Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 33:11 in Tamil

Home Bible Exodus Exodus 33 Exodus 33:11

யாத்திராகமம் 33:11
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.

Tamil Indian Revised Version
ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான்.

Tamil Easy Reading Version
இவ்வாறு கர்த்தர் மோசேயுடன் நேருக்கு நேராக நின்று பேசினார். ஒரு மனிதன் தன் நண்பனிடம் பேசுவதுபோல கர்த்தர் மோசேயுடன் பேசினார். கர்த்தரிடம் பேசியபிறகு, மோசே தங்குமிடத்துக்குத் திரும்பினான். ஆனால் அவனது உதவியாளன் எப்போதும் கூடரத்திலேயே இருந்தான். அந்த உதவியாளன் நூனின் மகனாகிய யோசுவா என்பவனாவான்.

Thiru Viviliam
ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டகலாமல் இருப்பார்.

Exodus 33:10Exodus 33Exodus 33:12

King James Version (KJV)
And the LORD spake unto Moses face to face, as a man speaketh unto his friend. And he turned again into the camp: but his servant Joshua, the son of Nun, a young man, departed not out of the tabernacle.

American Standard Version (ASV)
And Jehovah spake unto Moses face to face, as a man speaketh unto his friend. And he turned again into the camp: but his minister Joshua, the son of Nun, a young man, departed not out of the Tent.

Bible in Basic English (BBE)
And the Lord had talk with Moses face to face, as a man may have talk with his friend. And when Moses came back to the tents, his servant, the young man Joshua, the son of Nun, did not come away from the Tent.

Darby English Bible (DBY)
And Jehovah spoke with Moses face to face, as a man speaks with his friend. And he returned to the camp; but his attendant, Joshua the son of Nun, a young man, departed not from within the tent.

Webster’s Bible (WBT)
And the LORD spoke to Moses face to face, as a man speaketh to his friend. And he turned again into the camp; but his servant Joshua the son of Nun, a young man, departed not out of the tabernacle.

World English Bible (WEB)
Yahweh spoke to Moses face to face, as a man speaks to his friend. He turned again into the camp, but his servant Joshua, the son of Nun, a young man, didn’t depart out of the Tent.

Young’s Literal Translation (YLT)
And Jehovah hath spoken unto Moses face unto face, as a man speaketh unto his friend; and he hath turned back unto the camp, and his minister Joshua, son of Nun, a youth, departeth not out of the tent.

யாத்திராகமம் Exodus 33:11
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
And the LORD spake unto Moses face to face, as a man speaketh unto his friend. And he turned again into the camp: but his servant Joshua, the son of Nun, a young man, departed not out of the tabernacle.

וְדִבֶּ֨רwĕdibberveh-dee-BER
יְהוָ֤הyĕhwâyeh-VA
אֶלʾelel
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
פָּנִ֣יםpānîmpa-NEEM
אֶלʾelel
פָּנִ֔יםpānîmpa-NEEM
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
יְדַבֵּ֥רyĕdabbēryeh-da-BARE
אִ֖ישׁʾîšeesh
אֶלʾelel
רֵעֵ֑הוּrēʿēhûray-A-hoo
וְשָׁב֙wĕšābveh-SHAHV
אֶלʾelel
הַֽמַּחֲנֶ֔הhammaḥăneha-ma-huh-NEH
וּמְשָׁ֨רְת֜וֹûmĕšārĕtôoo-meh-SHA-reh-TOH
יְהוֹשֻׁ֤עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
בִּןbinbeen
נוּן֙nûnnoon
נַ֔עַרnaʿarNA-ar
לֹ֥אlōʾloh
יָמִ֖ישׁyāmîšya-MEESH
מִתּ֥וֹךְmittôkMEE-toke
הָאֹֽהֶל׃hāʾōhelha-OH-hel

Cross Reference

உபாகமம் 34:10
மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசமனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,

எண்ணாகமம் 12:8
நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார்.

யாத்திராகமம் 32:17
ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

யாத்திராகமம் 24:13
அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,

யாத்திராகமம் 17:9
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.

ஆதியாகமம் 32:30
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

யாக்கோபு 2:23
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.

யோவான் 15:14
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

யோவான் 11:11
இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான். நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.

யோவான் 3:29
மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.

ஏசாயா 42:8
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

யோபு 16:21
ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்.

2 நாளாகமம் 20:7
எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?

உபாகமம் 5:4
கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார்.

யாத்திராகமம் 33:9
மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.


Tags ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார் பின்பு அவன் பாளயத்துக்குத் திரும்பினான் நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்
Exodus 33:11 in Tamil Concordance Exodus 33:11 in Tamil Interlinear Exodus 33:11 in Tamil Image