1தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.Listen, O isles, unto me; and hearken, ye people, from far; The LORD hath called me from the womb; from the bowels of my mother hath he made mention of my name.
2அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.And he hath made my mouth like a sharp sword; in the shadow of his hand hath he hid me, and made me a polished shaft; in his quiver hath he hid me;
3அவர் என்னை நோக்கி: நீ என்தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.And said unto me, Thou art my servant, O Israel, in whom I will be glorified.
4அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பெலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.Then I said, I have laboured in vain, I have spent my strength for nought, and in vain: yet surely my judgment is with the LORD, and my work with my God.
5யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத்தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.And now, saith the LORD that formed me from the womb to be his servant, to bring Jacob again to him, Though Israel be not gathered, yet shall I be glorious in the eyes of the LORD, and my God shall be my strength.
6யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.And he said, It is a light thing that thou shouldest be my servant to raise up the tribes of Jacob, and to restore the preserved of Israel: I will also give thee for a light to the Gentiles, that thou mayest be my salvation unto the end of the earth.
7இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.Thus saith the LORD, the Redeemer of Israel, and his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to a servant of rulers, Kings shall see and arise, princes also shall worship, because of the LORD that is faithful, and the Holy One of Israel, and he shall choose thee.
8பின்னும் கர்த்தர்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;Thus saith the LORD, In an acceptable time have I heard thee, and in a day of salvation have I helped thee: and I will preserve thee, and give thee for a covenant of the people, to establish the earth, to cause to inherit the desolate heritages;
9கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.That thou mayest say to the prisoners, Go forth; to them that are in darkness, Shew yourselves. They shall feed in the ways, and their pastures shall be in all high places.
10அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.They shall not hunger nor thirst; neither shall the heat nor sun smite them: for he that hath mercy on them shall lead them, even by the springs of water shall he guide them.
11என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும்.And I will make all my mountains a way, and my highways shall be exalted.
12இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள், இவர்கள் சீனீம் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார்.Behold, these shall come from far: and, lo, these from the north and from the west; and these from the land of Sinim.
13வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.Sing, O heavens; and be joyful, O earth; and break forth into singing, O mountains: for the LORD hath comforted his people, and will have mercy upon his afflicted.
14சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.But Zion said, The LORD hath forsaken me, and my Lord hath forgotten me.
15ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.Can a woman forget her sucking child, that she should not have compassion on the son of her womb? yea, they may forget, yet will I not forget thee.
16இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.Behold, I have graven thee upon the palms of my hands; thy walls are continually before me.
17உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னைவிட்டுப் புறப்பட்டுப்போவார்கள்.Thy children shall make haste; thy destroyers and they that made thee waste shall go forth of thee.
18உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.Lift up thine eyes round about, and behold: all these gather themselves together, and come to thee. As I live, saith the LORD, thou shalt surely clothe thee with them all, as with an ornament, and bind them on thee, as a bride doeth.
19அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.For thy waste and thy desolate places, and the land of thy destruction, shall even now be too narrow by reason of the inhabitants, and they that swallowed thee up shall be far away.
20பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள்.The children which thou shalt have, after thou hast lost the other, shall say again in thine ears, The place is too strait for me: give place to me that I may dwell.
21அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும் சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.Then shalt thou say in thine heart, Who hath begotten me these, seeing I have lost my children, and am desolate, a captive, and removing to and fro? and who hath brought up these? Behold, I was left alone; these, where had they been?
22இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.Thus saith the Lord GOD, Behold, I will lift up mine hand to the Gentiles, and set up my standard to the people: and they shall bring thy sons in their arms, and thy daughters shall be carried upon their shoulders.
23ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;And kings shall be thy nursing fathers, and their queens thy nursing mothers: they shall bow down to thee with their face toward the earth, and lick up the dust of thy feet; and thou shalt know that I am the LORD: for they shall not be ashamed that wait for me.
24பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?Shall the prey be taken from the mighty, or the lawful captive delivered?
25என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள், பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்;But thus saith the LORD, Even the captives of the mighty shall be taken away, and the prey of the terrible shall be delivered: for I will contend with him that contendeth with thee, and I will save thy children.
26உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.And I will feed them that oppress thee with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I the LORD am thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob.
1Theevukalae, enakkuch sevikodungal; thooraththilirukkira janangalae, kavaniyungal; thaayin karppaththilirunthathumuthal Karththar ennai alaiththu, naan en thaayin vayittil irukkaiyil en naamaththaip pirasthaapappaduththinaar.Listen, O isles, unto me; and hearken, ye people, from far; The LORD hath called me from the womb; from the bowels of my mother hath he made mention of my name.
