1எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.Hezekiah began to reign when he was five and twenty years old, and he reigned nine and twenty years in Jerusalem. And his mother's name was Abijah, the daughter of Zechariah.
2அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.And he did that which was right in the sight of the LORD, according to all that David his father had done.
3அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,He in the first year of his reign, in the first month, opened the doors of the house of the LORD, and repaired them.
4ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,And he brought in the priests and the Levites, and gathered them together into the east street,
5அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப்பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.And said unto them, Hear me, ye Levites, sanctify now yourselves, and sanctify the house of the LORD God of your fathers, and carry forth the filthiness out of the holy place.
6நம்முடைய பிதாக்கள் துரோகம்பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரை விட்டு விலகி, தங்கள் முகங்களைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள்.For our fathers have trespassed, and done that which was evil in the eyes of the LORD our God, and have forsaken him, and have turned away their faces from the habitation of the LORD, and turned their backs.
7அவர்கள் பரிசுத்தஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.Also they have shut up the doors of the porch, and put out the lamps, and have not burned incense nor offered burnt offerings in the holy place unto the God of Israel.
8ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறபடி, துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார்.Wherefore the wrath of the LORD was upon Judah and Jerusalem, and he hath delivered them to trouble, to astonishment, and to hissing, as ye see with your eyes.
9இதோ, இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து, நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள்.For, lo, our fathers have fallen by the sword, and our sons and our daughters and our wives are in captivity for this.
10இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்.Now it is in mine heart to make a covenant with the LORD God of Israel, that his fierce wrath may turn away from us.
11என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான்.My sons, be not now negligent: for the LORD hath chosen you to stand before him, to serve him, and that ye should minister unto him, and burn incense.
12அப்பொழுது கோகாத் புத்திரரில் அமாசாயின் குமாரன் மாகாத்தும், அசரியாவின் குமாரன் யோவேலும், மெராரியின் புத்திரரில் அப்தியின் குமாரன் கீசும், எகலேலின் குமாரன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் குமாரன் யோவாகும், யோவாகின் குமாரன் ஏதேனும்,Then the Levites arose, Mahath the son of Amasai, and Joel the son of Azariah, of the sons of the Kohathites: and of the sons of Merari, Kish the son of Abdi, and Azariah the son of Jehalelel: and of the Gershonites; Joah the son of Zimmah, and Eden the son of Joah:
13எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும், மத்தனியாவும்,And of the sons of Elizaphan; Shimri, and Jeiel: and of the sons of Asaph; Zechariah, and Mattaniah:
14ஏமானின் புத்திரரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் புத்திரரில் செமாயாவும், ஊசியேலும் என்னும் லேவியர் எழும்பி,And of the sons of Heman; Jehiel, and Shimei: and of the sons of Jeduthun; Shemaiah, and Uzziel.
15தங்கள் சகோதரரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள்.And they gathered their brethren, and sanctified themselves, and came, according to the commandment of the king, by the words of the LORD, to cleanse the house of the LORD.
16ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள்; அப்பொழுது லேவியர் அதை எடுத்து, வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள்.And the priests went into the inner part of the house of the LORD, to cleanse it, and brought out all the uncleanness that they found in the temple of the LORD into the court of the house of the LORD. And the Levites took it, to carry it out abroad into the brook Kidron.
17முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.Now they began on the first day of the first month to sanctify, and on the eighth day of the month came they to the porch of the LORD: so they sanctified the house of the LORD in eight days; and in the sixteenth day of the first month they made an end.
18அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்து,Then they went in to Hezekiah the king, and said, We have cleansed all the house of the LORD, and the altar of burnt offering, with all the vessels thereof, and the shewbread table, with all the vessels thereof.
19ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தமபண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.Moreover all the vessels, which king Ahaz in his reign did cast away in his transgression, have we prepared and sanctified, and, behold, they are before the altar of the LORD.
20அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.Then Hezekiah the king rose early, and gathered the rulers of the city, and went up to the house of the LORD.
21அப்பொழுது ராஜ்ய பாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், எழு வெள்ளாட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.And they brought seven bullocks, and seven rams, and seven lambs, and seven he goats, for a sin offering for the kingdom, and for the sanctuary, and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer them on the altar of the LORD.
22அப்படியே ஆசாரியர் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்துப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்.So they killed the bullocks, and the priests received the blood, and sprinkled it on the altar: likewise, when they had killed the rams, they sprinkled the blood upon the altar: they killed also the lambs, and they sprinkled the blood upon the altar.
23பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.And they brought forth the he goats for the sin offering before the king and the congregation; and they laid their hands upon them:
24இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரண பலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பிராயச்சித்தஞ்செய்தார்கள்.And the priests killed them, and they made reconciliation with their blood upon the altar, to make an atonement for all Israel: for the king commanded that the burnt offering and the sin offering should be made for all Israel.
25அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு உண்டாயிருந்தது.And he set the Levites in the house of the LORD with cymbals, with psalteries, and with harps, according to the commandment of David, and of Gad the king's seer, and Nathan the prophet: for so was the commandment of the LORD by his prophets.
26அப்படியே லேவியர் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள்.And the Levites stood with the instruments of David, and the priests with the trumpets.
27அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அவன் அதைச் செலுத்தத் துவக்கின நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.And Hezekiah commanded to offer the burnt offering upon the altar. And when the burnt offering began, the song of the LORD began also with the trumpets, and with the instruments ordained by David king of Israel.
28கீதத்தைப்பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கையில், சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் சபையார் எல்லாரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.And all the congregation worshipped, and the singers sang, and the trumpeters sounded: and all this continued until the burnt offering was finished.
29பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.And when they had made an end of offering, the king and all that were present with him bowed themselves, and worshipped.
30பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி: நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.Moreover Hezekiah the king and the princes commanded the Levites to sing praise unto the LORD with the words of David, and of Asaph the seer. And they sang praises with gladness, and they bowed their heads and worshipped.
31அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள்; ஆகையால் கிட்டவந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையார் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும், இஷ்டமுள்ளவர்களெல்லாம் சர்வாங்க தகனபலிகளையும் கொண்டுவந்தார்கள்.Then Hezekiah answered and said, Now ye have consecrated yourselves unto the LORD, come near and bring sacrifices and thank offerings into the house of the LORD. And the congregation brought in sacrifices and thank offerings; and as many as were of a free heart burnt offerings.
32சபையார் கொண்டுவந்த சர்வாங்கதகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்குட்டிகளும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனமாயின.And the number of the burnt offerings, which the congregation brought, was threescore and ten bullocks, an hundred rams, and two hundred lambs: all these were for a burnt offering to the LORD.
33அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டையாக்கப்பட்டது.And the consecrated things were six hundred oxen and three thousand sheep.
34ஆனாலும் ஆசாரியர்கள் கொஞ்சம் பேரானதினால் அவர்களால் அந்தச் சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாதிருந்தது; அதினாலே அந்த வேலை தீருமட்டாகவும், மற்ற ஆசாரியர் தங்களைப் பரிசுத்தம்பண்ணுமட்டாகவும், அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ள லேவியர் ஆசாரியரைப்பார்க்கிலும் மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள்.But the priests were too few, so that they could not flay all the burnt offerings: wherefore their brethren the Levites did help them, till the work was ended, and until the other priests had sanctified themselves: for the Levites were more upright in heart to sanctify themselves than the priests.
35சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது.And also the burnt offerings were in abundance, with the fat of the peace offerings, and the drink offerings for every burnt offering. So the service of the house of the LORD was set in order.
