எசேக்கியேல் 24:9
ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தம்சிந்திய நகரத்திற்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியச்செய்வேன்.
Tamil Easy Reading Version
“‘எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: கொலைக்காரர்கள் நிறைந்த இந்நகரத்துக்கு இது கேடாகும்! நான் நெருப்புக்காக நிறைய விறகுகளை அடுக்குவேன்.
Thiru Viviliam
⁽எனவே, தலைவராகிய ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகிறார்:␢ குருதி சிந்திய நகருக்கு ஐயோ கேடு!␢ விறகுகளை நானும்␢ உயரமாய் அடுக்குவேன்.⁾
King James Version (KJV)
Therefore thus saith the Lord GOD; Woe to the bloody city! I will even make the pile for fire great.
American Standard Version (ASV)
Therefore thus saith the Lord Jehovah: Woe to the bloody city! I also will make the pile great.
Bible in Basic English (BBE)
For this cause the Lord has said: A curse is on the town of blood! and I will make great the burning mass.
Darby English Bible (DBY)
Therefore thus saith the Lord Jehovah: Woe to the bloody city! I also will make the pile great.
World English Bible (WEB)
Therefore thus says the Lord Yahweh: Woe to the bloody city! I also will make the pile great.
Young’s Literal Translation (YLT)
Therefore, thus said the Lord Jehovah: Wo `to’ the city of blood, yea, I — I make great the pile.
எசேக்கியேல் Ezekiel 24:9
ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.
Therefore thus saith the Lord GOD; Woe to the bloody city! I will even make the pile for fire great.
| לָכֵ֗ן | lākēn | la-HANE | |
| כֹּ֤ה | kō | koh | |
| אָמַר֙ | ʾāmar | ah-MAHR | |
| אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI | |
| יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE | |
| א֖וֹי | ʾôy | oy | |
| עִ֣יר | ʿîr | eer | |
| הַדָּמִ֑ים | haddāmîm | ha-da-MEEM | |
| גַּם | gam | ɡahm | |
| אֲנִ֖י | ʾănî | uh-NEE | |
| אַגְדִּ֥יל | ʾagdîl | aɡ-DEEL | |
| הַמְּדוּרָֽה׃ | hammĕdûrâ | ha-meh-doo-RA |
Cross Reference
ஆபகூக் 2:12
இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ!
எசேக்கியேல் 24:6
இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது.
ஏசாயா 30:33
தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:8
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 16:19
அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 16:6
அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 14:20
நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.
யூதா 1:7
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
2 பேதுரு 3:7
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
2 தெசலோனிக்கேயர் 1:8
கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
லுூக்கா 13:34
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
நாகூம் 3:1
இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.
எசேக்கியேல் 22:31
ஆகையால், நான் அவர்கள்மேல் என் கோபத்தை ஊற்றி, என் மூர்க்கத்தின் அக்கினியால் அவர்களை நிர்மூலமாக்கி, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்றார்.
எசேக்கியேல் 22:19
ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் எல்லாரும் களிம்பாய்ப் போனபடியினால், இதோ, நான் உங்களை எருசலேமுக்குள் சேர்ப்பேன்.
ஏசாயா 31:9
அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார்.
Tags ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்
Ezekiel 24:9 in Tamil Concordance Ezekiel 24:9 in Tamil Interlinear Ezekiel 24:9 in Tamil Image