1பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.And the LORD said unto Aaron, Thou and thy sons and thy father's house with thee shall bear the iniquity of the sanctuary: and thou and thy sons with thee shall bear the iniquity of your priesthood.
2உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.And thy brethren also of the tribe of Levi, the tribe of thy father, bring thou with thee, that they may be joined unto thee, and minister unto thee: but thou and thy sons with thee shall minister before the tabernacle of witness.
3அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,And they shall keep thy charge, and the charge of all the tabernacle: only they shall not come nigh the vessels of the sanctuary and the altar, that neither they, nor ye also, die.
4உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக்காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக் கூடாது.And they shall be joined unto thee, and keep the charge of the tabernacle of the congregation, for all the service of the tabernacle: and a stranger shall not come nigh unto you.
5இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.And ye shall keep the charge of the sanctuary, and the charge of the altar: that there be no wrath any more upon the children of Israel.
6ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்.And I, behold, I have taken your brethren the Levites from among the children of Israel: to you they are given as a gift for the LORD, to do the service of the tabernacle of the congregation.
7ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச்செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.Therefore thou and thy sons with thee shall keep your priest's office for everything of the altar, and within the vail; and ye shall serve: I have given your priest's office unto you as a service of gift: and the stranger that cometh nigh shall be put to death.
8பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.And the LORD spake unto Aaron, Behold, I also have given thee the charge of mine heave offerings of all the hallowed things of the children of Israel; unto thee have I given them by reason of the anointing, and to thy sons, by an ordinance for ever.
9மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும்.This shall be thine of the most holy things, reserved from the fire: every oblation of theirs, every meat offering of theirs, and every sin offering of theirs, and every trespass offering of theirs which they shall render unto me, shall be most holy for thee and for thy sons.
10பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.In the most holy place shalt thou eat it; every male shall eat it: it shall be holy unto thee.
11இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப்டைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும். அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம்.And this is thine; the heave offering of their gift, with all the wave offerings of the children of Israel: I have given them unto thee, and to thy sons and to thy daughters with thee, by a statute for ever: every one that is clean in thy house shall eat of it.
12அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.All the best of the oil, and all the best of the wine, and of the wheat, the firstfruits of them which they shall offer unto the LORD, them have I given thee.
13தங்கள் தேசத்தில் முதற்பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்.And whatsoever is first ripe in the land, which they shall bring unto the LORD, shall be thine; every one that is clean in thine house shall eat of it.
14இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.Every thing devoted in Israel shall be thine.
15மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.Every thing that openeth the matrix in all flesh, which they bring unto the LORD, whether it be of men or beasts, shall be thine: nevertheless the firstborn of man shalt thou surely redeem, and the firstling of unclean beasts shalt thou redeem.
16மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதனால், உன் மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா.And those that are to be redeemed from a month old shalt thou redeem, according to thine estimation, for the money of five shekels, after the shekel of the sanctuary, which is twenty gerahs.
17மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.But the firstling of a cow, or the firstling of a sheep, or the firstling of a goat, thou shalt not redeem; they are holy: thou shalt sprinkle their blood upon the altar, and shalt burn their fat for an offering made by fire, for a sweet savor unto the LORD.
18அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்.And the flesh of them shall be thine, as the wave breast and as the right shoulder are thine.
19இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.All the heave offerings of the holy things, which the children of Israel offer unto the LORD, have I given thee, and thy sons and thy daughters with thee, by a statute for ever: it is a covenant of salt for ever before the LORD unto thee and to thy seed with thee.
20பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.And the LORD spake unto Aaron, Thou shalt have no inheritance in their land, neither shalt thou have any part among them: I am thy part and thine inheritance among the children of Israel.
21இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.And, behold, I have given the children of Levi all the tenth in Israel for an inheritance, for their service which they serve, even the service of the tabernacle of the congregation.
22இஸ்ரவேல் புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கக்கடவர்கள்.Neither must the children of Israel henceforth come nigh the tabernacle of the congregation, lest they bear sin, and die.
23லேவியர்மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும்.But the Levites shall do the service of the tabernacle of the congregation, and they shall bear their iniquity: it shall be a statute for ever throughout your generations, that among the children of Israel they have no inheritance.
24இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.But the tithes of the children of Israel, which they offer as an heave offering unto the LORD, I have given to the Levites to inherit: therefore I have said unto them, Among the children of Israel they shall have no inheritance.
25பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
26நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.Thus speak unto the Levites, and say unto them, When ye take of the children of Israel the tithes which I have given you from them for your inheritance, then ye shall offer up an heave offering of it for the LORD, even a tenth part of the tithe.
27நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.And this your heave offering shall be reckoned unto you, as though it were the corn of the threshingfloor, and as the fulness of the winepress.
28இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.Thus ye also shall offer an heave offering unto the LORD of all your tithes, which ye receive of the children of Israel; and ye shall give thereof the LORD's heave offering to Aaron the priest.
29உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.Out of all your gifts ye shall offer every heave offering of the LORD, of all the best thereof, even the hallowed part thereof out of it.
30ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச் செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்.Therefore thou shalt say unto them, When ye have heaved the best thereof from it, then it shall be counted unto the Levites as the increase of the threshingfloor, and as the increase of the winepress.
31அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.And ye shall eat it in every place, ye and your households: for it is your reward for your service in the tabernacle of the congregation.
32இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.And ye shall bear no sin by reason of it, when ye have heaved from it the best of it: neither shall ye pollute the holy things of the children of Israel, lest ye die.
1Pinpu Karththar aaronai Nnokki: neeyum unnotaekooda un kumaararum un thakappan vamsaththaarum Parisuththa sthalaththaippattiya akkiramaththaich sumakkavaenndum; neeyum unnotaekooda un kumaararum ungal aasaariya ooliyaththaippattiya akkiramaththaich sumakkavaenndum.And the LORD said unto Aaron, Thou and thy sons and thy father's house with thee shall bear the iniquity of the sanctuary: and thou and thy sons with thee shall bear the iniquity of your priesthood.
2Un thakappanaakiya laeviyin koththiraththaaraana un sakothararaiyum unnotae kootiyirukkavum unnidaththilae sevikkavum avarkalaich serththukkol; neeyum un kumaararumo saatchiyin koodaaraththukkumun ooliyam seyyakkadaveerkal.And thy brethren also of the tribe of Levi, the tribe of thy father, bring thou with thee, that they may be joined unto thee, and minister unto thee: but thou and thy sons with thee shall minister before the tabernacle of witness.
3Avarkal un kaavalaiyum koodaaram anaiththin kaavalaiyum kaakkakkadavarkal; aakilum avarkalum neengalum saakaathapatikku, avarkal Parisuththa sthalaththin pannimuttukalanntaiyilum palipeedaththanntaiyilum seraamal,And they shall keep thy charge, and the charge of all the tabernacle: only they shall not come nigh the vessels of the sanctuary and the altar, that neither they, nor ye also, die.
4Unnotae kootikkonndu, koodaaraththukkaduththa ellaap pannivitaiyaiyum seyya, aasarippuk koodaaraththin kaavalaikkaakkakkadavarkal; anniyan oruvanum ungalidaththil serak koodaathu.And they shall be joined unto thee, and keep the charge of the tabernacle of the congregation, for all the service of the tabernacle: and a stranger shall not come nigh unto you.
5Israel puththirarmael inik kadungaோpam varaathapatikku, neengal Parisuththa sthalaththin kaavalaiyum palipeedaththin kaavalaiyum kaakkakkadaveerkal.And ye shall keep the charge of the sanctuary, and the charge of the altar: that there be no wrath any more upon the children of Israel.
6Aasarippuk koodaaraththin pannivitaiyaich seyya, karththarukkuk kodukkappatta ungal sakothararaakiya laeviyarai naan Israel puththirarilirunthu piriththu, ungalukkuth thaththamaakak koduththaen.And I, behold, I have taken your brethren the Levites from among the children of Israel: to you they are given as a gift for the LORD, to do the service of the tabernacle of the congregation.
7Aakaiyaal neeyum unnotaekooda un kumaararum palipeedaththukkum thiraikku utpuraththukkum aduththa ellaavattaைyum seyyumporuttu, ungal aasaariya ooliyaththaik kaaththuch sevikkakkadaveerkal; ungal aasaariya ooliyaththai ungalukku thaththamaaka arulinaen; athaichcheyyumpati serukira anniyan kolaiseyyappadakkadavan entar.Therefore thou and thy sons with thee shall keep your priest's office for everything of the altar, and within the vail; and ye shall serve: I have given your priest's office unto you as a service of gift: and the stranger that cometh nigh shall be put to death.
8Pinnum Karththar aaronai Nnokki: Israel puththirar Parisuththappaduththukiravaikalilellaam enakku aeraெduththuppataikkappadum pataippukalaik kaaththukkonntirukkireerkalae, avaikalai unakkuk koduththaen; apishaekaththinimiththam avaikalai unakkum un kumaararukkum niththiya kattalaiyaakak koduththaen.And the LORD spake unto Aaron, Behold, I also have given thee the charge of mine heave offerings of all the hallowed things of the children of Israel; unto thee have I given them by reason of the anointing, and to thy sons, by an ordinance for ever.
