யாத்திராகமம் 20:20
மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.
Tamil Indian Revised Version
மோசே மக்களை நோக்கி; பயப்படாமல் இருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடி அவரைக்குறித்த பயம் உங்களுடைய முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.
Tamil Easy Reading Version
மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள்! கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படியாக வந்திருக்கிறார். நீங்கள் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதினிமித்தமாக நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்கள்” என்றான்.
Thiru Viviliam
மோசே மக்களை நோக்கி, “அஞ்சாதீர்கள்; கடவுள்மீது உங்களுக்கு ஏற்படும் அச்சத்தால் நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்களா என்று உங்களைச் சோதித்தறியவே அவர் இவ்வாறு தோன்றினார்” என்றார்.
King James Version (KJV)
And Moses said unto the people, Fear not: for God is come to prove you, and that his fear may be before your faces, that ye sin not.
American Standard Version (ASV)
And Moses said unto the people, Fear not: for God is come to prove you, and that his fear may be before you, that ye sin not.
Bible in Basic English (BBE)
And Moses said to the people, Have no fear: for God has come to put you to the test, so that fearing him you may be kept from sin.
Darby English Bible (DBY)
And Moses said to the people, Fear not; for God is come to prove you, and that his fear may be before you, that ye sin not.
Webster’s Bible (WBT)
And Moses said to the people, Fear not: for God is come to prove you, and that his fear may be before your faces, that ye sin not.
World English Bible (WEB)
Moses said to the people, “Don’t be afraid, for God has come to test you, and that his fear may be before you, that you won’t sin.”
Young’s Literal Translation (YLT)
And Moses saith unto the people, `Fear not, for to try you hath God come, and in order that His fear may be before your faces — that ye sin not.’
யாத்திராகமம் Exodus 20:20
மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.
And Moses said unto the people, Fear not: for God is come to prove you, and that his fear may be before your faces, that ye sin not.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מֹשֶׁ֣ה | mōše | moh-SHEH | |
| אֶל | ʾel | el | |
| הָעָם֮ | hāʿām | ha-AM | |
| אַל | ʾal | al | |
| תִּירָאוּ֒ | tîrāʾû | tee-ra-OO | |
| כִּ֗י | kî | kee | |
| לְבַֽעֲבוּר֙ | lĕbaʿăbûr | leh-va-uh-VOOR | |
| נַסּ֣וֹת | nassôt | NA-sote | |
| אֶתְכֶ֔ם | ʾetkem | et-HEM | |
| בָּ֖א | bāʾ | ba | |
| הָֽאֱלֹהִ֑ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| וּבַֽעֲב֗וּר | ûbaʿăbûr | oo-va-uh-VOOR | |
| תִּֽהְיֶ֧ה | tihĕye | tee-heh-YEH | |
| יִרְאָת֛וֹ | yirʾātô | yeer-ah-TOH | |
| עַל | ʿal | al | |
| פְּנֵיכֶ֖ם | pĕnêkem | peh-nay-HEM | |
| לְבִלְתִּ֥י | lĕbiltî | leh-veel-TEE | |
| תֶֽחֱטָֽאוּ׃ | teḥĕṭāʾû | TEH-hay-TA-oo |
Cross Reference
உபாகமம் 13:3
அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.
ஏசாயா 8:13
சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாயிருப்பார்.
ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
நீதிமொழிகள் 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
1 சாமுவேல் 12:20
அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்.
உபாகமம் 8:2
உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
ஆதியாகமம் 22:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
நீதிமொழிகள் 16:6
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
நீதிமொழிகள் 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
யோபு 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
நெகேமியா 5:15
எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பதுசேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.
யோசுவா 24:14
ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.
உபாகமம் 10:12
இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,
உபாகமம் 6:2
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்ளவதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
உபாகமம் 4:10
உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.
யாத்திராகமம் 15:25
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:
ஆதியாகமம் 22:12
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
ஆதியாகமம் 20:11
அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
Tags மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள் உங்களைச் சோதிப்பதற்காகவும் நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும் தேவன் எழுந்தருளினார் என்றான்
Exodus 20:20 in Tamil Concordance Exodus 20:20 in Tamil Interlinear Exodus 20:20 in Tamil Image