Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 3:23 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 3 Ezekiel 3:23

எசேக்கியேல் 3:23
அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.

Tamil Indian Revised Version
அப்படியே நான் எழுந்திருந்து, சமவெளிக்கு புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியின்அருகிலே நான் கண்ட மகிமைக்குச் சரியாக அங்கே கர்த்தருடைய மகிமை வெளிப்பட்டது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.

Tamil Easy Reading Version
எனவே, நான் எழுந்து பள்ளத்தாக்குக்குப் போனேன். கர்த்தருடைய மகிமை அங்கே இருந்தது. கேபார் ஆற்றங்கரையில் இருந்தது போன்றிருந்தது. எனவே, நான் தரையில் என் முகம் படும்படிக் குனிந்தேன்.

Thiru Viviliam
நானும் எழுந்து சமவெளிக்குச் சென்றேன். இதோ ஆண்டவரின் மாட்சி, கெபார் ஆற்றோரம் நான் கண்டதைப் போன்றே விளங்கிற்று. நான் முகம்குப்புற விழுந்தேன்.

Ezekiel 3:22Ezekiel 3Ezekiel 3:24

King James Version (KJV)
Then I arose, and went forth into the plain: and, behold, the glory of the LORD stood there, as the glory which I saw by the river of Chebar: and I fell on my face.

American Standard Version (ASV)
Then I arose, and went forth into the plain: and, behold, the glory of Jehovah stood there, as the glory which I saw by the river Chebar; and I fell on my face.

Bible in Basic English (BBE)
Then I got up and went out into the valley; and I saw the glory of the Lord resting there as I had seen it by the river Chebar; and I went down on my face.

Darby English Bible (DBY)
And I arose, and went forth into the valley, and behold, the glory of Jehovah stood there, like the glory which I saw by the river Chebar; and I fell on my face.

World English Bible (WEB)
Then I arose, and went forth into the plain: and, behold, the glory of Yahweh stood there, as the glory which I saw by the river Chebar; and I fell on my face.

Young’s Literal Translation (YLT)
And I rise and go forth unto the valley, and lo, there the honour of Jehovah is standing as the honour that I had seen by the river Chebar, and I fall on my face.

எசேக்கியேல் Ezekiel 3:23
அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.
Then I arose, and went forth into the plain: and, behold, the glory of the LORD stood there, as the glory which I saw by the river of Chebar: and I fell on my face.

וָאָקוּם֮wāʾāqûmva-ah-KOOM
וָאֵצֵ֣אwāʾēṣēʾva-ay-TSAY
אֶלʾelel
הַבִּקְעָה֒habbiqʿāhha-beek-AH
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
שָׁ֤םšāmshahm
כְּבוֹדkĕbôdkeh-VODE
יְהוָה֙yĕhwāhyeh-VA
עֹמֵ֔דʿōmēdoh-MADE
כַּכָּב֕וֹדkakkābôdka-ka-VODE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
רָאִ֖יתִיrāʾîtîra-EE-tee
עַלʿalal
נְהַרnĕharneh-HAHR
כְּבָ֑רkĕbārkeh-VAHR
וָאֶפֹּ֖לwāʾeppōlva-eh-POLE
עַלʿalal
פָּנָֽי׃pānāypa-NAI

Cross Reference

எசேக்கியேல் 1:28
மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:55
அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு;

வெளிப்படுத்தின விசேஷம் 5:14
அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:8
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:

வெளிப்படுத்தின விசேஷம் 4:10
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:

வெளிப்படுத்தின விசேஷம் 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

தானியேல் 10:8
நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.

தானியேல் 8:17
அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்னை நோக்கி: மனுபுத்திரனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான்.

எசேக்கியேல் 10:18
கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.

எசேக்கியேல் 9:3
அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனைக் கூப்பிட்டு,

எசேக்கியேல் 1:1
முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.

எண்ணாகமம் 16:42
சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்துக்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது.

எண்ணாகமம் 16:19
அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.


Tags அப்படியே நான் எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன் இதோ கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமை விளங்கினது அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்
Ezekiel 3:23 in Tamil Concordance Ezekiel 3:23 in Tamil Interlinear Ezekiel 3:23 in Tamil Image