Bible

Psalm 113 in Tamil

சங்கீதம் 113

1 அல்லேலுூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். Praise ye the LORD. Praise, O ye servants of the LORD, praise the name of the LORD.

2 இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது. Blessed be the name of the LORD from this time forth and for evermore.

3 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. From the rising of the sun unto the going down of the same the LORD's name is to be praised.

4 கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. The LORD is high above all nations, and his glory above the heavens.

5 உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? Who is like unto the LORD our God, who dwelleth on high,

6 அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். Who humbleth himself to behold the things that are in heaven, and in the earth!

7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். He raiseth up the poor out of the dust, and lifteth the needy out of the dunghill;

8 அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார். That he may set him with princes, even with the princes of his people.

9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலுூயா. He maketh the barren woman to keep house, and to be a joyful mother of children. Praise ye the LORD.