Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 47:2 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 47 Jeremiah 47:2

எரேமியா 47:2
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து ஜலம் பொங்கி பிரவாகமாகி தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின் மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின் மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனுஷர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து தண்ணீர் பொங்கி பிரவாகித்து தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின்மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனிதர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லோரும் அலறுவார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “வடக்கில் பகை வீரர்களைப் பார். எல்லாம் ஒன்றுக்கூடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேகமான ஆறு கரையை மோதிக்கொண்டு வருவதுபோன்று வருவார்கள். அவர்கள் நாடு முழுவதையும் வெள்ளம்போன்று மூடுவார்கள். அவர்கள் பட்டணங்களையும் அதில் வாழும் ஜனங்களையும் மூடுவார்கள். அந்நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் உதவிக்காக அழுவார்கள்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் கூறுவது இதுவே: § வடக்கினின்று வெள்ளம்␢ பொங்கி எழுகின்றது;␢ கரை புரண்டோடும் காட்டாறென␢ அது மாறுகின்றது.␢ நாட்டையும் அதில் உள்ள␢ அனைத்தையும்␢ நகரையும் அதன் குடிகளையும்␢ மூழ்கடிக்கும்.␢ மனிதர் கூக்குரலிடுவர்; § நாட்டு மக்கள் அனைவரும்␢ ஓலமிடுவர்.⁾

Jeremiah 47:1Jeremiah 47Jeremiah 47:3

King James Version (KJV)
Thus saith the LORD; Behold, waters rise up out of the north, and shall be an overflowing flood, and shall overflow the land, and all that is therein; the city, and them that dwell therein: then the men shall cry, and all the inhabitants of the land shall howl.

American Standard Version (ASV)
Thus saith Jehovah: Behold, waters rise up out of the north, and shall become an overflowing stream, and shall overflow the land and all that is therein, the city and them that dwell therein; and the men shall cry, and all the inhabitants of the land shall wail.

Bible in Basic English (BBE)
This is what the Lord has said: See, waters are coming up out of the north, and will become an overflowing stream, overflowing the land and everything in it, the town and those who are living in it; and men will give a cry, and all the people of the land will be crying out in pain.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah: Behold, waters rise up out of the north, and shall become an overflowing flood, and shall overflow the land, and all that is therein; the city, and them that dwell therein: and the men shall cry, and all the inhabitants of the land shall howl,

World English Bible (WEB)
Thus says Yahweh: Behold, waters rise up out of the north, and shall become an overflowing stream, and shall overflow the land and all that is therein, the city and those who dwell therein; and the men shall cry, and all the inhabitants of the land shall wail.

Young’s Literal Translation (YLT)
`Thus said Jehovah: Lo, waters are coming up from the north, And have been for an overflowing stream, And they overflow the land and its fulness, The city, and the inhabitants in it, And men have cried out, And howled hath every inhabitant of the land.

எரேமியா Jeremiah 47:2
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து ஜலம் பொங்கி பிரவாகமாகி தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின் மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின் மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனுஷர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள்.
Thus saith the LORD; Behold, waters rise up out of the north, and shall be an overflowing flood, and shall overflow the land, and all that is therein; the city, and them that dwell therein: then the men shall cry, and all the inhabitants of the land shall howl.

כֹּ֣ה׀koh
אָמַ֣רʾāmarah-MAHR
יְהוָ֗הyĕhwâyeh-VA
הִנֵּהhinnēhee-NAY
מַ֜יִםmayimMA-yeem
עֹלִ֤יםʿōlîmoh-LEEM
מִצָּפוֹן֙miṣṣāpônmee-tsa-FONE
וְהָיוּ֙wĕhāyûveh-ha-YOO
לְנַ֣חַלlĕnaḥalleh-NA-hahl
שׁוֹטֵ֔ףšôṭēpshoh-TAFE
וְיִשְׁטְפוּ֙wĕyišṭĕpûveh-yeesh-teh-FOO
אֶ֣רֶץʾereṣEH-rets
וּמְלוֹאָ֔הּûmĕlôʾāhoo-meh-loh-AH
עִ֖ירʿîreer
וְיֹ֣שְׁבֵיwĕyōšĕbêveh-YOH-sheh-vay
בָ֑הּbāhva
וְזָֽעֲקוּ֙wĕzāʿăqûveh-za-uh-KOO
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
וְהֵילִ֕לwĕhêlilveh-hay-LEEL
כֹּ֖לkōlkole
יוֹשֵׁ֥בyôšēbyoh-SHAVE
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

Cross Reference

எரேமியா 46:20
எகிப்து மகா நேர்த்தியான கடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்.

எரேமியா 8:16
தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.

எரேமியா 1:14
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.

ஏசாயா 15:2
அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

ஏசாயா 8:7
இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,

நாகூம் 1:8
ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்.

செப்பனியா 1:10
அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 கொரிந்தியர் 10:26
பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.

1 கொரிந்தியர் 10:28
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

யாக்கோபு 5:1
ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 12:15
அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 17:1
ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;

வெளிப்படுத்தின விசேஷம் 17:15
பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.

ஆமோஸ் 9:5
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்தைத் தொட அது உருகிப்போம்; அப்பொழுது அதின் குடிகளெல்லாரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாய்ப் புரண்டோடி எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும்.

தானியேல் 11:22
பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்.

எரேமியா 48:39
மோவாப் எவ்வளவாய் முறிந்துபோயிற்றென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்

சங்கீதம் 50:12
நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

சங்கீதம் 96:11
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.

சங்கீதம் 98:7
சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.

ஏசாயா 14:31
வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுதும் கரைந்துபோகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை.

ஏசாயா 15:8
கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.

ஏசாயா 22:1
தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம். உன்னில் உள்ளவர்கள் எல்லாரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன?

ஏசாயா 22:4
ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.

ஏசாயா 28:17
நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்குநூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.

ஏசாயா 59:19
அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.

எரேமியா 46:6
வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியண்டையிலே அவர்கள் இடறிவிழுவார்கள்.

எரேமியா 46:13
எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் கர்த்தர் சொன்ன வசனம்:

எரேமியா 48:3
பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாகிற கூப்பிடுதலின் சத்தம் ஒரொனாயிமிலிருந்து கேட்கப்படும்.

சங்கீதம் 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.


Tags கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ வடக்கேயிருந்து ஜலம் பொங்கி பிரவாகமாகி தேசத்தின்மேலும் அதிலுள்ள எல்லாவற்றின் மேலும் நகரத்தின்மேலும் அதில் குடியிருக்கிறவர்களின் மேலும் புரண்டு ஓடும் அப்பொழுது மனுஷர் கூக்குரலிட்டு தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள்
Jeremiah 47:2 in Tamil Concordance Jeremiah 47:2 in Tamil Interlinear Jeremiah 47:2 in Tamil Image