9Makaa Parisuththamaanavaikalilae, akkinikku utpaduththappadaamal unnutaiyathaayiruppathu evaiyenil, avarkal enakkup pataikkum ellaap pataippum, ellaap pojanapaliyum, ellaap paavanivaaranapaliyum, ellaak kuttanivaaranapaliyum, unakkum un kumaararukkum Parisuththamaayirukkum.This shall be thine of the most holy things, reserved from the fire: every oblation of theirs, every meat offering of theirs, and every sin offering of theirs, and every trespass offering of theirs which they shall render unto me, shall be most holy for thee and for thy sons.
10Parisuththa sthalaththilae avaikalaip pusikkavaenndum; aannmakkal yaavarum avaikalaip pusikkalaam; avaikal unakkup Parisuththamaayiruppathaaka.In the most holy place shalt thou eat it; every male shall eat it: it shall be holy unto thee.
11Israel puththirar aeraெduththuptaikkirathum asaivaattukirathumaana avarkalutaiya ellaak kaannikkaikalin pataippum unnutaiyavaikalaayirukkum. Avaikalai unakkum un kumaararukkum un kumaaraththikalukkum niththiya niyamamaakak koduththaen; un veettilae suththamaanavarkal ellaarum avaikalaip pusikkalaam.And this is thine; the heave offering of their gift, with all the wave offerings of the children of Israel: I have given them unto thee, and to thy sons and to thy daughters with thee, by a statute for ever: every one that is clean in thy house shall eat of it.
12Avarkal karththarukkuk kodukkum avarkalutaiya mutharpalankalaakiya uchchithamaana ennnneyaiyum, uchchithamaana thiraatcharasaththaiyum, thaaniyaththaiyum unakku uriyathaakak koduththaen.All the best of the oil, and all the best of the wine, and of the wheat, the firstfruits of them which they shall offer unto the LORD, them have I given thee.
13Thangal thaesaththil mutharpaluththa palanil avarkal karththarukkuk konndu varuvathellaam unakku uriyathaakum; un veettilae suththamaayiruppavarkal yaavarum avaikalaip pusikkalaam.And whatsoever is first ripe in the land, which they shall bring unto the LORD, shall be thine; every one that is clean in thine house shall eat of it.
14Isravaelilae saapaththeedaaka naernthukollappattathellaam unakku uriyathaayirukkum.Every thing devoted in Israel shall be thine.
15Manitharilum mirukangalilum avarkal karththarukkuch seluththum samastha piraannikalukkullae karppanthiranthu pirakkum yaavum unakku uriyathaayirukkum; aanaalum manitharin mutharpaettaை akaththiyamaay meetkavaenndum; theettana mirukajeevanin thalaiyeettaைyum meetkavaenndum.Every thing that openeth the matrix in all flesh, which they bring unto the LORD, whether it be of men or beasts, shall be thine: nevertheless the firstborn of man shalt thou surely redeem, and the firstling of unclean beasts shalt thou redeem.
16Meetkavaenntiyavaikal oru maathaththirku maerpattathanaal, un mathippukku isaiya Parisuththa sthalaththin sekkal kanakkinpati ainthu sekkal panaththaalae avaikalai meetkavaenndum; oru sekkal irupathu kaeraa.And those that are to be redeemed from a month old shalt thou redeem, according to thine estimation, for the money of five shekels, after the shekel of the sanctuary, which is twenty gerahs.
17Maattin thalaiyeettaுm, semmariyaattin thalaiyeettaுm, vellaattin thalaiyeettaுmo meetkappadavaenndaam; avaikal Parisuththamaanavaikal; avaikalin iraththaththaip palipeedaththinmael theliththu, avaikalin koluppaik karththarukkuch sukantha vaasanaiyaana thakanamaakath thakanikkavaenndum.But the firstling of a cow, or the firstling of a sheep, or the firstling of a goat, thou shalt not redeem; they are holy: thou shalt sprinkle their blood upon the altar, and shalt burn their fat for an offering made by fire, for a sweet savor unto the LORD.
18Asaivaattum maarkkanndaththaippolum valathu munnanthotaiyaippolum avaikalin maamsamum unnutaiyathaakum.And the flesh of them shall be thine, as the wave breast and as the right shoulder are thine.
19Israel puththirar karththarukku aeraெduththup pataikkira Parisuththa pataippukalaiyellaam unakkum un kumaararukkum un kumaaraththikalukkum niththiya kattalaiyaakak koduththaen; karththarutaiya sannithiyil ithu unakkum un santhathikkum entaikkum sellum maaraatha udanpatikkai entar.All the heave offerings of the holy things, which the children of Israel offer unto the LORD, have I given thee, and thy sons and thy daughters with thee, by a statute for ever: it is a covenant of salt for ever before the LORD unto thee and to thy seed with thee.
