1சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;And Saul, yet breathing out threatenings and slaughter against the disciples of the Lord, went unto the high priest,
2யூதமார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.And desired of him letters to Damascus to the synagogues, that if he found any of this way, whether they were men or women, he might bring them bound unto Jerusalem.
3அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;And as he journeyed, he came near Damascus: and suddenly there shined round about him a light from heaven:
4அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.And he fell to the earth, and heard a voice saying unto him, Saul, Saul, why persecutest thou me?
5அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.And he said, Who art thou, Lord? And the Lord said, I am Jesus whom thou persecutest: it is hard for thee to kick against the pricks.
6அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.And he trembling and astonished said, Lord, what wilt thou have me to do? And the Lord said unto him, Arise, and go into the city, and it shall be told thee what thou must do.
7அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள்.And the men which journeyed with him stood speechless, hearing a voice, but seeing no man.
8சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்And Saul arose from the earth; and when his eyes were opened, he saw no man: but they led him by the hand, and brought him into Damascus.
9அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.And he was three days without sight, and neither did eat nor drink.
10தமஸ்குவிலே அனனியா என்னும்பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான்.And there was a certain disciple at Damascus, named Ananias; and to him said the Lord in a vision, Ananias. And he said, Behold, I am here, Lord.
11அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்,And the Lord said unto him, Arise, and go into the street which is called Straight, and enquire in the house of Judas for one called Saul, of Tarsus: for, behold, he prayeth,
12அனனியா என்னும் பேருள்ள ஒருமனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையவும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.And hath seen in a vision a man named Ananias coming in, and putting his hand on him, that he might receive his sight.
13அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.Then Ananias answered, Lord, I have heard by many of this man, how much evil he hath done to thy saints at Jerusalem:
14இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறான் என்றான்.And here he hath authority from the chief priests to bind all that call on thy name.
15அதற்குக் கர்த்தர் நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.But the Lord said unto him, Go thy way: for he is a chosen vessel unto me, to bear my name before the Gentiles, and kings, and the children of Israel:
16அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்For I will shew him how great things he must suffer for my name's sake.
17அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.And Ananias went his way, and entered into the house; and putting his hands on him said, Brother Saul, the Lord, even Jesus, that appeared unto thee in the way as thou camest, hath sent me, that thou mightest receive thy sight, and be filled with the Holy Ghost.
18உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.And immediately there fell from his eyes as it had been scales: and he received sight forthwith, and arose, and was baptized.
19பின்பு அவன் போஜனம்பண்ணி பெலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,And when he had received meat, he was strengthened. Then was Saul certain days with the disciples which were at Damascus.
20தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.And straightway he preached Christ in the synagogues, that he is the Son of God.
21கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.But all that heard him were amazed, and said; Is not this he that destroyed them which called on this name in Jerusalem, and came hither for that intent, that he might bring them bound unto the chief priests?
22சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.But Saul increased the more in strength, and confounded the Jews which dwelt at Damascus, proving that this is very Christ.
23அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.And after that many days were fulfilled, the Jews took counsel to kill him:
24அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.But their laying await was known of Saul. And they watched the gates day and night to kill him.
25சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.Then the disciples took him by night, and let him down by the wall in a basket.
26சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.And when Saul was come to Jerusalem, he assayed to join himself to the disciples: but they were all afraid of him, and believed not that he was a disciple.
27அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.But Barnabas took him, and brought him to the apostles, and declared unto them how he had seen the Lord in the way, and that he had spoken to him, and how he had preached boldly at Damascus in the name of Jesus.
28அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து;And he was with them coming in and going out at Jerusalem.
29கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான், அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள்.And he spake boldly in the name of the Lord Jesus, and disputed against the Grecians: but they went about to slay him.
30சகோதரரோ அதை அறிந்து, அவனைச் செசுரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள்.Which when the brethren knew, they brought him down to Caesarea, and sent him forth to Tarsus.
31அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.Then had the churches rest throughout all Judaea and Galilee and Samaria, and were edified; and walking in the fear of the Lord, and in the comfort of the Holy Ghost, were multiplied.
32பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.And it came to pass, as Peter passed throughout all quarters, he came down also to the saints which dwelt at Lydda.
33அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.And there he found a certain man named Aeneas, which had kept his bed eight years, and was sick of the palsy.
34பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.And Peter said unto him, Aeneas, Jesus Christ maketh thee whole: arise, and make thy bed. And he arose immediately.
35லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.And all that dwelt at Lydda and Saron saw him, and turned to the Lord.
36யோப்பா பட்டணத்தில் கிரேக்குப்பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.Now there was at Joppa a certain disciple named Tabitha, which by interpretation is called Dorcas: this woman was full of good works and almsdeeds which she did.
37அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.And it came to pass in those days, that she was sick, and died: whom when they had washed, they laid her in an upper chamber.
38யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.And forasmuch as Lydda was nigh to Joppa, and the disciples had heard that Peter was there, they sent unto him two men, desiring him that he would not delay to come to them.
39பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்து நின்றார்கள்.Then Peter arose and went with them. When he was come, they brought him into the upper chamber: and all the widows stood by him weeping, and shewing the coats and garments which Dorcas made, while she was with them.
40பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.But Peter put them all forth, and kneeled down, and prayed; and turning him to the body said, Tabitha, arise. And she opened her eyes: and when she saw Peter, she sat up.
41அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்கள் முன் நிறுத்தினான்.And he gave her his hand, and lifted her up, and when he had called the saints and widows, presented her alive.
42இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.And it was known throughout all Joppa; and many believed in the Lord.
43பின்பு அவன் யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.And it came to pass, that he tarried many days in Joppa with one Simon a tanner.
1Savul enpavan innung karththarutaiya seesharaip payamuraுththik kolai seyyumpati seerip pirathaana aasaariyaridaththirkup poy;And Saul, yet breathing out threatenings and slaughter against the disciples of the Lord, went unto the high priest,
2Yoothamaarkkaththaaraakiya purusharaiyaakilum sthireekalaiyaakilum thaan kanndupitiththaal, avarkalaik katti erusalaemukkuk konnduvarumpati, thamaskuvilulla jepaaalayangalukku nirupangalaik kaettu vaanginaan.And desired of him letters to Damascus to the synagogues, that if he found any of this way, whether they were men or women, he might bring them bound unto Jerusalem.
3Avan pirayaanamaayp poy, thamaskuvukkuch sameepiththapothu satithiyilae vaanaththilirunthu oru oli avanaich suttip pirakaasiththathu;And as he journeyed, he came near Damascus: and suddenly there shined round about him a light from heaven:
4Avan tharaiyilae vilunthaan. Appoluthu: savulae, savulae, nee ennai aen thunpappaduththukiraay entu thannudanae sollukira oru saththaththaik kaettan.And he fell to the earth, and heard a voice saying unto him, Saul, Saul, why persecutest thou me?
5Atharku avan: aanndavarae, neer yaar, entan. Atharkuk Karththar: nee thunpappaduththukira Yesu naanae, mullil uthaikkirathu unakkuk katinamaam entar.And he said, Who art thou, Lord? And the Lord said, I am Jesus whom thou persecutest: it is hard for thee to kick against the pricks.
6Avan nadungith thikaiththu: aanndavarae, naan ennaseyyach siththamaayirukkireer entan. Atharkuk Karththar: nee elunthu, pattanaththukkullae po, nee seyyavaenntiyathu angae unakkuch sollappadum entar.And he trembling and astonished said, Lord, what wilt thou have me to do? And the Lord said unto him, Arise, and go into the city, and it shall be told thee what thou must do.
