Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 55:8 in Tamil

Home Bible Isaiah Isaiah 55 Isaiah 55:8

ஏசாயா 55:8
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்கிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “உங்களது சிந்தனைகள் எனது சிந்தனைகளைப் போன்று இல்லை. உனது வழிகள் எனது வழிகளைப் போன்றில்லை.

Thiru Viviliam
⁽என் எண்ணங்கள்␢ உங்கள் எண்ணங்கள் அல்ல,␢ உங்கள் வழிமுறைகள்␢ என் வழிமுறைகள் அல்ல,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Title
ஜனங்கள் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது

Isaiah 55:7Isaiah 55Isaiah 55:9

King James Version (KJV)
For my thoughts are not your thoughts, neither are your ways my ways, saith the LORD.

American Standard Version (ASV)
For my thoughts are not your thoughts, neither are your ways my ways, saith Jehovah.

Bible in Basic English (BBE)
For my thoughts are not your thoughts, or your ways my ways, says the Lord.

Darby English Bible (DBY)
For my thoughts are not your thoughts, neither are your ways my ways, saith Jehovah.

World English Bible (WEB)
For my thoughts are not your thoughts, neither are your ways my ways, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
For not My thoughts `are’ your thoughts, Nor your ways My ways, — an affirmation of Jehovah,

ஏசாயா Isaiah 55:8
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
For my thoughts are not your thoughts, neither are your ways my ways, saith the LORD.

כִּ֣יkee
לֹ֤אlōʾloh
מַחְשְׁבוֹתַי֙maḥšĕbôtaymahk-sheh-voh-TA
מַחְשְׁב֣וֹתֵיכֶ֔םmaḥšĕbôtêkemmahk-sheh-VOH-tay-HEM
וְלֹ֥אwĕlōʾveh-LOH
דַרְכֵיכֶ֖םdarkêkemdahr-hay-HEM
דְּרָכָ֑יdĕrākāydeh-ra-HAI
נְאֻ֖םnĕʾumneh-OOM
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

சங்கீதம் 92:5
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

சங்கீதம் 40:5
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச்சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

ஓசியா 14:9
இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.

எசேக்கியேல் 18:29
இஸ்ரவேல் வம்சத்தாரோ: ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, என் வழிகள் செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.

ஏசாயா 53:6
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

நீதிமொழிகள் 25:3
வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.

சங்கீதம் 25:10
கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.

தானியேல் 4:37
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.

நீதிமொழிகள் 21:8
குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.

2 சாமுவேல் 7:19
கர்த்தராகிய ஆண்டவரே இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்சகாரியமாயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற தேவரீர் உம்முடைய அடியானுடைய வீட்டைக்குறித்து, வெகுதூரமாயிருக்கும் காலத்துச்செய்தியை மனுஷர் முறைமையாய்ச்சொன்னீரே.

எரேமியா 3:1
ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்
Isaiah 55:8 in Tamil Concordance Isaiah 55:8 in Tamil Interlinear Isaiah 55:8 in Tamil Image