36தேவன் ஜனத்தை ஆயத்தப்படுத்தினதைக்குறித்து எசேக்கியாவும் ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்படார்கள்; இந்தக் காரியத்தைச் செய்யும்படியான யோசனை சடுதியாய் உண்டாயிற்று.And Hezekiah rejoiced, and all the people, that God had prepared the people: for the thing was done suddenly.
1Esekkiyaa irupaththainthaam vayathil raajaavaaki, irupaththonpathu varusham erusalaemil arasaanndaan; sakariyaavin kumaaraththiyaakiya avanutaiya thaayinpaer apiyaal.Hezekiah began to reign when he was five and twenty years old, and he reigned nine and twenty years in Jerusalem. And his mother's name was Abijah, the daughter of Zechariah.
2Avan than thakappanaakiya David seythapatiyellaam karththarin paarvaikkuch semmaiyaanathaich seythaan.And he did that which was right in the sight of the LORD, according to all that David his father had done.
3Avan than raajyapaaraththin muthalaam varusham muthalaam maathaththil karththarutaiya aalayaththin kathavukalaith thiranthu, avaikalaip paluthupaarththu,He in the first year of his reign, in the first month, opened the doors of the house of the LORD, and repaired them.
4Aasaariyaraiyum laeviyaraiyum alaiththuvanthu, avarkalaik kilakku veethiyilae kootivarachcheythu,And he brought in the priests and the Levites, and gathered them together into the east street,
5Avarkalai Nnokki: laeviyarae, kaelungal; neengal ippothu ungalaipParisuththam pannnnikkonndu, ungal pithaakkalin thaevanaakiya karththarutaiya aalayaththaip Parisuththampannnni asuththamaanathaip Parisuththa sthalaththilirunthu veliyae konndupongal.And said unto them, Hear me, ye Levites, sanctify now yourselves, and sanctify the house of the LORD God of your fathers, and carry forth the filthiness out of the holy place.
6Nammutaiya pithaakkal thurokampannnni, nammutaiya thaevanaakiya karththarin paarvaikkup pollaappaanathaich seythu, avarai vittu vilaki, thangal mukangalaik karththarutaiya vaasasthalaththai vittuth thiruppi, atharku muthukaik kaattinaarkal.For our fathers have trespassed, and done that which was evil in the eyes of the LORD our God, and have forsaken him, and have turned away their faces from the habitation of the LORD, and turned their backs.
7Avarkal Parisuththasthalaththil isravaelin thaevanukkuch sarvaanga thakanapali seluththaamalum, thoopangaattamalum, vilakkukalai annaiththuppottu, manndapaththin kathavukalaiyum poottippottarkal.Also they have shut up the doors of the porch, and put out the lamps, and have not burned incense nor offered burnt offerings in the holy place unto the God of Israel.
8Aakaiyaal karththarutaiya kadungaோpam yoothaavinmaelum erusalaeminmaelum vanthu, avar ivarkalai, neengal ungal kannkalinaal kaannkirapati, thuyaraththukkum thikaippukkum palippukkum oppukkoduththaar.Wherefore the wrath of the LORD was upon Judah and Jerusalem, and he hath delivered them to trouble, to astonishment, and to hissing, as ye see with your eyes.
9Itho, ithinimiththam nammutaiya pithaakkal pattayaththinaal vilunthu, nammutaiya kumaararum nammutaiya kumaaraththikalum nammutaiya manaivikalum siraiyiruppil akappattarkal.For, lo, our fathers have fallen by the sword, and our sons and our daughters and our wives are in captivity for this.
10Ippothum isravaelin thaevanaakiya karththarutaiya ukkirakopam nammaivittuth thirumpumpatikku, avarotae udanpatikkaipannna manathilae nirnayiththukkonntaen.Now it is in mine heart to make a covenant with the LORD God of Israel, that his fierce wrath may turn away from us.
