ஓசியா 4:3
இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.
Tamil Indian Revised Version
இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் துவண்டுபோகும்; கடலின் உயிரினங்களும் வாரிக்கொள்ளப்படும்.
Tamil Easy Reading Version
எனவே. அந்த நாடானது ஒரு மனிதன் செத்தவர்களுக்காக புலம்புவதுபோல் இருக்கிறது, அதன் ஜனங்கள் அனைவரும் பலவீனமுடையவர்களாக இருக்கின்றனர். காடுகளில் உள்ள மிருகங்களும் வானத்து பறவைகளும்கடலிலுள்ள மீன்களும் மரித்துக்கொண்டிருக்கின்றன.
Thiru Viviliam
⁽ஆதலால் நாடு புலம்புகின்றது;␢ அதில் குடியிருப்பன எல்லாம்␢ நலிந்து போகின்றன;␢ காட்டு விலங்குகளும்,␢ வானத்துப் பறவைகளும்,␢ கடல்வாழ் மீன்களும்கூட␢ அழிந்து போகின்றன.⁾
King James Version (KJV)
Therefore shall the land mourn, and every one that dwelleth therein shall languish, with the beasts of the field, and with the fowls of heaven; yea, the fishes of the sea also shall be taken away.
American Standard Version (ASV)
Therefore shall the land mourn, and every one that dwelleth therein shall languish, with the beasts of the field and the birds of the heavens; yea, the fishes of the sea also shall be taken away.
Bible in Basic English (BBE)
Because of this the land will be dry, and everyone living in it will be wasted away, with the beasts of the field and the birds of heaven; even the fishes of the sea will be taken away.
Darby English Bible (DBY)
For this shall the land mourn, and every one that dwelleth therein shall languish, with the beasts of the field, and with the fowl of the heavens, yea, the fishes of the sea also shall be taken away.
World English Bible (WEB)
Therefore the land will mourn, And everyone who dwells therein will waste away. All living things in her, Even the animals of the field and the birds of the sky; Yes, the fish of the sea also die.
Young’s Literal Translation (YLT)
Therefore mourn doth the land, And weak is every dweller in it, With the beast of the field, And with the fowl of the heavens, And the fishes of the sea — they are removed.
ஓசியா Hosea 4:3
இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.
Therefore shall the land mourn, and every one that dwelleth therein shall languish, with the beasts of the field, and with the fowls of heaven; yea, the fishes of the sea also shall be taken away.
| עַל | ʿal | al | |
| כֵּ֣ן׀ | kēn | kane | |
| תֶּאֱבַ֣ל | teʾĕbal | teh-ay-VAHL | |
| הָאָ֗רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וְאֻמְלַל֙ | wĕʾumlal | veh-oom-LAHL | |
| כָּל | kāl | kahl | |
| יוֹשֵׁ֣ב | yôšēb | yoh-SHAVE | |
| בָּ֔הּ | bāh | ba | |
| בְּחַיַּ֥ת | bĕḥayyat | beh-ha-YAHT | |
| הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH | |
| וּבְע֣וֹף | ûbĕʿôp | oo-veh-OFE | |
| הַשָּׁמָ֑יִם | haššāmāyim | ha-sha-MA-yeem | |
| וְגַם | wĕgam | veh-ɡAHM | |
| דְּגֵ֥י | dĕgê | deh-ɡAY | |
| הַיָּ֖ם | hayyām | ha-YAHM | |
| יֵאָסֵֽפוּ׃ | yēʾāsēpû | yay-ah-say-FOO |
Cross Reference
செப்பனியா 1:3
மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும் இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆமோஸ் 5:16
ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
எசேக்கியேல் 38:20
என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலிலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
எரேமியா 4:27
தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 4:25
பின்னும் நான் பார்ககும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
நாகூம் 1:4
அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார். பாசனும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.
ஆமோஸ் 8:8
இதினிமித்தம் தேசம் அதிரவும், அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ?
ஆமோஸ் 1:2
கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்.
யோவேல் 1:10
வயல்வெளி பாழாயிற்று, பூமி துக்கங்கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சரசம் வற்றிப்போயிற்று; எண்ணெய் மாண்டுபோயிற்று.
எரேமியா 12:4
எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.
ஏசாயா 33:9
தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது, சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.
ஏசாயா 24:4
தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்.
Tags இதினிமித்தம் தேசம் புலம்பும் அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும் கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்
Hosea 4:3 in Tamil Concordance Hosea 4:3 in Tamil Interlinear Hosea 4:3 in Tamil Image