாயோ?␢ உன் களத்திலிருந்து␢ தானியத்தைக் கொணருமோ?⁾

13 ⁽தீக்கோழி சிறகடித்து நகைத்திடும்;␢ ஆனால், அதன் இறக்கையிலும்␢ சிறகுகளிலும் இரக்கம் உண்டோ?⁾

14 ⁽ஏனெனில், மண்மேலே␢ அது தன் முட்டையை இடும்;␢ புழுதிமேல் பொரிக்க விட்டுவிடும்.⁾

15 ⁽காலடி பட்டு அவை நொறுங்குமென்றோ␢ காட்டு விலங்கு அவைகளை மிதிக்குமென்றோ␢ அது நினைக்கவில்லை.⁾

16 ⁽தன்னுடையவை அல்லாதன போன்று␢ தன் குஞ்சுகளைக் கொடுமையாய் நடத்தும்;␢ தன் வேதனை வீணாயிற்று␢ என்று கூடப் பதறாமல்போம்.⁾

17 ⁽கடவுள் அதை மதிமறக்கச் செய்தார்;␢ அறிவினில் பங்கு அளித்தார் இல்லை.⁾

18 ⁽விரித்துச் சிறகடித்து எழும்பொழுது,␢ பரியோடு அதன் வீரனையும் பரிகசிக்குமே!⁾

19 ⁽குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ?␢ அதன் கழுத்தைப் பிடரியால்␢ உடுத்தியது நீயோ?⁾

20 ⁽அதனைத் தத்துக்கிளிபோல்␢ தாவச் செய்வது நீயோ?␢ அதன் செருக்குமிகு கனைப்பு␢ நடுங்க வைத்திடுமே?⁾

21 ⁽அது மண்ணைப் பறிக்கும்;␢ தன் வலிமையில் மகிழும்␢ போர்க்களத்தைச் சந்திக்கப்␢ புறப்பட்டுச் செல்லும்.⁾

22 ⁽அது அச்சத்தை எள்ளி நகையாடும்;␢ அசையாது;␢ வாள் முனைக்கண்டு பின்வாங்காது.⁾

23 ⁽அதன்மேல்␢ அம்பறாத் தூணி கலகலக்கும்;␢ ஈட்டியும் வேலும் பளபளக்கும்;⁾

24 ⁽அது துள்ளும்; பொங்கி எழும்;␢ மண்ணை விழுங்கும்;␢ ஊதுகொம்பு ஓசையில் ஓய்ந்து நிற்காது;⁾

25 ⁽எக்காளம் முழங்கும்போதெல்லாம்␢ “ஐஇ” என்னும்; தளபதிகளின்␢ இடி முழக்கத்தையும் இரைச்சலையும்␢ அப்பால் போரினையும்␢ இப்பாலே மோப்பம் பிடிக்கும்.⁾

26 ⁽உன் அறிவினாலா வல்லூறு␢ பாய்ந்து இறங்குகின்றது?␢ தெற்கு நோக்கி␢ இறக்கையை விரிக்கின்றது?⁾

27 ⁽உனது கட்டளையாலா␢ கழுகு பறந்து ஏறுகின்றது?␢ உயர்ந்த இடத்தில்␢ தன் உறைவிடத்தைக் கட்டுகின்றது?⁾

28 ⁽பாறை உச்சியில்␢ கூடுகட்டித் தங்குகின்றது;␢ செங்குத்துப் பாறையை␢ அரணாகக் கொண்டுள்ளது.⁾

29 ⁽அங்கிருந்தே அது கூர்ந்து␢ இரையைப் பார்க்கும்;␢ தொலையிலிருந்தே அதன் கண்கள்␢ அதைக் காணும்.⁾

30 ⁽குருதியை உறிஞ்சும் அதன் குஞ்சுகள்;␢ எங்கே பிணமுண்டோ␢ அங்கே அது இருக்கும்.⁾

Job 39 ERV IRV TRV