7Avanudanaekoodap pirayaanampannnnina manusharkal saththaththaik kaettum oruvaraiyung kaannaamal piramiththu nintarkal.And the men which journeyed with him stood speechless, hearing a voice, but seeing no man.
8Savul tharaiyilirunthelunthu, than kannkalaith thiranthapothu oruvaraiyung kaanavillai. Appoluthu kailaaku koduththu, avanaith thamaskuvukkuk koottikkonnduponaarkalAnd Saul arose from the earth; and when his eyes were opened, he saw no man: but they led him by the hand, and brought him into Damascus.
9Avan moontu naal paarvaiyillaathavanaayp pusiyaamalum kutiyaamalum irunthaan.And he was three days without sight, and neither did eat nor drink.
10Thamaskuvilae ananiyaa ennumpaerulla oru seeshan irunthaan. Avanukkuk Karththar tharisanamaaki: ananiyaavae, entar. Avan: aanndavarae, itho, atiyaen entan.And there was a certain disciple at Damascus, named Ananias; and to him said the Lord in a vision, Ananias. And he said, Behold, I am here, Lord.
11Appoluthu Karththar: nee elunthu naerththeruvu ennappatta theruvukkuppoy, yoothaavin veettilae tharsupattanaththaanaakiya savul ennum paerulla oruvanaith thaedu; avan ippoluthu Jebampannnukiraan,And the Lord said unto him, Arise, and go into the street which is called Straight, and enquire in the house of Judas for one called Saul, of Tarsus: for, behold, he prayeth,
12Ananiyaa ennum paerulla orumanushan thannidaththil varavum, thaan paarvaiyataiyavumpati thanmael kaivaikkavum tharisananganndaan entar.And hath seen in a vision a man named Ananias coming in, and putting his hand on him, that he might receive his sight.
13Atharku ananiyaa: aanndavarae, intha manushan erusalaemilulla ummutaiya Parisuththavaankalukku eththanaiyo pollaangukalaich seythaanentu avanaikkuriththu anaekaraal kaelvippattirukkiraேn.Then Ananias answered, Lord, I have heard by many of this man, how much evil he hath done to thy saints at Jerusalem:
14Ingaeyum ummutaiya naamaththaith tholuthukollukira yaavaraiyung kattumpati avan pirathaana aasaariyarkalaal athikaaram pettirukkiraan entan.And here he hath authority from the chief priests to bind all that call on thy name.
15Atharkuk Karththar nee po; avan purajaathikalukkum raajaakkalukkum Israel puththirarukkum ennutaiya naamaththai arivikkiratharkaaka naan therinthukonnda paaththiramaayirukkiraan.But the Lord said unto him, Go thy way: for he is a chosen vessel unto me, to bear my name before the Gentiles, and kings, and the children of Israel:
16Avan ennutaiya naamaththinimiththam evvalavaayp paadupadavaenndumenpathai naan avanukkuk kaannpippaenFor I will shew him how great things he must suffer for my name's sake.
17Appoluthu ananiyaa poy, veettukkul piravaesiththu, avanmael kaiyai vaiththu sakotharanaakiya savulae, nee vanthavaliyilae unakkuth tharisanamaana Yesuvaakiya Karththar, nee paarvaiyataiyumpatikkum Parisuththa aaviyinaal nirappappadumpatikkum ennai anuppinaar entan.And Ananias went his way, and entered into the house; and putting his hands on him said, Brother Saul, the Lord, even Jesus, that appeared unto thee in the way as thou camest, hath sent me, that thou mightest receive thy sight, and be filled with the Holy Ghost.
18Udanae avan kannkalilirunthu meen sethilkal pontavaikal vilunthathu. Avan paarvaiyatainthu, elunthirunthu, njaanasnaanam pettaாn.And immediately there fell from his eyes as it had been scales: and he received sight forthwith, and arose, and was baptized.
