ஏசாயா 63:11
ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறிவரப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?
Tamil Indian Revised Version
ஆகிலும் அவர் ஆரம்பநாட்களையும், மோசேயையும், தம்முடைய மக்களையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் கடலிலிருந்து ஏறச்செய்தவர் இப்பொழுது எங்கே?
Tamil Easy Reading Version
ஆனால், கர்த்தர் நீண்ட காலத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை இப்போதும் நினைவுகொள்கிறார். அவர் மோசேயையும் அவரது ஜனங்களையும் நினைவுகொள்கிறார். கடல்வழியாக ஜனங்களைக் கொண்டுவந்தவர் கர்த்தர் ஒருவரே. கர்த்தர் தம் மந்தைகளை (ஜனங்கள்) வழிநடத்த மேய்ப்பர்களைப் (தீர்க்கதரிசிகளை) பயன்படுத்தினார். ஆனால் இப்போது, மோசேயில் தன் ஆவியை வைத்தவர் எங்கே இருக்கிறார்?
Thiru Viviliam
⁽அப்பொழுது அவர் மக்கள்␢ மோசேயின் காலமாகிய␢ பண்டைய நாள்களை நினைவு கூர்ந்தனர்;␢ தம் மந்தையை மேய்ப்பரோடு␢ கடலினின்று கரையேற்றியவர் எங்கே?␢ அவருக்குத் தம் தூய ஆவியை␢ அருளியவர் எங்கே?⁾
King James Version (KJV)
Then he remembered the days of old, Moses, and his people, saying, Where is he that brought them up out of the sea with the shepherd of his flock? where is he that put his holy Spirit within him?
American Standard Version (ASV)
Then he remembered the days of old, Moses `and’ his people, `saying’, Where is he that brought them up out of the sea with the shepherds of his flock? where is he that put his holy Spirit in the midst of them?
Bible in Basic English (BBE)
Then the early days came to their minds, the days of Moses his servant: and they said, Where is he who made the keeper of his flock come up from the sea? where is he who put his holy spirit among them,
Darby English Bible (DBY)
But he remembered the days of old, Moses [and] his people: Where is he that brought them up out of the sea with the shepherds of his flock? Where is he that put his holy Spirit within him,
World English Bible (WEB)
Then he remembered the days of old, Moses [and] his people, [saying], Where is he who brought them up out of the sea with the shepherds of his flock? where is he who put his holy Spirit in the midst of them?
Young’s Literal Translation (YLT)
And He remembereth the days of old, Moses — his people. Where `is’ He who is bringing them up from the sea, The shepherd of his flock? Where `is’ He who is putting in its midst His Holy Spirit?
ஏசாயா Isaiah 63:11
ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறிவரப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?
Then he remembered the days of old, Moses, and his people, saying, Where is he that brought them up out of the sea with the shepherd of his flock? where is he that put his holy Spirit within him?
| וַיִּזְכֹּ֥ר | wayyizkōr | va-yeez-KORE | |
| יְמֵֽי | yĕmê | yeh-MAY | |
| עוֹלָ֖ם | ʿôlām | oh-LAHM | |
| מֹשֶׁ֣ה | mōše | moh-SHEH | |
| עַמּ֑וֹ | ʿammô | AH-moh | |
| אַיֵּ֣ה׀ | ʾayyē | ah-YAY | |
| הַֽמַּעֲלֵ֣ם | hammaʿălēm | ha-ma-uh-LAME | |
| מִיָּ֗ם | miyyām | mee-YAHM | |
| אֵ֚ת | ʾēt | ate | |
| רֹעֵ֣י | rōʿê | roh-A | |
| צֹאנ֔וֹ | ṣōʾnô | tsoh-NOH | |
| אַיֵּ֛ה | ʾayyē | ah-YAY | |
| הַשָּׂ֥ם | haśśām | ha-SAHM | |
| בְּקִרְבּ֖וֹ | bĕqirbô | beh-keer-BOH | |
| אֶת | ʾet | et | |
| ר֥וּחַ | rûaḥ | ROO-ak | |
| קָדְשֽׁוֹ׃ | qodšô | kode-SHOH |
Cross Reference
எண்ணாகமம் 11:17
அப்பொழுது நான் இறங்கிவந்து அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.
யாத்திராகமம் 14:22
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
யாத்திராகமம் 14:30
இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.
எண்ணாகமம் 11:25
கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார் அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
எண்ணாகமம் 11:29
அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.
சங்கீதம் 77:20
மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.
ஆகாய் 2:5
நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கை பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.
லுூக்கா 1:54
நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
சகரியா 4:6
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
தானியேல் 4:8
கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:
எரேமியா 2:6
என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
ஏசாயா 63:15
தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?
லேவியராகமம் 26:40
அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி,
எண்ணாகமம் 14:13
மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.
உபாகமம் 4:30
நீ வியாகுலப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசிநாட்களில் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால்,
நெகேமியா 9:20
அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல்ல ஆவியைக் கட்டளையிட்டீர், அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.
சங்கீதம் 25:6
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதிகாலமுதல் இருக்கிறதே.
சங்கீதம் 77:5
பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.
சங்கீதம் 89:47
என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன?
சங்கீதம் 143:5
பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.
ஏசாயா 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
யாத்திராகமம் 32:11
மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?
Tags ஆகிலும் அவர் பூர்வநாட்களையும் மோசேயையும் தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார் ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறிவரப்பண்ணினவர் இப்பொழுது எங்கே
Isaiah 63:11 in Tamil Concordance Isaiah 63:11 in Tamil Interlinear Isaiah 63:11 in Tamil Image