Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daniel 2:47 in Tamil

Home Bible Daniel Daniel 2 Daniel 2:47

தானியேல் 2:47
ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால் மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.

Tamil Indian Revised Version
ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினதினால், உண்மையாகவே உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு அரசன் தானியேலிடம், “உனது தேவன் உண்மையிலேயே அதிமுக்கியமானவரும், வல்லமை உடையவருமானவர் என்பதை அறிவேன். அவர் அனைத்து அரசர்களுக்கும் கர்த்தராக இருக்கிறார். ஜனங்கள் அறியாதவற்றை அவர்களுக்கு அவர் கூறுகிறார். இது உண்மை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் நீ இந்த இரகசியத்தை என்னிடம் சொல்லும் தகுதி பெற்றிருக்கிறாய்” என்றான்.

Thiru Viviliam
மேலும், அரசன் தானியேலை நோக்கி, “நீர் வணங்கும் கடவுளே தெய்வங்களுக்கெல்லாம் கடவுள்; அரசர்களுக்கெல்லாம் ஆண்டவர்; அவர் ஒருவரே மறைபொருள்களை எல்லாம் வெளிப்படுத்த வல்லவர். இது உண்மையிலும் உண்மை; ஏனெனில் உம்மால் மட்டுமே இம்மறைபொருளை விளக்கிக் கூறமுடிந்தது” என்றான்.

Daniel 2:46Daniel 2Daniel 2:48

King James Version (KJV)
The king answered unto Daniel, and said, Of a truth it is, that your God is a God of gods, and a Lord of kings, and a revealer of secrets, seeing thou couldest reveal this secret.

American Standard Version (ASV)
The king answered unto Daniel, and said, Of a truth your God is the God of gods, and the Lord of kings, and a revealer of secrets, seeing thou hast been able to reveal this secret.

Bible in Basic English (BBE)
And the king made answer to Daniel and said, Truly, your God is a God of gods and a Lord of kings, and an unveiler of secrets, for you have been able to make this secret clear.

Darby English Bible (DBY)
The king answered Daniel and said, Of a truth it is that your God is the God of gods, and the Lord of kings, and a revealer of secrets, because thou wast able to reveal this secret.

World English Bible (WEB)
The king answered to Daniel, and said, Of a truth your God is the God of gods, and the Lord of kings, and a revealer of secrets, seeing you have been able to reveal this secret.

Young’s Literal Translation (YLT)
The king hath answered Daniel and said, `Of a truth `it is’ that your God is a God of gods, and a Lord of kings, and a revealer of secrets, since thou hast been able to reveal this secret.’

தானியேல் Daniel 2:47
ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால் மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.
The king answered unto Daniel, and said, Of a truth it is, that your God is a God of gods, and a Lord of kings, and a revealer of secrets, seeing thou couldest reveal this secret.

עָנֵה֩ʿānēhah-NAY
מַלְכָּ֨אmalkāʾmahl-KA
לְדָנִיֵּ֜אלlĕdāniyyēlleh-da-nee-YALE
וְאָמַ֗רwĕʾāmarveh-ah-MAHR
מִןminmeen
קְשֹׁט֙qĕšōṭkeh-SHOTE
דִּ֣יdee
אֱלָהֲכ֗וֹןʾĕlāhăkônay-la-huh-HONE
ה֣וּאhûʾhoo
אֱלָ֧הּʾĕlāhay-LA
אֱלָהִ֛יןʾĕlāhînay-la-HEEN
וּמָרֵ֥אûmārēʾoo-ma-RAY
מַלְכִ֖יןmalkînmahl-HEEN
וְגָלֵ֣הwĕgālēveh-ɡa-LAY
רָזִ֑יןrāzînra-ZEEN
דִּ֣יdee
יְכֵ֔לְתָּyĕkēlĕttāyeh-HAY-leh-ta
לְמִגְלֵ֖אlĕmiglēʾleh-meeɡ-LAY
רָזָ֥אrāzāʾra-ZA
דְנָֽה׃dĕnâdeh-NA

Cross Reference

தானியேல் 11:36
ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.

உபாகமம் 10:17
உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.

சங்கீதம் 136:2
தேவாதி தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.

தானியேல் 2:22
அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.

தானியேல் 2:28
மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:

ஆமோஸ் 3:7
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.

1 தீமோத்தேயு 6:15
அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,

வெளிப்படுத்தின விசேஷம் 17:14
இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:16
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 1:5
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

தானியேல் 4:32
மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.

தானியேல் 4:25
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.

தானியேல் 4:17
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.

யோசுவா 22:22
தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்து கொள்வார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.

யோபு 12:19
அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.

சங்கீதம் 2:10
இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.

சங்கீதம் 72:11
சகல ராஜாக்களும் அவரைப்பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.

சங்கீதம் 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

நீதிமொழிகள் 8:15
என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.

தானியேல் 2:19
பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.

தானியேல் 2:37
ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்.

தானியேல் 4:8
கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:

ஆதியாகமம் 41:39
பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.


Tags ராஜா தானியேலை நோக்கி நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால் மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும் ராஜாக்களுக்கு ஆண்டவரும் மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்
Daniel 2:47 in Tamil Concordance Daniel 2:47 in Tamil Interlinear Daniel 2:47 in Tamil Image