Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 9:21 in Tamil

Home Bible Acts Acts 9 Acts 9:21

அப்போஸ்தலர் 9:21
கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.

Tamil Indian Revised Version
கேட்டவர்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இயேசுவின் நாமத்தை ஆராதிக்கின்றவர்களை துன்புறுத்தி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கைதுசெய்து பிரதான ஆசாரியர்களிடத்தில் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.

Tamil Easy Reading Version
சவுலைக் கேட்ட எல்லா மக்களும் வியப்புற்றனர். அவர்கள், “இவன் எருசலேமிலிருந்த அதே மனிதன். இந்தப் பெயரை நம்பிய மக்களை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தான்! அவன் இங்கும் அதைச் செய்வதற்காகவே வந்தான். இயேசுவின் சீஷர்களைக் கைது செய்து எருசலேமிலுள்ள தலைமை ஆசாரியர்களிடம் அழைத்துச் செல்வதற்கு வந்தான்” என்றனர்.

Thiru Viviliam
கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய், “எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கே வந்தவன் தானே இவன்” என்றார்கள்.

Acts 9:20Acts 9Acts 9:22

King James Version (KJV)
But all that heard him were amazed, and said; Is not this he that destroyed them which called on this name in Jerusalem, and came hither for that intent, that he might bring them bound unto the chief priests?

American Standard Version (ASV)
And all that heard him were amazed, and said, Is not this he that in Jerusalem made havoc of them that called on this name? and he had come hither for this intent, that he might bring them bound before the chief priests.

Bible in Basic English (BBE)
And all those hearing him were full of wonder and said, Is not this the man who in Jerusalem was attacking all the worshippers of this name? and he had come here so that he might take them as prisoners before the chief priests.

Darby English Bible (DBY)
And all who heard were astonished and said, Is not this *he* who destroyed in Jerusalem those who called on this name, and here was come for this purpose, that he might bring them bound to the chief priests?

World English Bible (WEB)
All who heard him were amazed, and said, “Isn’t this he who in Jerusalem made havoc of those who called on this name? And he had come here intending to bring them bound before the chief priests!”

Young’s Literal Translation (YLT)
And all those hearing were amazed, and said, `Is not this he who laid waist in Jerusalem those calling on this name, and hither to this intent had come, that he might bring them bound to the chief priests?’

அப்போஸ்தலர் Acts 9:21
கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.
But all that heard him were amazed, and said; Is not this he that destroyed them which called on this name in Jerusalem, and came hither for that intent, that he might bring them bound unto the chief priests?

ἐξίσταντοexistantoay-KSEES-tahn-toh
δὲdethay
πάντεςpantesPAHN-tase
οἱhoioo
ἀκούοντεςakouontesah-KOO-one-tase
καὶkaikay
ἔλεγονelegonA-lay-gone
Οὐχouchook
οὗτόςhoutosOO-TOSE
ἐστινestinay-steen
hooh
πορθήσαςporthēsaspore-THAY-sahs
ἐνenane
Ἰερουσαλὴμierousalēmee-ay-roo-sa-LAME
τοὺςtoustoos
ἐπικαλουμένουςepikaloumenousay-pee-ka-loo-MAY-noos
τὸtotoh
ὄνομαonomaOH-noh-ma
τοῦτοtoutoTOO-toh
καὶkaikay
ὧδεhōdeOH-thay
εἰςeisees
τοῦτοtoutoTOO-toh
ἐληλύθειelēlytheiay-lay-LYOO-thee
ἵναhinaEE-na
δεδεμένουςdedemenousthay-thay-MAY-noos
αὐτοὺςautousaf-TOOS
ἀγάγῃagagēah-GA-gay
ἐπὶepiay-PEE
τοὺςtoustoos
ἀρχιερεῖςarchiereisar-hee-ay-REES

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13
அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3
சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்.

1 யோவான் 3:1
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

2 தெசலோனிக்கேயர் 1:10
அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

கலாத்தியர் 1:13
நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1
சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13
பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:10
தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:12
எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:6
அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

யோவான் 9:8
அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்.

மாற்கு 5:15
இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.

மத்தேயு 13:54
தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?

சகரியா 3:8
இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.

ஏசாயா 8:18
இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.

சங்கீதம் 71:7
அநேகருக்கு நான் ஒரு புதுமை போலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.

எண்ணாகமம் 23:23
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.


Tags கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்
Acts 9:21 in Tamil Concordance Acts 9:21 in Tamil Interlinear Acts 9:21 in Tamil Image