Jeremiah 48 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:⁽நெபோவுக்கு ஐயோ கேடு!␢ அது பாழடைந்து கிடக்கிறது.␢ கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக்␢ கைப்பற்றப்பட்டுள்ளது.␢ அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு,␢ தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.⁾2 ⁽போவாபின் புகழ் மங்கிவிட்டது;␢ எஸ்போனில் அதற்குத்␢ தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது:␢ ‘வாருங்கள்; அதனை ஒரு நாடாய்␢ இல்லாதவாறு சிதைப்போம்’.␢ மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்;␢ வாள் உன்னைத் துரத்தி வரும்.⁾3 ⁽ஓரொனாயிமினின்று␢ கூக்குரல் ஒலிக்கிறது.␢ ‘கொடுமை, பேரழிவு’ எனக் கேட்கிறது.⁾4 ⁽மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது;␢ அதன் குழந்தைகளின்␢ அழுகுரல் கேட்கின்றது.⁾5 ⁽லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில்␢ அவர்கள் அழுதுகொண்டே␢ போகிறார்கள்;␢ ஓரொனாயிமுக்கு␢ இறங்கிச் செல்லும் வழியில்␢ அழிவின் புலம்பல்* கேட்கிறது.⁾6 ⁽தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப்␢ பாதுகாத்துக்கொள்ளுங்கள்;␢ பாலை நிலத்துக்␢ காட்டுக்கழுதைபோல் மாறுங்கள்.⁾7 ⁽உன் கோட்டைகளையும்*␢ கருவூலங்களையும் நம்பியிருந்தாய்;␢ நீயும் கைப்பற்றப்படுவாய்.␢ கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்;␢ அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும்␢ அதனோடு செல்வார்கள்.⁾8 ⁽‘அழிப்போன்’␢ ஒவ்வொரு நகருக்கும் வருவான்.␢ எந்த நகரும் தப்பாது.␢ ஆண்டவர் சொல்லியிருப்பது போல்␢ பள்ளத்தாக்குகள் பாழாகும்;␢ சமவெளிகள் அழிக்கப்படும்.⁾9 ⁽மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்;␢ அது பறந்தோடட்டும்;␢ அதன் நகர்கள் பாழாக்கப்படும்;␢ அவை குடியிருப்போர் அற்றுப் போகும்.⁾10 ⁽ஆண்டவர்தம் அலுவலை␢ அக்கறையின்றிச் செய்பவன்␢ சபிக்கப்பட்டவன்;␢ குருதி சிந்தாமல்␢ தன் வாளை வைத்திருப்பவனும்␢ சபிக்கப்பட்டவனே.⁾11 ⁽மோவாபு இளமைமுதல்␢ அமைதியில் வாழ்ந்துவருகிறது;␢ மண்டியை அடியில் கொண்ட␢ பழந் திராட்சை இரசம் அது␢ . அது கலத்தினின்று கலத்திற்கு␢ மாற்றப்படாதது; நாடுகடத்தப்படாதது;␢ அதன் சுவை குன்றவில்லை;␢ அதன் நறுமணம் மாறவில்லை.⁾⒫12 எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் ‘கவிழ்ப்போரை’ அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்; அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்; அதன் சாடிகளை நொறுக்குவார்கள்.13 இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும்.⒫14 ⁽‘நாங்கள் படைவீரர்கள்;␢ போரில் வல்லவர்கள்’ என்று␢ நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்?⁾15 ⁽“மோவாபையும் அதன் நகர்களையும்␢ அழிப்பவன் வந்துவிட்டான்;␢ அதன் சிறந்த இளைஞர்கள்␢ கொலைக் களத்திற்குப்␢ போய் விட்டார்கள்,” என்கிறார்␢ படைகளின் ஆண்டவர் என்னும்␢ பெயருடைய மன்னர்.⁾16 ⁽மோவாபின் அழிவு␢ அண்மையில் உள்ளது;␢ தீங்கு அதை நோக்கி␢ விரைந்து வருகிறது.⁾17 ⁽அதைச் சுற்றியிருப்போரே,␢ நீங்கள் அனைவரும் அதற்காகத்␢ துக்கம் கொண்டாடுங்கள்.␢ அதன் புகழை அறிந்திருப்போரே,␢ நீங்கள் அனைவரும்␢ ‘வலிமைமிக்க செங்கோல்␢ முறிந்தது எங்ஙனம்?␢ மேன்மைமிக்க கோல்␢ உடைந்தது எவ்வாறு?’␢ என்று கேளுங்கள்.⁾18 ⁽மகள் தீபோனின் குடிமகனே,␢ உன் மேன்மையை விட்டு இறங்கி வா;␢ வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள்.§மோவாபை அழிப்பவன்␢ உனக்கு எதிராக எழுந்துவிட்டான்;␢ உன் கோட்டைகளை␢ அவன் தகர்த்து விட்டான்.⁾19 ⁽அரோயேரின் குடிமகனே!␢ நீ சாலை ஓரமாய் நின்று கவனி;␢ ஓட்டம்பிடிக்கிறவனையும்␢ தப்பி ஓடுகிறவளையும் நோக்கி,␢ ‘என்ன நடந்தது?’ என்று கேள்.⁾20 ⁽மோவாபு அழிக்கப்பட்டுச்␢ சிறுமைக்குள்ளானது;␢ அழுது புலம்புங்கள்;␢ கூக்குரலிடுங்கள்;␢ மோவாபு பாழடைந்துவிட்டது என␢ அர்னோனில் அறிவியுங்கள்.⁾⒫21 சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது; ஓலோன், யாகுசா, மேப்பாத்து,22 தீபோன், நெபோ, பெத்திப்லத்தாயிம்,23 கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன்,24 கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது.25 மோவாபின் கொம்பு முறிந்து விட்டது; அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர்.