20Pinnum Karththar aaronai Nnokki: avarkalutaiya thaesaththil nee ontaiyum suthanthariththukkollavaenndaam, avarkal naduvae unakkup pangu unndaayirukkavum vaenndaam; Israel puththirar naduvil naanae un pangum un suthantharamumaay irukkiraேn.And the LORD spake unto Aaron, Thou shalt have no inheritance in their land, neither shalt thou have any part among them: I am thy part and thine inheritance among the children of Israel.
21Itho, laeviyin puththirar aasarippuk koodaaraththin pannivitaiyaich seykira avarkalutaiya vaelaikkaaka, isravaelarukkullavai ellaavattilum thasamapaakaththai avarkalukkuch suthantharamaakak koduththaen.And, behold, I have given the children of Levi all the tenth in Israel for an inheritance, for their service which they serve, even the service of the tabernacle of the congregation.
22Israel puththirar kuttanjumanthu saakaathapatikku, ini aasarippuk koodaaraththaik kittathirukkakkadavarkal.Neither must the children of Israel henceforth come nigh the tabernacle of the congregation, lest they bear sin, and die.
23Laeviyarmaaththiram aasarippuk koodaaraththukkaduththa vaelaikalaich seyyavaenndum; avarkal thangal akkiramaththaich sumappaarkal; Israel puththirar naduvae avarkalukkuch suthantharam illai enpathu ungal thalaimuraithoraுm niththiya kattalaiyaayirukkum.But the Levites shall do the service of the tabernacle of the congregation, and they shall bear their iniquity: it shall be a statute for ever throughout your generations, that among the children of Israel they have no inheritance.
24Israel puththirar karththarukku aeraெduththup pataikkum pataippaakiya thasamapaakaththai laeviyarukkuch suthantharamaakak koduththaen; aakaiyaal Israel puththirarin naduvae avarkalukkuch suthantharamillaiyentu avarkalukkuch sonnaen entar.But the tithes of the children of Israel, which they offer as an heave offering unto the LORD, I have given to the Levites to inherit: therefore I have said unto them, Among the children of Israel they shall have no inheritance.
25Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
26Nee laeviyarotae sollavaenntiyathu ennavental: Israel puththirar kaiyil vaangikkollumpati naan ungalukkuch suthantharamaakak koduththa thasamapaakaththai neengal avarkal kaiyil vaangumpothu, thasamapaakaththil paththil oru pangaik karththarukku aeraெduththuppataikkum pataippaakach seluththavaenndum.Thus speak unto the Levites, and say unto them, When ye take of the children of Israel the tithes which I have given you from them for your inheritance, then ye shall offer up an heave offering of it for the LORD, even a tenth part of the tithe.
27Neengal aeraெduththup pataikkum inthap pataippu kalaththin thaaniyaththaippolum, aalaiyin irasaththaippolum ungalukku ennnappadum.And this your heave offering shall be reckoned unto you, as though it were the corn of the threshingfloor, and as the fulness of the winepress.
28Ippatiyae neengal Israel puththirar kaiyil vaangum thasamapaakamaakiya ungal pangukalilellaam neengalum karththarukku entu oru pataippai aeraெduththup pataiththu, anthap pataippai aasaariyanaakiya aaronukkuk kodukkavaenndum.Thus ye also shall offer an heave offering unto the LORD of all your tithes, which ye receive of the children of Israel; and ye shall give thereof the LORD's heave offering to Aaron the priest.
29Ungalukkuk kodukkappadukira ovvoru kaannikkaiyilumulla uchchithamaana Parisuththa pangaiyellaam karththarukku aeraெduththup pataikkum pataippaakach seluththavaenndum.Out of all your gifts ye shall offer every heave offering of the LORD, of all the best thereof, even the hallowed part thereof out of it.
30Aathalaal nee avarkalotae sollavaenntiyathu ennavental: athil uchchithamaanathai neengal aeraெduththup pataikkumpothu, athu kalaththin varaththilum aalaiyin varaththilum irunthu eduththuch seluththukirathupola laeviyarukku ennnappadum.Therefore thou shalt say unto them, When ye have heaved the best thereof from it, then it shall be counted unto the Levites as the increase of the threshingfloor, and as the increase of the winepress.
31Athai neengalum ungal kudumpaththaarum evvidaththilum pusikkalaam; athu neengal aasarippuk koodaaraththilae seyyum pannivitaikku eedaana ungal sampalam.And ye shall eat it in every place, ye and your households: for it is your reward for your service in the tabernacle of the congregation.
32Ippati athil uchchithamaanathai aeraெduththup pataiththeerkalaanaal, neengal athinimiththam paavam sumakkamaattirkal; neengal saakaathirukkumpatikku, Israel puththirarin Parisuththamaanavaikalaith theettuppaduththalaakaathu entu sol entar.And ye shall bear no sin by reason of it, when ye have heaved from it the best of it: neither shall ye pollute the holy things of the children of Israel, lest ye die.