Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 12:5 in Tamil

Home Bible Hebrews Hebrews 12 Hebrews 12:5

எபிரெயர் 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

Tamil Indian Revised Version
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

Tamil Easy Reading Version
நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் உங்கள் ஆறுதலுக்காகவே பேசுகிறார். நீங்கள் அந்த வார்த்தைகளை மறந்துவிட்டீர்கள். “என் மகனே! கர்த்தர் உன்னைத் தண்டிக்கும்போது அதனை அற்பமாக எண்ணாதே. அவர் உன்னைத் திருத்தும்போது உன் முயற்சியைக் கைவிட்டு விடாதே.

Thiru Viviliam
தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: ⁽“பிள்ளாய், ஆண்டவர் உன்னைக்␢ கண்டித்துத் திருத்துவதை␢ வேண்டாம் எனத் தள்ளிவிடாதே.␢ அவர் கண்டிக்கும்போது␢ தளர்ந்து போகாதே.”⁾

Hebrews 12:4Hebrews 12Hebrews 12:6

King James Version (KJV)
And ye have forgotten the exhortation which speaketh unto you as unto children, My son, despise not thou the chastening of the Lord, nor faint when thou art rebuked of him:

American Standard Version (ASV)
and ye have forgotten the exhortation which reasoneth with you as with sons, My son, regard not lightly the chastening of the Lord, Nor faint when thou art reproved of him;

Bible in Basic English (BBE)
And you have not kept in mind the word which says to you as to sons, My son, do not make little of the Lord’s punishment, and do not give up hope when you are judged by him;

Darby English Bible (DBY)
And ye have quite forgotten the exhortation which speaks to you as to sons: My son, despise not [the] chastening of [the] Lord, nor faint [when] reproved by him;

World English Bible (WEB)
and you have forgotten the exhortation which reasons with you as with children, “My son, don’t take lightly the chastening of the Lord, Nor faint when you are reproved by him;

Young’s Literal Translation (YLT)
and ye have forgotten the exhortation that doth speak fully with you as with sons, `My son, be not despising chastening of the Lord, nor be faint, being reproved by Him,

எபிரெயர் Hebrews 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
And ye have forgotten the exhortation which speaketh unto you as unto children, My son, despise not thou the chastening of the Lord, nor faint when thou art rebuked of him:

καὶkaikay
ἐκλέλησθεeklelēstheake-LAY-lay-sthay
τῆςtēstase
παρακλήσεωςparaklēseōspa-ra-KLAY-say-ose
ἥτιςhētisAY-tees
ὑμῖνhyminyoo-MEEN
ὡςhōsose
υἱοῖςhuioisyoo-OOS
διαλέγεταιdialegetaithee-ah-LAY-gay-tay
Υἱέhuieyoo-A
μουmoumoo
μὴmay
ὀλιγώρειoligōreioh-lee-GOH-ree
παιδείαςpaideiaspay-THEE-as
κυρίουkyrioukyoo-REE-oo
μηδὲmēdemay-THAY
ἐκλύουeklyouake-LYOO-oo
ὑπ'hypyoop
αὐτοῦautouaf-TOO
ἐλεγχόμενος·elenchomenosay-layng-HOH-may-nose

Cross Reference

நீதிமொழிகள் 3:11
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

யோபு 5:17
இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

1 கொரிந்தியர் 11:32
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.

உபாகமம் 4:9
ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்,

சங்கீதம் 94:12
கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,

சங்கீதம் 119:83
புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

சங்கீதம் 119:109
என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.

எபிரெயர் 12:3
ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்

யாக்கோபு 1:12
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

2 கொரிந்தியர் 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்

2 கொரிந்தியர் 4:8
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;

எரேமியா 31:18
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.

சங்கீதம் 119:75
கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

சங்கீதம் 119:16
உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.

யோசுவா 7:7
யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படி எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.

2 சாமுவேல் 6:7
அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

1 நாளாகமம் 13:9
அவர்கள் கீதோனின் களமட்டும்வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.

1 நாளாகமம் 15:12
அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.

யோபு 34:31
நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.

சங்கீதம் 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

சங்கீதம் 118:18
கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.

எபிரெயர் 12:7
நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?

லுூக்கா 24:8
அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து,

லுூக்கா 24:6
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.

மத்தேயு 16:9
இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;

நீதிமொழிகள் 4:5
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.

நீதிமொழிகள் 3:1
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.


Tags அன்றியும் என் மகனே கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே
Hebrews 12:5 in Tamil Concordance Hebrews 12:5 in Tamil Interlinear Hebrews 12:5 in Tamil Image