Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 15:2 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 15 Jeremiah 15:2

எரேமியா 15:2
எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.

Tamil Indian Revised Version
எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: மரணத்திற்கு ஏதுவானவர்கள் மரணத்திற்கும், பட்டயத்திற்கு ஏதுவானவர்கள் பட்டயத்திற்கும், பஞ்சத்திற்கு ஏதுவானவர்கள் பஞ்சத்திற்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராகப் போகவேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொல்லு.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் உன்னைக் கேட்கலாம், ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று நீ அவர்களுக்கு இதனைச் சொல் என்றார். இதுதான் கர்த்தர் சொன்னது: “சில ஜனங்களை மரிப்பதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறேன், அந்த ஜனங்கள் மரிப்பார்கள், சில ஜனங்களை வாளால் கொல்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்த ஜனங்கள் வாளால் கொல்லப்படுவார்கள். நான் சில ஜனங்களை பசியால் மரிக்க தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்த ஜனங்கள் பசியால் மரிப்பார்கள். நான் சில ஜனங்களைச் சிறைபிடிக்கப்பட்டு அந்நிய நாட்டிற்குக் கொண்டுபோகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவர்கள் அந்நியநாடுகளில் கைதிகளாக இருப்பார்கள்.

Thiru Viviliam
‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று அவர்கள் கேட்கக்கூடும். அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: ⁽“ஆண்டவர் கூறுவது இதுவே:␢ சாவுக்குரியோர் சாவர்␢ வாளுக்குரியோர் வாளால் மாள்வர்;␢ பஞ்சத்துக்குரியோர் பஞ்சத்தால் மடிவர்;␢ நாடு கடத்தலுக்குரியோர் நாடு கடத்தப்படுவர்.”⁾⒫

Jeremiah 15:1Jeremiah 15Jeremiah 15:3

King James Version (KJV)
And it shall come to pass, if they say unto thee, Whither shall we go forth? then thou shalt tell them, Thus saith the LORD; Such as are for death, to death; and such as are for the sword, to the sword; and such as are for the famine, to the famine; and such as are for the captivity, to the captivity.

American Standard Version (ASV)
And it shall come to pass, when they say unto thee, Whither shall we go forth? then thou shalt tell them, Thus saith Jehovah: Such as are for death, to death; and such as are for the sword, to the sword; and such as are for the famine, to the famine; and such as are for captivity, to captivity.

Bible in Basic English (BBE)
And it will be, when they say to you, Where are we to go? then you are to say to them, The Lord has said, Such as are for death, to death; and such as are for the sword, to the sword; and such as are to be in need of food, to need of food; and such as are to be taken away prisoners, to be taken away.

Darby English Bible (DBY)
And it shall come to pass, if they say unto thee, Whither shall we go forth? then thou shalt tell them, Thus saith Jehovah: Such as are for death, to death; and such as are for the sword, to the sword; and such as are for the famine, to the famine; and such as are for captivity, to captivity.

World English Bible (WEB)
It shall happen, when they tell you, Where shall we go forth? then you shall tell them, Thus says Yahweh: Such as are for death, to death; and such as are for the sword, to the sword; and such as are for the famine, to the famine; and such as are for captivity, to captivity.

Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, when they say to thee, Whither do we go out? that thou hast said unto them, Thus said Jehovah: Those who `are’ for death — to death, And those who are for the sword, to the sword, And those who are for famine, to famine, And those who are for captivity, to captivity.

எரேமியா Jeremiah 15:2
எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.
And it shall come to pass, if they say unto thee, Whither shall we go forth? then thou shalt tell them, Thus saith the LORD; Such as are for death, to death; and such as are for the sword, to the sword; and such as are for the famine, to the famine; and such as are for the captivity, to the captivity.

וְהָיָ֛הwĕhāyâveh-ha-YA
כִּֽיkee
יֹאמְר֥וּyōʾmĕrûyoh-meh-ROO
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
אָ֣נָהʾānâAH-na
נֵצֵ֑אnēṣēʾnay-TSAY
וְאָמַרְתָּ֙wĕʾāmartāveh-ah-mahr-TA
אֲלֵיהֶ֜םʾălêhemuh-lay-HEM
כֹּֽהkoh
אָמַ֣רʾāmarah-MAHR
יְהוָ֗הyĕhwâyeh-VA
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
לַמָּ֤וֶתlammāwetla-MA-vet
לַמָּ֙וֶת֙lammāwetla-MA-VET
וַאֲשֶׁ֤רwaʾăšerva-uh-SHER
לַחֶ֙רֶב֙laḥerebla-HEH-REV
לַחֶ֔רֶבlaḥerebla-HEH-rev
וַאֲשֶׁ֤רwaʾăšerva-uh-SHER
לָֽרָעָב֙lārāʿābla-ra-AV
לָֽרָעָ֔בlārāʿābla-ra-AV
וַאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
לַשְּׁבִ֖יlaššĕbîla-sheh-VEE
לַשֶּֽׁבִי׃laššebîla-SHEH-vee

Cross Reference

எரேமியா 43:11
அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான்.

எரேமியா 14:12
அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக்கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்.

சகரியா 11:9
இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியனவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி,

எசேக்கியேல் 5:12
உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

எசேக்கியேல் 5:2
மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.

ஆமோஸ் 5:19
சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.

தானியேல் 9:12
எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:10
சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:3
அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.

எசேக்கியேல் 14:21
ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?

எரேமியா 24:9
அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், வசைச்சொல்லாகவும், சாபமாகவும் வைத்து,

ஏசாயா 24:18
அப்பொழுது, திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்,


Tags எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால் நீ அவர்களை நோக்கி சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும் பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும் சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு
Jeremiah 15:2 in Tamil Concordance Jeremiah 15:2 in Tamil Interlinear Jeremiah 15:2 in Tamil Image