2Avar en vaayaik koormaiyaana pattayamaakki, thamathu karaththin nilalinaal ennai maraiththu, ennaith thulakkamaana ampaakki, ennaith thamathu amparaaththoonniyilae mootivaiththaar.And he hath made my mouth like a sharp sword; in the shadow of his hand hath he hid me, and made me a polished shaft; in his quiver hath he hid me;
3Avar ennai Nnokki: nee enthaasan; isravaelae, naan unnil makimaippaduvaen entar.And said unto me, Thou art my servant, O Israel, in whom I will be glorified.
4Atharku naan: viruthaavaay ulaikkiraேn, veenum viyarththamumaay en pelanaich selavalikkiraேn; aakilum en niyaayam karththaridaththilum, en pelan en thaevanidaththilum irukkirathu entu sonnaen.Then I said, I have laboured in vain, I have spent my strength for nought, and in vain: yet surely my judgment is with the LORD, and my work with my God.
5Yaakkopaith thammidaththil thiruppumpati naan thaayin karppaththilirunthathumuthal Karththar thamakkuththaasanaaka ennai uruvaakkinaar; isravaelo seraathaepokirathu; aakilum karththarutaiya paarvaiyil kanamataivaen, en Dhevan en pelanaayiruppaar.And now, saith the LORD that formed me from the womb to be his servant, to bring Jacob again to him, Though Israel be not gathered, yet shall I be glorious in the eyes of the LORD, and my God shall be my strength.
6Yaakkopin koththirangalai eluppavum, isravaelil kaakkappattavarkalaith thiruppavum, neer enakkuth thaasanaayiruppathu arpakaariyamaayirukkirathu; neer poomiyin kataisipariyanthamum ennutaiya iratchippaayirukkumpati, ummai jaathikalukku oliyaakavum vaippaen enkiraar.And he said, It is a light thing that thou shouldest be my servant to raise up the tribes of Jacob, and to restore the preserved of Israel: I will also give thee for a light to the Gentiles, that thou mayest be my salvation unto the end of the earth.
7Isravaelin meetparum athin Parisuththarumaakiya Karththar, manusharaal asattaைpannnappattavarum, jaathiyaaraal aruvarukkappattavarum, athikaarikalukku ooliyakkaaranumaayirukkiravarai Nnokki, unnmaiyulla Karththar nimiththamum, ummaith therinthukonnda isravaelin Parisuththarnimiththamum, raajaakkal kanndu elunthirunthu, pirapukkal panninthukolvaarkal entu sollukiraar.Thus saith the LORD, the Redeemer of Israel, and his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to a servant of rulers, Kings shall see and arise, princes also shall worship, because of the LORD that is faithful, and the Holy One of Israel, and he shall choose thee.
8Pinnum Karththar: anukkiraka kaalaththilae naan umakkuch sevikoduththu, iratchanniyanaalilae umakku uthaviseythaen; neer poomiyaich seerppaduththi, paalaaykkidakkira idangalaich suthantharikkappannnavum;Thus saith the LORD, In an acceptable time have I heard thee, and in a day of salvation have I helped thee: and I will preserve thee, and give thee for a covenant of the people, to establish the earth, to cause to inherit the desolate heritages;
9Kattunndavarkalai Nnokki: purappattuppongal entum; irulil irukkiravarkalai Nnokki: velippadungal entum sollavum, naan ummaik kaappaatti, ummai janangalukku udanpatikkaiyaaka aerpaduththuvaen; avarkal valiyorangalilae maeyvaarkal; sakala maedukalilum avarkalukku maeychchal unndaayirukkum.That thou mayest say to the prisoners, Go forth; to them that are in darkness, Shew yourselves. They shall feed in the ways, and their pastures shall be in all high places.
10Avarkal pasiyaayiruppathumillai, thaakamaayiruppathumillai; ushnamaakilum, veyilaakilum avarkalmael paduvathumillai; avarkalukku irangukiravar avarkalai nadaththi, avarkalai neeroottaுkalidaththirkuk konndupoyviduvaar.They shall not hunger nor thirst; neither shall the heat nor sun smite them: for he that hath mercy on them shall lead them, even by the springs of water shall he guide them.
11En malaikalaiyellaam valikalaakkuvaen; en paathaikal uyarththappadum.And I will make all my mountains a way, and my highways shall be exalted.
12Itho, ivarkal thooraththilirunthu varuvaarkal; itho, avarkal vadakkilum maerkilumirunthu varuvaarkal, ivarkal seeneem thaesaththilumirunthu varuvaarkal enkiraar.Behold, these shall come from far: and, lo, these from the north and from the west; and these from the land of Sinim.
13Vaanangalae, kempeeriththuppaadungal; poomiyae, kalikooru; parvathangalae, kempeeramaay mulangungal; Karththar thammutaiya janaththukku aaraுthal seythaar; siraுmaippattirukkira thammutaiyavarkal mael irakkamaayiruppaar.Sing, O heavens; and be joyful, O earth; and break forth into singing, O mountains: for the LORD hath comforted his people, and will have mercy upon his afflicted.
14Seeyono: Karththar ennaik kaivittar, aanndavar ennai maranthaar entu sollukiraal.But Zion said, The LORD hath forsaken me, and my Lord hath forgotten me.
