எரேமியா 7:28
ஆகையால் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளமலும் இருகύகிற, ஜாதி இΤுதான் என்றும், ڠΤ்தியம் அழிந்தl அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல்.
Tamil Indian Revised Version
ஆகையால் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற மக்கள் இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து இல்லாமல் போனதென்றும் அவர்களுக்குச் சொல்.
Tamil Easy Reading Version
எனவே, நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும். நமது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியாத தேசம் இதுதான். தேவனுடைய போதனைகளை அதன் ஜனங்கள் கவனிக்கவில்லை, இந்த ஜனங்கள் உண்மையான போதனைகளை அறியவில்லை.
Thiru Viviliam
தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.⒫
King James Version (KJV)
But thou shalt say unto them, This is a nation that obeyeth not the voice of the LORD their God, nor receiveth correction: truth is perished, and is cut off from their mouth.
American Standard Version (ASV)
And thou shalt say unto them, This is the nation that hath not hearkened to the voice of Jehovah their God, nor received instruction: truth is perished, and is cut off from their mouth.
Bible in Basic English (BBE)
And you are to say to them, This is the nation which has not given ear to the voice of their God, or taken his teaching to heart: good faith is dead and is cut off from their mouths.
Darby English Bible (DBY)
And thou shalt say unto them, This is the nation which hath not hearkened unto the voice of Jehovah their God, nor received correction; fidelity is perished, and is cut off from their mouth.
World English Bible (WEB)
You shall tell them, This is the nation that has not listened to the voice of Yahweh their God, nor received instruction: truth is perished, and is cut off from their mouth.
Young’s Literal Translation (YLT)
And thou hast said unto them: This `is’ the nation that hath not hearkened, To the voice of Jehovah its God, Nor have they accepted instruction, Perished hath stedfastness, Yea, it hath been cut off from their mouth.
எரேமியா Jeremiah 7:28
ஆகையால் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளமலும் இருகύகிற, ஜாதி இΤுதான் என்றும், ڠΤ்தியம் அழிந்தl அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல்.
But thou shalt say unto them, This is a nation that obeyeth not the voice of the LORD their God, nor receiveth correction: truth is perished, and is cut off from their mouth.
| וְאָמַרְתָּ֣ | wĕʾāmartā | veh-ah-mahr-TA | |
| אֲלֵיהֶ֗ם | ʾălêhem | uh-lay-HEM | |
| זֶ֤ה | ze | zeh | |
| הַגּוֹי֙ | haggôy | ha-ɡOH | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| לֽוֹא | lôʾ | loh | |
| שָׁמְע֗וּ | šomʿû | shome-OO | |
| בְּקוֹל֙ | bĕqôl | beh-KOLE | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהָ֔יו | ʾĕlōhāyw | ay-loh-HAV | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| לָקְח֖וּ | loqḥû | loke-HOO | |
| מוּסָ֑ר | mûsār | moo-SAHR | |
| אָֽבְדָה֙ | ʾābĕdāh | ah-veh-DA | |
| הָֽאֱמוּנָ֔ה | hāʾĕmûnâ | ha-ay-moo-NA | |
| וְנִכְרְתָ֖ה | wĕnikrĕtâ | veh-neek-reh-TA | |
| מִפִּיהֶֽם׃ | mippîhem | mee-pee-HEM |
Cross Reference
ஏசாயா 59:14
நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.
செப்பனியா 3:2
அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.
மீகா 7:2
தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.
ஓசியா 4:1
இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.
எரேமியா 32:33
முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள்; நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளச் செவிகொடாமற்போனார்கள்.
எரேமியா 9:3
அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 6:29
துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.
எரேமியா 6:8
எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப்பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.
எரேமியா 5:3
கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
எரேமியா 5:1
நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
எரேமியா 2:30
நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.
ஏசாயா 1:4
ஐயோ, பாவமுள்ள ஜாதியும் அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
நீதிமொழிகள் 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
செப்பனியா 3:7
உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படி தண்டித்தாலும் அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்.
சங்கீதம் 50:17
சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
Tags ஆகையால் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமலும் இருகύகிற ஜாதி இΤுதான் என்றும் ڠΤ்தியம் அழிந்தl அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல்
Jeremiah 7:28 in Tamil Concordance Jeremiah 7:28 in Tamil Interlinear Jeremiah 7:28 in Tamil Image