Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 51:27 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 51 Jeremiah 51:27

எரேமியா 51:27
தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.

Tamil Indian Revised Version
தேசத்தில் கொடியேற்றுங்கள்; மக்களுக்குள் எக்காளம் ஊதுங்கள்; மக்களை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாக வரவழையுங்கள்; அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; அரிப்புள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரச்செய்யுங்கள்.

Tamil Easy Reading Version
“இந்நாட்டில் போர்க்கொடியை ஏற்றுங்கள்! அனைத்து நாடுகளிலும் எக்காளத்தை ஊதுங்கள்! பாபிலோனுக்கு எதிராகச் சண்டை செய்ய தேசங்களைத் தயார் செய்யுங்கள்! அந்த இராஜ்யங்களைப் பாபிலோனுக்கு எதிராகப் போரிட அழையுங்கள். ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ். அதற்கு எதிராகப் படை நடத்திச்செல்ல ஒரு தளபதியைத் தேர்ந்தெடு. வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போன்ற குதிரைகளை ஏராளமாக அனுப்பு.

Thiru Viviliam
⁽மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்;␢ மக்களினங்கள் நடுவில்␢ எக்காளம் ஊதுங்கள்;␢ அதனை எதிர்த்துப் போரிட␢ மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;␢ அதனை எதிர்க்குமாறு␢ அரராத்து, மின்னி, அஸ்கனாசு␢ ஆகிய அரசுகளுக்கு␢ அழைப்பு விடுங்கள்;␢ அதற்கு எதிராய்த்␢ தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள்.␢ வெட்டுக்கிளிக் கூட்டம்போல்␢ குதிரைகளைக் கொணருங்கள்.⁾

Jeremiah 51:26Jeremiah 51Jeremiah 51:28

King James Version (KJV)
Set ye up a standard in the land, blow the trumpet among the nations, prepare the nations against her, call together against her the kingdoms of Ararat, Minni, and Ashchenaz; appoint a captain against her; cause the horses to come up as the rough caterpillers.

American Standard Version (ASV)
Set ye up a standard in the land, blow the trumpet among the nations, prepare the nations against her, call together against her the kingdoms of Ararat, Minni, and Ashkenaz: appoint a marshal against her; cause the horses to come up as the rough canker-worm.

Bible in Basic English (BBE)
Let a flag be lifted up in the land, let the horn be sounded among the nations, make the nations ready against her; get the kingdoms of Ararat, Minni, and Ashkenaz together against her, make ready a scribe against her; let the horses come up against her like massed locusts.

Darby English Bible (DBY)
Lift up a banner in the land, blow the trumpet among the nations, prepare nations against her; call together against her the kingdoms of Ararat, Minni, and Ashkenaz; appoint a captain against her; cause the horses to come up as the bristly caterpillars.

World English Bible (WEB)
Set up a standard in the land, blow the trumpet among the nations, prepare the nations against her, call together against her the kingdoms of Ararat, Minni, and Ashkenaz: appoint a marshal against her; cause the horses to come up as the rough canker-worm.

Young’s Literal Translation (YLT)
Lift ye up an ensign in the land, Blow a trumpet among nations, Sanctify against it nations, Summon against it the kingdoms of Ararat, Minni, and Ashkenaz, Appoint against it an infant head, Cause the horse to ascend as the rough cankerworm.

எரேமியா Jeremiah 51:27
தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.
Set ye up a standard in the land, blow the trumpet among the nations, prepare the nations against her, call together against her the kingdoms of Ararat, Minni, and Ashchenaz; appoint a captain against her; cause the horses to come up as the rough caterpillers.

שְׂאוּśĕʾûseh-OO
נֵ֣סnēsnase
בָּאָ֗רֶץbāʾāreṣba-AH-rets
תִּקְע֨וּtiqʿûteek-OO
שׁוֹפָ֤רšôpārshoh-FAHR
בַּגּוֹיִם֙baggôyimba-ɡoh-YEEM
קַדְּשׁ֤וּqaddĕšûka-deh-SHOO
עָלֶ֙יהָ֙ʿālêhāah-LAY-HA
גּוֹיִ֔םgôyimɡoh-YEEM
הַשְׁמִ֧יעוּhašmîʿûhahsh-MEE-oo
עָלֶ֛יהָʿālêhāah-LAY-ha
מַמְלְכ֥וֹתmamlĕkôtmahm-leh-HOTE
אֲרָרַ֖טʾărāraṭuh-ra-RAHT
מִנִּ֣יminnîmee-NEE
וְאַשְׁכְּנָ֑זwĕʾaškĕnāzveh-ash-keh-NAHZ
פִּקְד֤וּpiqdûpeek-DOO
עָלֶ֙יהָ֙ʿālêhāah-LAY-HA
טִפְסָ֔רṭipsārteef-SAHR
הַֽעֲלוּhaʿălûHA-uh-loo
ס֖וּסsûssoos
כְּיֶ֥לֶקkĕyeleqkeh-YEH-lek
סָמָֽר׃sāmārsa-MAHR

Cross Reference

ஆதியாகமம் 10:3
கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

ஆதியாகமம் 8:4
ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.

எரேமியா 51:12
பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதிவிருப்பாரை வையுங்கள்; ஆனாலும் கர்த்தர் எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார்.

எரேமியா 50:2
பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மேராதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்பண்ணுங்கள்.

எரேமியா 25:14
அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவர்களை அடிமைகொள்வார்கள்; நான் அவர்களுக்கு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாகவும், அவர்கள் கைகளின் செய்கைகளுக்குதக்கதாகவும் பதில் அளிப்பேன் என்கிறார்.

எரேமியா 51:14
மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப் போல் திரளான மனுஷரால் உன்னை நிரம்பப்பண்ணுவேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம் பண்ணுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார்.

எரேமியா 50:41
இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.

ஏசாயா 18:3
பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும் மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள்.

ஏசாயா 13:2
உயர்ந்த பர்வதத்தின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு ஜனங்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் பிரவேசிப்பதற்குச் சைகை காட்டுங்கள்.

1 நாளாகமம் 1:6
கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 9:7
அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.

சகரியா 14:2
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.

நாகூம் 3:15
அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும், பட்டயம் உன்னைச் சங்கரிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னைப் பட்சித்துப்போடும்; உன்னைப் பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள்.

ஆமோஸ் 3:6
ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?

யோவேல் 2:2
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டானதுமில்லை.

எரேமியா 46:23
எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.

எரேமியா 6:1
பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.

2 இராஜாக்கள் 19:37
அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசாத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.

நியாயாதிபதிகள் 6:5
அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள்; அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்; இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.


Tags தேசத்திலே கொடியேற்றுங்கள் ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள் ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள் ஆரராத் மின்னி அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள் சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்
Jeremiah 51:27 in Tamil Concordance Jeremiah 51:27 in Tamil Interlinear Jeremiah 51:27 in Tamil Image