15Sthireeyaanaval than karppaththin pillaikku irangaamal, than paalakanai marappaalo? Avarkal maranthaalum, naan unnai marappathillai.Can a woman forget her sucking child, that she should not have compassion on the son of her womb? yea, they may forget, yet will I not forget thee.
16Itho, en ullangaikalil unnai varainthirukkiraேn; un mathilkal eppothum enmun irukkirathu.Behold, I have graven thee upon the palms of my hands; thy walls are continually before me.
17Un kumaarar theeviriththu varuvaarkal; unnai nirmoolamaakkinavarkalum unnaip paalaakkinavarkalum unnaivittup purappattuppovaarkal.Thy children shall make haste; thy destroyers and they that made thee waste shall go forth of thee.
18Un kannkalai aeraெduththuch suttilum paar; avarkalellaarum aekamaaykkooti unnidaththil varukiraarkal; nee avarkalellaaraiyum aaparanamaakath thariththu, manamakal anninthukolvathupola, nee avarkalai anninthukolvaay entu, en jeevanaikkonndu sollukiraேn entu Karththar uraikkiraar.Lift up thine eyes round about, and behold: all these gather themselves together, and come to thee. As I live, saith the LORD, thou shalt surely clothe thee with them all, as with an ornament, and bind them on thee, as a bride doeth.
19Appoluthu un vanaantharangalum, un paalidangalum, nirmoolamaana un thaesamum, inik kutikalin thiralinaalae unakku nerukkamaayirukkum; unnai vilunginavarkal thooramaavaarkal.For thy waste and thy desolate places, and the land of thy destruction, shall even now be too narrow by reason of the inhabitants, and they that swallowed thee up shall be far away.
20Pillaikalattiruntha unakku unndaayirukkappokira pillaikal: idam engalukku nerukkamaayirukkirathu; naangal kutiyirukkumpatikku vilakiyiru entu, un kaathukal kaetkach solluvaarkal.The children which thou shalt have, after thou hast lost the other, shall say again in thine ears, The place is too strait for me: give place to me that I may dwell.
21Appoluthu nee: ivarkalai enakkup pirappiththavar yaar? Naan pillaikalattaுm, thaniththum siraippattum, nilaiyattaுm irunthaenae; ivarkalai enakku valarththavar yaar? Itho, naan ontiyaay vidappattirunthaenae; ivarkal engaeyirunthavarkal? Entu un iruthayaththil solluvaay.Then shalt thou say in thine heart, Who hath begotten me these, seeing I have lost my children, and am desolate, a captive, and removing to and fro? and who hath brought up these? Behold, I was left alone; these, where had they been?
22Itho, jaathikalukku naeraaka en karaththai uyarththi, janangalukku naeraaka en kotiyai aettaுvaen; appoluthu un kumaararaik kodungaikalil aenthikkonndu varuvaarkal; un kumaaraththikal tholinmael eduththukkonndu varappaduvaarkal entu karththaraakiya aanndavar sollukiraar.Thus saith the Lord GOD, Behold, I will lift up mine hand to the Gentiles, and set up my standard to the people: and they shall bring thy sons in their arms, and thy daughters shall be carried upon their shoulders.
23Raajaakkal unnai valarkkum thanthaikalum, avarkalutaiya naayakikal un kaiththaaykalumaayiruppaarkal; tharaiyilae mukanguppura vilunthu unnaip panninthu, un kaalkalin thoolai nakkuvaarkal; naan Karththar, enakkuk kaaththirukkiravarkal vetkappaduvathillai enpathai appoluthu arinthukolvaay;And kings shall be thy nursing fathers, and their queens thy nursing mothers: they shall bow down to thee with their face toward the earth, and lick up the dust of thy feet; and thou shalt know that I am the LORD: for they shall not be ashamed that wait for me.
24Paraakkiraman kaiyilirunthu kollaipporulaip parikkakkoodumo? Allathu neethiyaaych siraippattupponavarkalai viduvikkakoodumo?Shall the prey be taken from the mighty, or the lawful captive delivered?
25Entalum itho, paraakkiramanaal siraippaduththappattavarkalum viduvikkappaduvaarkal, pelavanthanaal kollaiyidappattathum viduthalaiyaakkappadum; unnodu valakkaadukiravarkalotae naan valakkaati, un pillaikalai iratchiththukkolluvaen;But thus saith the LORD, Even the captives of the mighty shall be taken away, and the prey of the terrible shall be delivered: for I will contend with him that contendeth with thee, and I will save thy children.
26Unnai odukkinavarkalutaiya maamsaththai avarkalukkae thinnakkoduppaen; mathupaanaththaal verikolvathupol thangalutaiya iraththaththinaal verikolvaarkal; karththarum yaakkopin vallavarumaakiya naan un iratchakarum un meetparumaayirukkirathai maamsamaana yaavarum arinthukolvaarkalentu Karththar sollukiraar.And I will feed them that oppress thee with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I the LORD am thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob.