Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 14:3 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 14 Jeremiah 14:3

எரேமியா 14:3
அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக்காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப்போய்த் தண்ணீர் கிடைக்காமல் வெறும் பாத்திரங்களோடு திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்களின் தலைவர்கள், வேலைக்காரர்களை நீர் கொண்டு வருவதற்காக அனுப்பினார்கள், வேலையாட்கள் நீர் தேக்கிவைத்திருக்கும் இடங்களுக்குச் சென்றனர். அங்கே எந்த தண்ணீரையும் கண்டுக்கொள்ளவில்லை. வேலைக்காரர்கள் காலி ஜாடிகளோடு திரும்பி வருவார்கள். எனவே அவர்கள், அவமானமும், சங்கடமும் அடைகின்றனர். அவர்கள் அவமானத்தால் தங்கள் தலையை மூடிக்கொள்ளுகின்றனர்.

Thiru Viviliam
⁽உயர்குடி மக்கள் தம் ஊழியரைத்␢ தண்ணீர் எடுக்க அனுப்புகின்றார்கள்;␢ அவர்கள் நீர்த்தேக்கங்களுக்குச்␢ செல்கின்றார்கள்;␢ அங்குத் தண்ணீர் இல்லை;␢ அவர்கள் வெறுங்குடங்களோடு␢ திரும்பி வருகின்றார்கள்;␢ வெட்கி நாணித் தங்கள் தலைகளை␢ மூடிக்கொள்கின்றார்கள்.⁾

Jeremiah 14:2Jeremiah 14Jeremiah 14:4

King James Version (KJV)
And their nobles have sent their little ones to the waters: they came to the pits, and found no water; they returned with their vessels empty; they were ashamed and confounded, and covered their heads.

American Standard Version (ASV)
And their nobles send their little ones to the waters: they come to the cisterns, and find no water; they return with their vessels empty; they are put to shame and confounded, and cover their heads.

Bible in Basic English (BBE)
Their great men have sent their servants for water: they come to the holes and there is no water to be seen; they come back with nothing in their vessels; they are overcome with shame and fear, covering their heads.

Darby English Bible (DBY)
And their nobles send their little ones for water: they come to the pits, they find no water; they return with their vessels empty; they are ashamed, they are confounded, and have covered their heads.

World English Bible (WEB)
Their nobles send their little ones to the waters: they come to the cisterns, and find no water; they return with their vessels empty; they are disappointed and confounded, and cover their heads.

Young’s Literal Translation (YLT)
And their honourable ones have sent their little ones to the water, They have come unto ditches, They have not found water, They have turned back — their vessels empty! They have been ashamed, And have blushed and covered their head.

எரேமியா Jeremiah 14:3
அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக்காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
And their nobles have sent their little ones to the waters: they came to the pits, and found no water; they returned with their vessels empty; they were ashamed and confounded, and covered their heads.

וְאַדִּ֣רֵיהֶ֔םwĕʾaddirêhemveh-ah-DEE-ray-HEM
שָׁלְח֥וּšolḥûshole-HOO
צְעִורֵיהֶ֖םṣĕʿiwrêhemtseh-eev-ray-HEM
לַמָּ֑יִםlammāyimla-MA-yeem
בָּ֣אוּbāʾûBA-oo
עַלʿalal
גֵּבִ֞יםgēbîmɡay-VEEM
לֹאlōʾloh
מָ֣צְאוּmāṣĕʾûMA-tseh-oo
מַ֗יִםmayimMA-yeem
שָׁ֤בוּšābûSHA-voo
כְלֵיהֶם֙kĕlêhemheh-lay-HEM
רֵיקָ֔םrêqāmray-KAHM
בֹּ֥שׁוּbōšûBOH-shoo
וְהָכְלְמ֖וּwĕhoklĕmûveh-hoke-leh-MOO
וְחָפ֥וּwĕḥāpûveh-ha-FOO
רֹאשָֽׁם׃rōʾšāmroh-SHAHM

Cross Reference

2 சாமுவேல் 15:30
தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்கைமூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.

சங்கீதம் 40:14
என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.

2 இராஜாக்கள் 18:31
எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய சீமைக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும்,

ஆமோஸ் 4:8
இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ண ΰ் குடிக்க பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீத்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 2:13
என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.

யோவேல் 1:20
வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது.

எரேமியா 20:11
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.

எரேமியா 14:4
தேசத்தின்மேல் மழை இல்லாததினால் கரை வெடித்திருக்கிறது பயிர்செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.

எரேமியா 2:26
திருடன் அகப்படுகிறபோது எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கடமையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து நீ என்னைப் பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.

ஏசாயா 45:16
விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து ஏகமாய்க் கலங்கிப்போவார்கள்.

சங்கீதம் 109:29
என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.

யோபு 6:20
தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடமட்டும் வந்து கலங்கிப்போகிறார்கள்.

எஸ்தர் 6:12
பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப் போனான்.

1 இராஜாக்கள் 18:5
ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்.

1 இராஜாக்கள் 17:7
தேசத்தில் மழைபெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.

2 சாமுவேல் 19:4
ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.


Tags அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள் இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக்காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள் வெட்கி நாணி தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்
Jeremiah 14:3 in Tamil Concordance Jeremiah 14:3 in Tamil Interlinear Jeremiah 14:3 in Tamil Image