அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
யுத்தத்துக்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான்.
நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.
இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்.
அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.
அதற்கு ரப்சாக்கே உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், அலங்கத்திலே தங்கியிருக்கிற புருஷரண்டக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும், உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப்பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.
How | וְאֵ֣יךְ | wĕʾêk | veh-AKE |
then wilt thou turn away | תָּשִׁ֗יב | tāšîb | ta-SHEEV |
אֵ֠ת | ʾēt | ate | |
face the | פְּנֵ֨י | pĕnê | peh-NAY |
captain of | פַחַ֥ת | paḥat | fa-HAHT |
one | אַחַ֛ד | ʾaḥad | ah-HAHD |
servants, master's my | עַבְדֵ֥י | ʿabdê | av-DAY |
of least the | אֲדֹנִ֖י | ʾădōnî | uh-doh-NEE |
of | הַקְטַנִּ֑ים | haqṭannîm | hahk-ta-NEEM |
and put thy trust | וַתִּבְטַ֤ח | wattibṭaḥ | va-teev-TAHK |
on | לְךָ֙ | lĕkā | leh-HA |
Egypt | עַל | ʿal | al |
for chariots | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
and for horsemen? | לְרֶ֖כֶב | lĕrekeb | leh-REH-hev |
וּלְפָרָשִֽׁים׃ | ûlĕpārāšîm | oo-leh-fa-ra-SHEEM |