Isaiah 52 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽விழித்தெழு, விழித்தெழு, சீயோனே,␢ உன் ஆற்றலை அணிந்து கொள்;␢ திரு நகர் எருசலேமே, உன்␢ அழகுறு ஆடைகளை அணிந்துகொள்;␢ விருத்தசேதனம் செய்யாதவனும்␢ தீட்டுப்பட்டவனும்␢ உன்னிடையே இனி வரவேமாட்டான்.⁾2 ⁽சிறைப்பட்ட எருசலேமே,␢ புழுதியைத் தட்டிவிட்டு எழுந்துநில்;␢ அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே,␢ உன் கழுத்திலுள்ள கட்டுகளை␢ அவிழ்த்துவிடு.⁾3 ஆண்டவர் கூறுவது இதுவே: விலையின்றி விற்கப்பட்டீர்கள்; பணமின்றி மீட்கப்படுவீர்கள்.4 ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்; அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான்.5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர். ஈட்டுத் தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்; அவர்களை ஆளுவோர் தற்பெருமை பேசுகின்றனர்; எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகிறது, என்கிறார் ஆண்டவர்.6 ஆதலால் என் மக்கள் எனது பெயரை அறிந்து கொள்வார்கள். இதைச் சொல்லுகிறவர் நானே என்பதை அந்நாளில் உணர்ந்து கொள்வார்கள்; இதோ, நான் இங்கே இருக்கின்றேன்.7 ⁽நற்செய்தியை அறிவிக்கவும்,␢ நல்வாழ்வைப் பலப்படுத்தவும்␢ நலம்தரும் செய்தியை உரைக்கவும்,␢ விடுதலையைப் பறைசாற்றவும்,␢ சீயோனை நோக்கி, ‘உன் கடவுள்␢ அரசாளுகின்றார்’ என்று கூறவும்␢ வருவோனின் பாதங்கள் மலைகள்மேல்␢ எத்துணை அழகாய் இருக்கின்றன!⁾8 ⁽இதோ, உன் சாமக் காவலர்␢ குரல் எழுப்புகின்றனர்;␢ அவர்கள் அக்களித்து ஒருங்கே␢ ஆரவாரம் செய்கின்றனர்;␢ ஆண்டவர் சீயோனுக்குத்␢ திரும்பி வருவதை அவர்கள்␢ தம் கண்களாலேயே காண்பர்.⁾9 ⁽எருசலேமின் பாழ் இடங்களே,␢ ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்;␢ ஆண்டவர் தம் மக்களுக்கு␢ ஆறுதல் அளித்துள்ளார்;␢ எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.⁾10 ⁽பிறஇனத்தார் அனைவரின்␢ கண்களும் காண␢ ஆண்டவர் தம் தூய புயத்தினைத்␢ திறந்து காட்டியுள்ளார்;␢ மண்ணுலகின் எல்லைகள் யாவும்␢ நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.⁾11 ⁽திரும்பிச் செல்லுங்கள்,␢ திரும்பிச் செல்லுங்கள்;␢ அங்கிருந்து வெளியேறுங்கள்;␢ தீட்டானதைத் தொடாதீர்கள்;␢ ஆண்டவரின் கலங்களை␢ ஏந்திச்செல்வோரே,␢ அந்நாட்டினின்று வெளியேறுங்கள்;␢ உங்களையும் தூய்மைப்படுத்திக்␢ கொள்ளுங்கள்.⁾12 ⁽நீங்கள் அவசரப்பட்டு␢ வெளியேறப் போவதில்லை;␢ தப்பியோடுவது போல்␢ செல்வதுமில்லை;␢ ஏனெனில், ஆண்டவர்␢ உங்கள்முன்னே செல்வார்;␢ இஸ்ரயேலின் கடவுள்␢ உங்கள்பின்னே பாதுகாப்பாய் இருப்பார்.⁾13 ⁽இதோ, என் ஊழியர் சிறப்படைவார்;␢ அவர் மேன்மைப்படுத்தப்பட்டு,␢ உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.⁾14 ⁽அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்;␢ அவரது தோற்றம் பெரிதும்␢ உருக்குலைந்ததால்␢ மனித சாயலே␢ அவருக்கு இல்லாதிருந்தது;␢ மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.⁾15 ⁽அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை␢ அதிர்ச்சிக்குள்ளாக்குவார்;␢ அரசர்களும் அவரை முன்னிட்டு␢ வாய்பொத்தி நிற்பர்;␢ ஏனெனில் தங்களுக்குச்␢ சொல்லப் படாததை அவர்கள் காண்பர்;␢ தாங்கள் கேள்விப்படாததை␢ அவர்கள் புரிந்து கொள்வர்.⁾Isaiah 52 ERV IRV TRV