19Pinpu avan pojanampannnni pelappattan. Savul thamaskuvilulla seesharudanae silanaal irunthu,And when he had received meat, he was strengthened. Then was Saul certain days with the disciples which were at Damascus.
20Thaamathaminti, Kristhu thaevanutaiya kumaaranentu aalayangalilae pirasangiththaan.And straightway he preached Christ in the synagogues, that he is the Son of God.
21Kaettavarkalellaarum aachchariyappattu: erusalaemil intha naamaththaith tholuthukollukiravarkalai naasamaakki, ingaeyum appatippattavarkalaik kattip pirathaana aasaariyarkalidaththirkuk konndupokumpati vanthavan ivanallavaa entarkal.But all that heard him were amazed, and said; Is not this he that destroyed them which called on this name in Jerusalem, and came hither for that intent, that he might bring them bound unto the chief priests?
22Savul athikamaakath thidankonndu, ivarae Kristhuventu thirushdaanthappaduththi, thamaskuvil kutiyirukkira yootharkalaik kalangappannnninaan.But Saul increased the more in strength, and confounded the Jews which dwelt at Damascus, proving that this is very Christ.
23Anaekanaal sentapinpu, yootharkal avanaik kolaiseyyumpati aalosanai pannnninaarkal.And after that many days were fulfilled, the Jews took counsel to kill him:
24Avarkalutaiya yosanai savulukkuth theriyavanthathu. Avanaik kolaiseyyumpati avarkal iravum pakalum kottaைvaasalkalaik kaaththukkonntirunthaarkal.But their laying await was known of Saul. And they watched the gates day and night to kill him.
25Seesharkal iraaththiriyilae avanaik koottikkonndupoy, oru kootaiyilae vaiththu, mathilvaliyaay irakkivittarkal.Then the disciples took him by night, and let him down by the wall in a basket.
26Savul erusalaemukku vanthu, seesharudanae sernthukollap paarththaan; avarkal avanaich seeshanentu nampaamal ellaarum avanukkup payanthirunthaarkal.And when Saul was come to Jerusalem, he assayed to join himself to the disciples: but they were all afraid of him, and believed not that he was a disciple.
27Appoluthu parnapaa enpavan avanaich serththukkonndu, apposthalaridaththil alaiththukkonndupoy, valiyilae avan karththaraik kannda vithaththaiyum, avar avanudanae paesinathaiyum, thamaskuvil avan Yesuvin naamaththinaalae thairiyamaayp pirasangiththathaiyum avarkalukku vivariththuch sonnaan.But Barnabas took him, and brought him to the apostles, and declared unto them how he had seen the Lord in the way, and that he had spoken to him, and how he had preached boldly at Damascus in the name of Jesus.
28Athanpinpu avan erusalaemilae avarkalidaththil pokkum varaththumaayirunthu;And he was with them coming in and going out at Jerusalem.
29Karththaraakiya Yesuvin naamaththinaalae thairiyamaayp pirasangiththu, kiraekkarudanae paesith tharkkiththaan, avarkalo avanaik kolaiseyya eththanampannnninaarkal.And he spake boldly in the name of the Lord Jesus, and disputed against the Grecians: but they went about to slay him.
30Sakothararo athai arinthu, avanaich sesuriyaavukku alaiththukkonndupoy, tharsuvukku anuppivittarkal.Which when the brethren knew, they brought him down to Caesarea, and sent him forth to Tarsus.
31Appoluthu yoothaeyaa kalilaeyaa samaariyaa naadukalilengum Sabaikal samaathaanam pettaு, pakthiviruththiyatainthu, karththarukkup payappadukira payaththodum, Parisuththa aaviyin aaraுthalodum nadanthu perukina.Then had the churches rest throughout all Judaea and Galilee and Samaria, and were edified; and walking in the fear of the Lord, and in the comfort of the Holy Ghost, were multiplied.