11En kumaararae, ippoluthu asathiyaayiraathaeyungal; neengal karththarukkup pannivitai seyyumpati avarukku munpaaka nirkavum, avarukku ooliyanjaெykiravarkalum thoopangaattukiravarkalumaayirukkavum ungalai avar therinthukonndaar entan.My sons, be not now negligent: for the LORD hath chosen you to stand before him, to serve him, and that ye should minister unto him, and burn incense.
12Appoluthu kokaath puththiraril amaasaayin kumaaran maakaaththum, asariyaavin kumaaran yovaelum, meraariyin puththiraril apthiyin kumaaran geesum, ekalaelin kumaaran asariyaavum, kersoniyaril simmaavin kumaaran yovaakum, yovaakin kumaaran aethaenum,Then the Levites arose, Mahath the son of Amasai, and Joel the son of Azariah, of the sons of the Kohathites: and of the sons of Merari, Kish the son of Abdi, and Azariah the son of Jehalelel: and of the Gershonites; Joah the son of Zimmah, and Eden the son of Joah:
13Elichchaாppaan puththiraril simriyum, aeyelum, aasaappin puththiraril sakariyaavum, maththaniyaavum,And of the sons of Elizaphan; Shimri, and Jeiel: and of the sons of Asaph; Zechariah, and Mattaniah:
14Aemaanin puththiraril ekiyaelum, simaeyiyum, ethuththoonin puththiraril semaayaavum, oosiyaelum ennum laeviyar elumpi,And of the sons of Heman; Jehiel, and Shimei: and of the sons of Jeduthun; Shemaiah, and Uzziel.
15Thangal sakothararaik kootivarachcheythu, Parisuththampannnnikkonndu karththarutaiya vasanangalukkoththa raajaavinutaiya karpanaiyinpatiyae karththarutaiya aalayaththaich suththikarikka vanthaarkal.And they gathered their brethren, and sanctified themselves, and came, according to the commandment of the king, by the words of the LORD, to cleanse the house of the LORD.
16Aasaariyarkal karththarutaiya aalayaththaich suththikarikkumpati utpuraththilae piravaesiththu, karththarutaiya aalayaththil kannda sakala asuththaththaiyum veliyae karththarutaiya aalayappiraakaaraththil konnduvanthaarkal; appoluthu laeviyar athai eduththu, veliyae geetharon aattirkuk konnduponaarkal.And the priests went into the inner part of the house of the LORD, to cleanse it, and brought out all the uncleanness that they found in the temple of the LORD into the court of the house of the LORD. And the Levites took it, to carry it out abroad into the brook Kidron.
17Muthal maatham muthal thaethiyilae avarkal Parisuththampannnaththuvakki, ettanthaethiyilae karththarutaiya manndapaththilae piravaesiththu, karththarutaiya aalayaththai ettunaalil Parisuththampannnni, muthalaam maatham pathinaaraam thaethiyil athai mutiththaarkal.Now they began on the first day of the first month to sanctify, and on the eighth day of the month came they to the porch of the LORD: so they sanctified the house of the LORD in eight days; and in the sixteenth day of the first month they made an end.
18Avarkal raajaavaakiya esekkiyaavinidaththil poy: naangal karththarin aalayaththaiyum, sarvaanga thakanapalipeedaththaiyum, athinutaiya sakala pannimuttukalaiyum, samukaththappangalin maejaiyaiyum, athin sakala pannimuttukalaiyum suththikariththu,Then they went in to Hezekiah the king, and said, We have cleansed all the house of the LORD, and the altar of burnt offering, with all the vessels thereof, and the shewbread table, with all the vessels thereof.
19Raajaavaakiya aakaas arasaalumpothu thammutaiya paathaththinaal erinthupotta sakala pannimuttukalaiyum musthippaakkip Parisuththamapannnninom; itho, avaikal karththarin aalayaththirku munpaaka irukkirathu entarkal.Moreover all the vessels, which king Ahaz in his reign did cast away in his transgression, have we prepared and sanctified, and, behold, they are before the altar of the LORD.
