பல்லவி
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,
விமலா, கிறிஸ்து நாதா.
அனுபல்லவி
கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி! – வினை
சரணங்கள்
1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;
பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். – வினை
2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
ஜோதிநட் சத்திரம் எழுந்தன வானே;
சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
சென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே. – வினை
3. ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்;
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்;
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்;
பட்சம் வைத்தாள்வையேல், அதுவே ஆனந்தம். – வினை
4. இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
உயிரை எடுப்பையேல், உன் முத்தி தாராய். – வினை
Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில் Lyrics in English
Pallavi
Vinai soolaa thintha iravinil kaaththaal,
Vimalaa, Kristhu naathaa.
Anupallavi
Kanakaapi shaekanae, avaniyark kolir, pira
Kaasanae, pava naasanae, svaami! – vinai
Saranangal
1. Senta pakal muluthum ennaik kann paarththaay;
Sey karumangalil karunnaikal pooththaay;
Ponta thaathma sareeram pilaikka oonn paarththaay;
Pollaap paeyin mosam nintenaik kaaththaay. – vinai
2. Sooriyan asthamith thotich sentanae;
Jothinat saththiram elunthana vaanae;
Serum vilangu patchi uraipathi thaanae
Sentana; atiyaenum palli kolvaenae. – vinai
3. Jeevan thanthenai meettaோy siriyaen un sontham;
Jekath thinpangal vilainthu serthal nirppantham;
Paaviyaen tholuthaen nin paathaara vintham;
Patcham vaiththaalvaiyael, athuvae aanantham. – vinai
4. Intaip poluthil naan sey paavangal theeraay;
Idarkal thunpangal neenga ennaik kai seraay;
Untan atimaik kentum uvantharul kooraay;
Uyirai eduppaiyael, un muththi thaaraay. – vinai
PowerPoint Presentation Slides for the song Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில் PPT
Vinai Soolathintha Iravinil PPT