32Paethuru poy ellaaraiyum santhiththuvarukaiyil, avan liththaa oorilae kutiyirukkira Parisuththavaankalidaththirkum ponaan.And it came to pass, as Peter passed throughout all quarters, he came down also to the saints which dwelt at Lydda.
33Angae ettu varushamaayk kattilinmael thimirvaathamullavanaayk kidantha ainaeyaa ennum paerulla oru manushanaik kanndaan.And there he found a certain man named Aeneas, which had kept his bed eight years, and was sick of the palsy.
34Paethuru avanaip paarththu: ainaeyaavae, YesuKristhu unnaik kunamaakkukiraar; nee elunthu, un padukkaiyai neeyae pottukkol entan. Udanae avan elunthirunthaan.And Peter said unto him, Aeneas, Jesus Christ maketh thee whole: arise, and make thy bed. And he arose immediately.
35Liththaavilum saaronilum kutiyirunthavarkalellaarum avanaik kanndu, karththaridaththil thirumpinaarkal.And all that dwelt at Lydda and Saron saw him, and turned to the Lord.
36Yoppaa pattanaththil kiraekkuppaashaiyilae thorkaal entu arththangaொllum thapeeththaal ennum paerutaiya oru seeshi irunthaal; aval narkiriyaikalaiyum tharumangalaiyum mikuthiyaaych seythukonnduvanthaal.Now there was at Joppa a certain disciple named Tabitha, which by interpretation is called Dorcas: this woman was full of good works and almsdeeds which she did.
37Annaatkalil aval viyaathippattu maranamatainthaal. Avalaik kulippaatti, maelveettilae kidaththivaiththaarkal.And it came to pass in those days, that she was sick, and died: whom when they had washed, they laid her in an upper chamber.
38Yoppaa pattanam liththaa oorukkuch sameepamaanapatiyinaalae, paethuru avvidaththil irukkiraanentu seesharkal kaelvippattu, thaamathamillaamal thangalidaththil varavaenndumentu sollumpati iranndu manusharai avanidaththirku anuppinaarkal.And forasmuch as Lydda was nigh to Joppa, and the disciples had heard that Peter was there, they sent unto him two men, desiring him that he would not delay to come to them.
39Paethuru elunthu, avarkaludanae koodapponaan. Avan poych sernthapoluthu, avarkal avanai maelveettukku alaiththukkonndu ponaarkal. Appoluthu vithavaikalellaarum aluthu, thorkaal thangaludanae kooda irukkaiyil seythiruntha angikalaiyum vasthirangalaiyum kaannpiththu, avanaich soolnthu nintarkal.Then Peter arose and went with them. When he was come, they brought him into the upper chamber: and all the widows stood by him weeping, and shewing the coats and garments which Dorcas made, while she was with them.
40Paethuru ellaaraiyum veliyae pokachcheythu, mulangaarpatiyittu Jebampannnni, piraethaththin puramaayth thirumpi: thapeeththaalae, elunthiru entan. Appoluthu aval than kannkalaith thiranthu, paethuruvaip paarththu utkaarnthaal.But Peter put them all forth, and kneeled down, and prayed; and turning him to the body said, Tabitha, arise. And she opened her eyes: and when she saw Peter, she sat up.
41Avan avalukkuk kaikoduththu, avalai elunthirukkappannnni, Parisuththavaankalaiyum vithavaikalaiyum alaiththu, avalai uyirullavalaaka avarkal mun niraுththinaan.And he gave her his hand, and lifted her up, and when he had called the saints and widows, presented her alive.
42Ithu yoppaa pattanam engum theriyavanthathu. Appoluthu anaekar karththaridaththil visuvaasamullavarkalaanaarkal.And it was known throughout all Joppa; and many believed in the Lord.
43Pinpu avan yoppaa pattanaththil thol pathanidukiravanaakiya seemon ennum oruvanidaththil anaekanaal thangiyirunthaan.And it came to pass, that he tarried many days in Joppa with one Simon a tanner.