Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 2:17 in Tamil

Home Bible Revelation Revelation 2 Revelation 2:17

வெளிப்படுத்தின விசேஷம் 2:17
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

Tamil Indian Revised Version
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது.

Tamil Easy Reading Version
“சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்கவேண்டும்! “ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைக் கொடுப்பேன். அதோடு அவனுக்கு வெள்ளைக் கல்லையும் கொடுப்பேன். அக்கல்லில் புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும். ஒருவருக்கும் அந்தப் பெயர் தெரியாது. அக்கல்லை எவன் பெறுகிறானோ அவன் ஒருவனே அந்தப் புதிய பெயரை அறிந்துகொள்வான்.” “தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:

Thiru Viviliam
கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். மறைத்து வைக்கப்பட்டுள்ள மன்னாவை வெற்றி பெறுவோருக்கு அளிப்பேன்; வெள்ளைக் கல் ஒன்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அதில் ஒரு புதிய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அதைப் பெறுபவரேயன்றி வேறு யாரும் அப்பெயரை அறியார்.’

Revelation 2:16Revelation 2Revelation 2:18

King James Version (KJV)
He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches; To him that overcometh will I give to eat of the hidden manna, and will give him a white stone, and in the stone a new name written, which no man knoweth saving he that receiveth it.

American Standard Version (ASV)
He that hath an ear, let him hear what the Spirit saith to the churches. To him that overcometh, to him will I give of the hidden manna, and I will give him a white stone, and upon the stone a new name written, which no one knoweth but he that receiveth it.

Bible in Basic English (BBE)
He who has ears, let him give ear to what the Spirit says to the churches. To him who overcomes I will give of the secret manna, and I will give him a white stone, and on the stone a new name, of which no one has knowledge but he to whom it is given.

Darby English Bible (DBY)
He that has an ear, let him hear what the Spirit says to the assemblies. To him that overcomes, to him will I give of the hidden manna; and I will give to him a white stone, and on the stone a new name written, which no one knows but he that receives [it].

World English Bible (WEB)
He who has an ear, let him hear what the Spirit says to the assemblies. To him who overcomes, to him I will give of the hidden manna,{Manna is supernatural food, named after the Hebrew for “What is it?”. See Exodus 11:7-9.} and I will give him a white stone, and on the stone a new name written, which no one knows but he who receives it.

Young’s Literal Translation (YLT)
He who is having an ear — let him hear what the Spirit saith to the assemblies: To him who is overcoming, I will give to him to eat from the hidden manna, and will give to him a white stone, and upon the stone a new name written, that no one knew except him who is receiving `it’.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 2:17
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches; To him that overcometh will I give to eat of the hidden manna, and will give him a white stone, and in the stone a new name written, which no man knoweth saving he that receiveth it.

hooh
ἔχωνechōnA-hone
οὖςousoos
ἀκουσάτωakousatōah-koo-SA-toh
τίtitee
τὸtotoh
πνεῦμαpneumaPNAVE-ma
λέγειlegeiLAY-gee
ταῖςtaistase
ἐκκλησίαιςekklēsiaisake-klay-SEE-ase
τῷtoh
νικῶντιnikōntinee-KONE-tee
δώσωdōsōTHOH-soh
αὐτῷautōaf-TOH
φαγεῖνphageinfa-GEEN
ἀπὸapoah-POH
τοῦtoutoo
μάνναmannaMAHN-na
τοῦtoutoo
κεκρυμμένουkekrymmenoukay-kryoom-MAY-noo
καὶkaikay
δώσωdōsōTHOH-soh
αὐτῷautōaf-TOH
ψῆφονpsēphonPSAY-fone
λευκὴνleukēnlayf-KANE
καὶkaikay
ἐπὶepiay-PEE
τὴνtēntane
ψῆφονpsēphonPSAY-fone
ὄνομαonomaOH-noh-ma
καινὸνkainonkay-NONE
γεγραμμένονgegrammenongay-grahm-MAY-none
hooh
οὐδεὶςoudeisoo-THEES
ἔγνωegnōA-gnoh
εἰeiee
μὴmay
hooh
λαμβάνωνlambanōnlahm-VA-none

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 3:12
ஜெயங்கொள்ளுறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:11
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

வெளிப்படுத்தின விசேஷம் 2:7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

ஏசாயா 62:2
ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.

ஏசாயா 65:15
நான் தெரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப்போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார்.

யோவான் 6:48
ஜீவ அப்பம் நானே.

கொலோசெயர் 3:3
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 19:12
அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 14:3
அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 3:22
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:6
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

மத்தேயு 13:11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.

சங்கீதம் 25:14
கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

நீதிமொழிகள் 3:32
மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.

நீதிமொழிகள் 14:10
இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.

ஏசாயா 56:4
என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

ஏசாயா 65:13
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.

யோவான் 4:32
அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.

1 கொரிந்தியர் 2:14
ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

சங்கீதம் 36:8
உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.


Tags ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும் அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது
Revelation 2:17 in Tamil Concordance Revelation 2:17 in Tamil Interlinear Revelation 2:17 in Tamil Image