20Appoluthu raajaavaakiya esekkiyaa kaalamae elunthirunthu, nakaraththin pirapukkalaik koottikkonndu, karththarin aalayaththirkup ponaan.Then Hezekiah the king rose early, and gathered the rulers of the city, and went up to the house of the LORD.
21Appoluthu raajya paaraththirkaakavum Parisuththa sthalaththirkaakavum yoothaavukkaakavum aelu kaalaikalaiyum, aelu aattukkadaakkalaiyum, aelu aattukkuttikalaiyum, elu vellaattukkadaakkalaiyum, paavanivaaranapaliyaakak konnduvanthaarkal; avaikalaik karththarutaiya palipeedaththinmael paliyidungal entu avan aasaariyaraakiya aaronin puththirarukkuch sonnaan.And they brought seven bullocks, and seven rams, and seven lambs, and seven he goats, for a sin offering for the kingdom, and for the sanctuary, and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer them on the altar of the LORD.
22Appatiyae aasaariyar kaalaikalai atiththu, antha iraththaththaip pitiththup palipeedaththinmael theliththaarkal; aattukkadaakkalai atiththu, avaikalin iraththaththaip palipeedaththinmael theliththaarkal; aattukkuttikalaiyum atiththu, avaikalin iraththaththaiyum palipeedaththinmael theliththaarkal.So they killed the bullocks, and the priests received the blood, and sprinkled it on the altar: likewise, when they had killed the rams, they sprinkled the blood upon the altar: they killed also the lambs, and they sprinkled the blood upon the altar.
23Pirpaadu paavanivaarana palikkaana vellaattukkadaakkalai raajaavukkum Sabaiyaarukku munpaakak konnduvanthaarkal; avaikalmael avarkal thangal kaikalai vaiththaarkal.And they brought forth the he goats for the sin offering before the king and the congregation; and they laid their hands upon them:
24Israel anaiththirkaakavum, sarvaanga thakanapaliyaiyum paavanivaarana paliyaiyum seluththungal entu raajaa solliyirunthaan; aathalaal aasaariyar avaikalai atiththu, Israel anaiththirkum paavanivirththi unndaakka, avaikalin iraththaththaal palipeedaththinmael piraayachchiththanjaெythaarkal.And the priests killed them, and they made reconciliation with their blood upon the altar, to make an atonement for all Israel: for the king commanded that the burnt offering and the sin offering should be made for all Israel.
25Avan, Davidm, raajaavin njaanathirushtikkaaranaakiya kaaththum, theerkkatharisiyaakiya naaththaanum karpiththapatiyae, kaiththaalangalaiyum thampurukalaiyum suramanndalangalaiyum vaasikkira laeviyaraik karththarutaiya aalayaththilae niraுththinaan; ippatich seyyavaenndum enkira karpanai karththaraal avarutaiya theerkkatharisikalaik konndu unndaayirunthathu.And he set the Levites in the house of the LORD with cymbals, with psalteries, and with harps, according to the commandment of David, and of Gad the king's seer, and Nathan the prophet: for so was the commandment of the LORD by his prophets.
26Appatiyae laeviyar thaaveethin geethavaaththiyangalaiyum, aasaariyar poorikaikalaiyum pitiththu nintarkal.And the Levites stood with the instruments of David, and the priests with the trumpets.
27Appoluthu esekkiyaa sarvaanga thakanapalikalaip palipeedaththinmael seluththak kattalaiyittan; avan athaich seluththath thuvakkina naeraththil karththaraith thuthikkum geethamum poorikaikalum, Israel raajaavaakiya David aerpaduththina geethavaaththiyangalum mulangaththodanginathu.And Hezekiah commanded to offer the burnt offering upon the altar. And when the burnt offering began, the song of the LORD began also with the trumpets, and with the instruments ordained by David king of Israel.