⒫26 மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்; ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்; ஏளனத்துக்கு ஆளாகும்.27 இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம் உன் தலையை ஆட்டிப் பழித்தாயே? அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா?⒫28 ⁽மோவாபின் குடிமக்களே,␢ நகர்களை விட்டு வெளியேறுங்கள்;␢ பாறைப் பகுதியில் குடியேறுங்கள்.␢ பாறையின் இடுக்குகளில்␢ கூடுகட்டி வாழும்␢ புறாவைப் போல் இருங்கள்.⁾29 ⁽மோவாபின் செருக்கைப் பற்றி␢ நாங்கள் கேள்வியுற்றோம்;␢ பெரிதே அதன் இறுமாப்பு!␢ அதன் ஆணவம், செருக்கு,␢ அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம்␢ கேள்வியுற்றோம்.⁾30 ⁽அதன் திமிரை நான் அறிவேன்,␢ என்கிறார் ஆண்டவர்.␢ அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்;␢ அதன் செயல்கள் யாவும் பொய்.⁾31 ⁽மோவாபை முன்னிட்டு␢ நான் ஓலமிடுவேன்;␢ மோவாபு முழுவதையும் குறித்து␢ அலறியழுவேன்;␢ கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப்␢ புலம்புவேன்.⁾32 ⁽சிப்மாவின் திராட்சைக் கொடியே,␢ யாசேருக்காக அழுவதைவிட␢ அதிகமாய் உனக்காக அழுவேன்.␢ உன் கொடிகள்␢ கடல் வரை படர்ந்துள்ளன;␢ யாசேர் கடலை எட்டியுள்ளன.␢ கோடைப் பழங்கள்மீதும்␢ திராட்சைப் பழங்கள்மீதும்␢ ‘அழிப்போன்’ பாய்ந்து வந்தான்.⁾33 ⁽செழிப்பான மோவாபு நாட்டினின்று␢ மகிழ்ச்சியும், அக்களிப்பும்␢ அகற்றப்பட்டுவிட்டன;␢ திராட்சை ஆலைகளில்␢ இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்;␢ மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன்␢ எவனும் இலலை;␢ மகிழ்ச்சியின் ஆரவாரம்␢ அங்கு எழுவதில்லை.⁾34 எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது; சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது.35 மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர்.36 எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது; என் இதயம் புல்லாங்குழல் போன்று கீர்கெரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது. ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் அழிந்து விட்டன.⒫37 அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன; தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது.38 மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர்.⒫39 இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே! இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே! இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே! மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும் ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று.⒫40 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே;␢ ஒருவன் கழுகைப்போல்␢ பாய்ந்து வருவான்;␢ மோவாபின்மீது␢ தன் இறக்கைகளை விரிப்பான்.⁾41 ⁽நகர்கள் பிடிபடும்;␢ கோட்டைகள் கைப்பற்றப்படும்.␢ அந்நாளில் மோவாபிய␢ படைவீரர்களின் இதயம்␢ பேறுகாலப் பெண்ணின்␢ இதயத்தைப்போல் துடிக்கும்.⁾42 ⁽மோவாபு அழிக்கப்படும்;␢ இனி அது ஒரு மக்களினமாய் இராது.␢ அது ஆண்டவருக்கு எதிராகப்␢ பெருமை அடித்துக் கொண்டது.⁾43 ⁽மோவாபின் மகனே,␢ திகிலும் படுகுழியும் கண்ணியுமே␢ உன்முன் இருக்கின்றன,␢ என்கிறார் ஆண்டவர்.⁾44 ⁽திகிலுக்கு அஞ்சி ஓடுபவன்␢ படுகுழியில் விழுவான்;␢ படுகுழியினின்று வெளியே வருபவன்␢ கண்ணியில் மாட்டிக்கொள்வான்.␢ அவர்களுடைய தண்டனைக் காலத்தில்␢ இவற்றை மோவாபின்மீது␢ வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர்.⁾45 ⁽தப்பியோடுவோர்␢ எஸ்போனின் நிழலில்␢ வலுவிழந்து நிற்கின்றனர்;␢ எஸ்போனிலிருந்து␢ நெருப்பு கிளம்பிற்று;␢ சீகோனிலிருந்து␢ தீப்பிழம்பு புறப்பட்டது;␢ மோவாபின் நெற்றியை␢ அது விழுங்கிற்று;␢ கலக்காரரின் உச்சந்தலையை␢ அது பொசுக்கிற்று.⁾46 ⁽மோவாபே, உனக்கு ஐயோ கேடு!␢ கெமோசின் மக்கள்␢ அழிந்துபோயினர்;␢ உன் புதல்வர்␢ நாடு கடத்தப்பட்டனர்;␢ உன் புதல்வியரும்␢ நாடுகடத்தப்பட்டனர்.⁾47 ⁽ஆயினும், இறுதி நாள்களில்␢ அடிமைத்தனத்தினின்று␢ மோவாபை நான்␢ திரும்பக் கொணர்வேன்,␢ என்கிறார் ஆண்டவர்.␢ மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்பு␢ இத்துடன் முற்றிற்று.⁾Jeremiah 48 ERV IRV TRV