Job 21 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 அதற்கு யோபு கூறிய மறுமொழி:2 ⁽நான் கூறுவதைக் கவனமாய்க்␢ கேளுங்கள்; இதுவே நீங்கள்␢ எனக்கு அளிக்கும் ஆறுதலாயிருக்கும்.⁾3 ⁽பொறுங்கள்! என்னைப் பேசவிடுங்கள்;␢ நான் பேசிய பிறகு கேலி செய்யுங்கள்.⁾4 ⁽என்னைப் பொறுத்த மட்டில்,␢ நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா?␢ இல்லையேல் நான் ஏன்␢ பொறுமை இழக்கக்கூடாது?⁾5 ⁽என்னை உற்றுப்பாருங்கள்; பதறுங்கள்;␢ கையால் வாயில் அடித்துக்கொள்ளுங்கள்.⁾6 ⁽இதை நான் நினைக்கும்பொழுது␢ திகிலடைகிறேன்;␢ நடுக்கம் என் சதையை ஆட்டுகிறது.⁾7 ⁽தீயோர் வாழ்வதேன்?␢ நீண்ட ஆயுள் பெறுவதேன்?␢ . வலியோராய் வளர்வதேன்?⁾8 ⁽அவர்களின் வழிமரபினர்␢ அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்;␢ அவர்களின் வழித்தோன்றல்கள்␢ அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர்.⁾9 ⁽அவர்களின் இல்லங்களில்␢ அச்சமற்ற அமைதி நிலவுகின்றது.␢ கடவுளின் தண்டனை␢ அவர்கள்மேல் விழவில்லை.⁾10 ⁽அவர்களின் காளைகள் பொலிகின்றன.␢ ஆனால் பிசகுவதில்லை;␢ அவர்களின் பசுக்கள் கருவுறும்;␢ ஆனால் கரு கலைவதில்லை.⁾11 ⁽மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை␢ வெளியனுப்புகின்றனர்; அவர்களின்␢ குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.⁾12 ⁽அவர்கள் தம்புரு, சுரமண்டலம் இசைத்துப்␢ பாடுகின்றனர்; குழல் ஊதி மகிழ்ந்திடுகின்றனர்.⁾13 ⁽அவர்கள் மகிழ்வில்␢ தம் நாள்களைக் கழிக்கின்றனர்;␢ அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.⁾14 ⁽அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்;␢ ‘எம்மை விட்டு அகலும்; ஏனெனில்,␢ உமது வழிகளை அறிந்து கொள்ள␢ நாங்கள் விரும்பவில்லை;’⁾15 ⁽எல்லாம் வல்லவர் யார் நாங்கள் பணி புரிய?␢ அவரை நோக்கி நாங்கள்␢ மன்றாடுவதால் என்ன பயன்?⁾16 ⁽இதோ! அவர்களின் வளமை␢ அவர்களின் கையில் இல்லை;␢ எனவே, தீயோரின் ஆலோசனை␢ எனக்குத் தொலையிலிருப்பதாக!⁾17 ⁽எத்தனைமுறை தீயோரின் ஒளி␢ அணைகின்றது? அழிவு␢ அவர்கள்மேல் வருகின்றது?␢ கடவுள் தம் சீற்றத்தில்␢ வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.⁾18 ⁽அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்;␢ சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர்.⁾19 ⁽அவர்களின் தீங்கைக் கடவுள் அவர்களின்␢ பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்?␢ அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்;␢ அவர்களும் அதை உணர்வர்.⁾20 ⁽அவர்களின் அழிவை அவர்களின்␢ கண்களே காணட்டும்;␢ எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை␢ அவர்கள் குடிக்கட்டும்.⁾21 ⁽அவருடைய நாள்கள் எண்ணப்பட்டபின்,␢ அவர்களது இல்லத்தில்␢ அவர்கள் கொள்ளும் அக்கறை என்ன?⁾22 ⁽இறைவனுக்கு அறிவைக் கற்பிப்போர் யார்?␢ ஏனெனில், அவரே␢ உயர்ந்தோரைத் தீர்ப்பிடுகின்றார்.⁾23 ⁽சிலர் வளமையோடும் வலிமையோடும்␢ நிறைவோடும் முழு அமைதியோடும்␢ சாகின்றனர்.⁾24 ⁽அவர்களின் தொடைகள்␢ கொழுப்பேறி உள்ளன; அவர்களின்␢ எலும்புகளின் சோறு உலரவில்லை.⁾25 ⁽வேறு சிலர், கசந்த உள்ளத்துடன்␢ இனிமையைச் சுவைக்காதவராய்ச் சாகின்றனர்;⁾26 ⁽புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்;␢ புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.⁾27 ⁽இதோ! உம் எண்ணங்களையும்␢ எனக்கெதிராய்த் தீட்டும் திட்டங்களையும்␢ நான் அறிவேன்.⁾28 ⁽ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்;␢ ‘கொடுங்கோலனின் இல்லம் எங்கே?␢ கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?’⁾29 ⁽வழிப்போக்கர்களை நீங்கள் வினவவில்லையா?␢ அவர்கள் அறிவித்ததை␢ நீங்கள் கேட்கவில்லையா?⁾30 ⁽தீயோர் அழிவின் நாளுக்கென␢ விடப்பட்டுள்ளனர்; வெஞ்சின நாளில்␢ அவர்கள் விடுவிக்கப்படுவாரா?⁾31 ⁽யார் அவர்களின் முகத்துக்கு எதிரே␢ அவர்களின் போக்கை உரைப்பார்?␢ யார் அவர்களின் செயலுக்கேற்ப கொடுப்பார்?⁾32 ⁽இருப்பினும், கல்லறைக்கு␢ அவர்கள் கொண்டுவரப்படுவர்;␢ அவர்களின் சமாதிக்குக்␢ காவல் வைக்கப்படும்.⁾33 ⁽பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு␢ இனிமையாய் இருக்கும்;␢ மாந்தர் அனைவரும் அவர்களைப்␢ பின்தொடர்வர்; அவர்களின்␢ முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.⁾34 ⁽அப்படியிருக்க, வெற்றுமொழியால்␢ நீர் என்னைத் தேற்றுவதெப்படி?␢ உமது மறுமொழி முற்றிலும் பொய்யே!⁾Job 21 ERV IRV TRV