ஆதியாகமம் 12:18
அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?
Tamil Indian Revised Version
அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன்னுடைய மனைவி என்று நீ எனக்குத் தெரிவிக்காமல் போனதென்ன?
Tamil Easy Reading Version
எனவே பார்வோன் ஆபிராமை அழைத்தான். அவன், “நீ எனக்கு மிகக் கெட்ட காரியத்தைச் செய்துள்ளாய்! சாராய் உன் மனைவி என்று சொல்லாமல்,
Thiru Viviliam
பார்வோன் ஆபிராமை அழைத்து அவரிடம், “நீ எனக்கு இப்படிச் செய்து விட்டாயே! அவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை?
King James Version (KJV)
And Pharaoh called Abram and said, What is this that thou hast done unto me? why didst thou not tell me that she was thy wife?
American Standard Version (ASV)
And Pharaoh called Abram, and said, What is this that thou hast done unto me? why didst thou not tell me that she was thy wife?
Bible in Basic English (BBE)
Then Pharaoh sent for Abram, and said, What have you done to me? why did you not say that she was your wife?
Darby English Bible (DBY)
And Pharaoh called Abram, and said, What is this thou hast done to me? Why didst thou not tell me that she was thy wife?
Webster’s Bible (WBT)
And Pharaoh called Abram, and said, What is this that thou hast done to me? why didst thou not tell me that she is thy wife?
World English Bible (WEB)
Pharaoh called Abram, and said, “What is this that you have done to me? Why didn’t you tell me that she was your wife?
Young’s Literal Translation (YLT)
And Pharaoh calleth for Abram, and saith, `What `is’ this thou hast done to me? why hast thou not declared to me that she `is’ thy wife?
ஆதியாகமம் Genesis 12:18
அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?
And Pharaoh called Abram and said, What is this that thou hast done unto me? why didst thou not tell me that she was thy wife?
| וַיִּקְרָ֤א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| פַרְעֹה֙ | parʿōh | fahr-OH | |
| לְאַבְרָ֔ם | lĕʾabrām | leh-av-RAHM | |
| וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מַה | ma | ma | |
| זֹּ֖את | zōt | zote | |
| עָשִׂ֣יתָ | ʿāśîtā | ah-SEE-ta | |
| לִּ֑י | lî | lee | |
| לָ֚מָּה | lāmmâ | LA-ma | |
| לֹֽא | lōʾ | loh | |
| הִגַּ֣דְתָּ | higgadtā | hee-ɡAHD-ta | |
| לִּ֔י | lî | lee | |
| כִּ֥י | kî | kee | |
| אִשְׁתְּךָ֖ | ʾištĕkā | eesh-teh-HA | |
| הִֽוא׃ | hiw | heev |
Cross Reference
ஆதியாகமம் 20:9
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
நீதிமொழிகள் 21:1
ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
1 சாமுவேல் 14:43
அப்பொழுது சவுல் யோனத்தானைப்பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.
யோசுவா 7:19
அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான்.
யாத்திராகமம் 32:21
பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான்.
ஆதியாகமம் 44:15
யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.
ஆதியாகமம் 31:26
அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை?
ஆதியாகமம் 26:9
அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.
ஆதியாகமம் 4:10
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
ஆதியாகமம் 3:13
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
Tags அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய் இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன
Genesis 12:18 in Tamil Concordance Genesis 12:18 in Tamil Interlinear Genesis 12:18 in Tamil Image