28Geethaththaippaati, poorikaikalai oothikkonntirukkaiyil, sarvaanga thakanapaliyaich seluththith theerumattum Sabaiyaar ellaarum panninthukonntirunthaarkal.And all the congregation worshipped, and the singers sang, and the trumpeters sounded: and all this continued until the burnt offering was finished.
29Paliyittuth theernthapothu, raajaavum avanotiruntha anaivarum thalaikuninthu panninthukonndaarkal.And when they had made an end of offering, the king and all that were present with him bowed themselves, and worshipped.
30Pinpu esekkiyaa raajaavum pirapukkalum laeviyarai Nnokki: neengal Davidm njaanathirushtikkaaranaakiya aasaapum paatina vaarththaikalinaal karththaraith thuthiyungal entarkal; appoluthu makilchchiyotae thuthiseythu thalaikuninthu panninthukonndaarkal.Moreover Hezekiah the king and the princes commanded the Levites to sing praise unto the LORD with the words of David, and of Asaph the seer. And they sang praises with gladness, and they bowed their heads and worshipped.
31Athinpinpu esekkiyaa: ippothum neengal karththarukkentu ungalaip Parisuththampannnnineerkal; aakaiyaal kittavanthu, karththarutaiya aalayaththirkuth thakanapalikalaiyum sthoththirapalikalaiyum konnduvaarungal entan; appoluthu Sabaiyaar thakanapalikalaiyum sthoththirapalikalaiyum, ishdamullavarkalellaam sarvaanga thakanapalikalaiyum konnduvanthaarkal.Then Hezekiah answered and said, Now ye have consecrated yourselves unto the LORD, come near and bring sacrifices and thank offerings into the house of the LORD. And the congregation brought in sacrifices and thank offerings; and as many as were of a free heart burnt offerings.
32Sabaiyaar konnduvantha sarvaangathakanapalikalin thokai elupathu kaalaikalum, nooraு aattukkuttikalum, irunooraு aattukkuttikalumae; ivaikalellaam karththarukkuch sarvaanga thakanamaayina.And the number of the burnt offerings, which the congregation brought, was threescore and ten bullocks, an hundred rams, and two hundred lambs: all these were for a burnt offering to the LORD.
33Araுnooraு kaalaikalum moovaayiram aadukalum pirathishtaiyaakkappattathu.And the consecrated things were six hundred oxen and three thousand sheep.
34Aanaalum aasaariyarkal konjam paeraanathinaal avarkalaal anthach sarvaanga thakanamaana jeevankalaiyellaam atiththuth tholurikka mutiyaathirunthathu; athinaalae antha vaelai theerumattakavum, matta aasaariyar thangalaip Parisuththampannnumattakavum, avarkal sakothararaakiya laeviyar avarkalukku uthaviseythaarkal; thangalaip Parisuththampannnnikkolla laeviyar aasaariyaraippaarkkilum mana ursaakamullavarkalaayirunthaarkal.But the priests were too few, so that they could not flay all the burnt offerings: wherefore their brethren the Levites did help them, till the work was ended, and until the other priests had sanctified themselves: for the Levites were more upright in heart to sanctify themselves than the priests.
35Sarvaanga thakanapalikalum, sthoththirapalikalin koluppum, sarvaanga thakanangalukkaduththa paanapalikalum mikuthiyaayirunthathu; ivvithamaay karththarutaiya aalayaththin aaraathanai thittampannnappattathu.And also the burnt offerings were in abundance, with the fat of the peace offerings, and the drink offerings for every burnt offering. So the service of the house of the LORD was set in order.
36Dhevan janaththai aayaththappaduththinathaikkuriththu esekkiyaavum janangal ellaarum santhoshappadaarkal; inthak kaariyaththaich seyyumpatiyaana yosanai saduthiyaay unndaayittaு.And Hezekiah rejoiced, and all the people, that God had prepared the people: for the thing was done suddenly.