Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 9:3 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 9 Deuteronomy 9:3

உபாகமம் 9:3
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் செல்கிறவர் என்பதை இன்று அறிந்துகொள்; அவர் சுட்டெரித்துப்போடுகிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழச்செய்வார்; இவ்விதமாகக் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களை சீக்கிரமாகத் துரத்தி, அவர்களை அழிப்பாய்.

Tamil Easy Reading Version
ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்த ஆற்றினைக் கடந்து செல்பவராயிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். எனவே உங்களால் ஏனாக்கியர்களை எதிர்க்க முடியும். தேவன் அக்கினியைப் போல் அவர்களை அழித்துவிடுவார்! கர்த்தர் அந்த ஜனங்களை அழித்துவிடுவார். அவர்களை உங்கள் முன்னால் வீழச்சியடையச் செய்வார். அவர்களை நீங்கள் வெளியே துரத்திவிடுவீர்கள். நீங்கள் அவர்களை விரைவில் அழித்துவிடுவீர்கள். தேவன் உங்களுக்குச் சொன்னபடியே இது விரைவில் நிகழும்.

Thiru Viviliam
சுட்டெரிக்கும் நெருப்பைப் போன்று உங்களை வழி நடத்திச் செல்பவர் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் அவர்களை முறியடித்து உங்கள் முன் வீழ்ச்சியுறச் செய்வார். அதனால், ஆண்டவர் வாக்களித்தபடி, நீங்கள் அவர்களைத் துரத்தி விரைவில் அழிப்பீர்கள்.⒫

Deuteronomy 9:2Deuteronomy 9Deuteronomy 9:4

King James Version (KJV)
Understand therefore this day, that the LORD thy God is he which goeth over before thee; as a consuming fire he shall destroy them, and he shall bring them down before thy face: so shalt thou drive them out, and destroy them quickly, as the LORD hath said unto thee.

American Standard Version (ASV)
Know therefore this day, that Jehovah thy God is he who goeth over before thee as a devouring fire; he will destroy them, and he will bring them down before thee: so shalt thou drive them out, and make them to perish quickly, as Jehovah hath spoken unto thee.

Bible in Basic English (BBE)
Be certain then today that it is the Lord your God who goes over before you like an all-burning fire; he will send destruction on them, crushing them before you; and you will send them in flight, putting an end to them quickly, as the Lord has said.

Darby English Bible (DBY)
Know then this day, that Jehovah thy God is he that goeth over before thee, a consuming fire; he will destroy them, and he will cast them down before thee, and thou shalt dispossess them and cause them to perish quickly, as Jehovah hath said unto thee.

Webster’s Bible (WBT)
Understand therefore this day, that the LORD thy God is he who goeth over before thee; as a consuming fire he shall destroy them, and he shall bring them down before thy face: so shalt thou drive them out, and destroy them quickly, as the LORD hath said to thee.

World English Bible (WEB)
Know therefore this day, that Yahweh your God is he who goes over before you as a devouring fire; he will destroy them, and he will bring them down before you: so shall you drive them out, and make them to perish quickly, as Yahweh has spoken to you.

Young’s Literal Translation (YLT)
and thou hast known to-day, that Jehovah thy God `is’ He who is passing over before thee — a fire consuming; He doth destroy them, and He doth humble them before thee, and thou hast dispossessed them, and destroyed them hastily, as Jehovah hath spoken to thee.

உபாகமம் Deuteronomy 9:3
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.
Understand therefore this day, that the LORD thy God is he which goeth over before thee; as a consuming fire he shall destroy them, and he shall bring them down before thy face: so shalt thou drive them out, and destroy them quickly, as the LORD hath said unto thee.

וְיָֽדַעְתָּ֣wĕyādaʿtāveh-ya-da-TA
הַיּ֗וֹםhayyômHA-yome
כִּי֩kiykee
יְהוָ֨הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֜יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
הֽוּאhûʾhoo
הָעֹבֵ֤רhāʿōbērha-oh-VARE
לְפָנֶ֙יךָ֙lĕpānêkāleh-fa-NAY-HA
אֵ֣שׁʾēšaysh
אֹֽכְלָ֔הʾōkĕlâoh-heh-LA
ה֧וּאhûʾhoo
יַשְׁמִידֵ֛םyašmîdēmyahsh-mee-DAME
וְה֥וּאwĕhûʾveh-HOO
יַכְנִיעֵ֖םyaknîʿēmyahk-nee-AME
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
וְהֽוֹרַשְׁתָּ֤םwĕhôraštāmveh-hoh-rahsh-TAHM
וְהַֽאַבַדְתָּם֙wĕhaʾabadtāmveh-ha-ah-vahd-TAHM
מַהֵ֔רmahērma-HARE
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
דִּבֶּ֥רdibberdee-BER
יְהוָ֖הyĕhwâyeh-VA
לָֽךְ׃lāklahk

Cross Reference

யோசுவா 3:11
இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப்பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது.

உபாகமம் 4:24
உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.

யாத்திராகமம் 23:29
தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,

எபிரெயர் 12:29
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

உபாகமம் 20:4
உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்.

உபாகமம் 7:23
உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியுமட்டும் அவர்களை மிகவும் கலங்கடிப்பார்.

ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

வெளிப்படுத்தின விசேஷம் 19:11
பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

2 தெசலோனிக்கேயர் 1:8
கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.

எபேசியர் 5:17
ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

மாற்கு 7:14
பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள்.

மத்தேயு 15:10
பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.

நாகூம் 1:5
அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கடந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்.

மீகா 2:13
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.

உபாகமம் 7:1
நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர் பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி

உபாகமம் 7:16
உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல ஜனங்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக; அவர்கள் தேவர்களை நீ சேவியாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாயிருக்கும்.

உபாகமம் 9:6
ஆகையால் உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக்கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம்.

உபாகமம் 31:3
உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தரை அழிப்பார்; நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான்.

யோசுவா 3:14
ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களில் இருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்து கொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள்.

ஏசாயா 27:4
உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;

ஏசாயா 30:27
இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.

ஏசாயா 30:30
கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் லல்லமையைக் காண்பிப்பாΰ்.

ஏசாயா 30:33
தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.

ஏசாயா 33:14
சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்திய ஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.

ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

உபாகமம் 1:30
உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்.


Tags உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய் அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார் அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார் இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி அவர்களை அழிப்பாய்
Deuteronomy 9:3 in Tamil Concordance Deuteronomy 9:3 in Tamil Interlinear Deuteronomy 9:3 in Tamil Image