1 கொரிந்தியர் 1:20
ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?
Tamil Indian Revised Version
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?
Tamil Easy Reading Version
தற்காலத்தின் ஞானி எங்கே? கல்வியில் தேர்ந்தவன் எங்கே? இன்றைய தத்துவஞானி எங்கே? உலகத்து ஞானத்தை தேவனே மடமையாக மாற்றினார்.
Thiru Viviliam
இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா?
King James Version (KJV)
Where is the wise? where is the scribe? where is the disputer of this world? hath not God made foolish the wisdom of this world?
American Standard Version (ASV)
Where is the wise? where is the scribe? where is the disputer of this world? hath not God made foolish the wisdom of the world?
Bible in Basic English (BBE)
Where is the wise? where is he who has knowledge of the law? where is the man of this world who has a love of discussion? has not God made foolish the wisdom of this world?
Darby English Bible (DBY)
Where [is the] wise? where scribe? where disputer of this world? has not God made foolish the wisdom of the world?
World English Bible (WEB)
Where is the wise? Where is the scribe? Where is the lawyer of this world? Hasn’t God made foolish the wisdom of this world?
Young’s Literal Translation (YLT)
where `is’ the wise? where the scribe? where a disputer of this age? did not God make foolish the wisdom of this world?
1 கொரிந்தியர் 1 Corinthians 1:20
ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?
Where is the wise? where is the scribe? where is the disputer of this world? hath not God made foolish the wisdom of this world?
| ποῦ | pou | poo | |
| σοφός | sophos | soh-FOSE | |
| ποῦ | pou | poo | |
| γραμματεύς | grammateus | grahm-ma-TAYFS | |
| ποῦ | pou | poo | |
| συζητητὴς | syzētētēs | syoo-zay-tay-TASE | |
| τοῦ | tou | too | |
| αἰῶνος | aiōnos | ay-OH-nose | |
| τούτου | toutou | TOO-too | |
| οὐχὶ | ouchi | oo-HEE | |
| ἐμώρανεν | emōranen | ay-MOH-ra-nane | |
| ὁ | ho | oh | |
| θεὸς | theos | thay-OSE | |
| τὴν | tēn | tane | |
| σοφίαν | sophian | soh-FEE-an | |
| τοῦ | tou | too | |
| κόσμου | kosmou | KOH-smoo | |
| τούτου | toutou | TOO-too |
Cross Reference
ரோமர் 1:22
அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
யோபு 12:17
அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.
ஏசாயா 44:25
நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.
ஏசாயா 33:18
உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே?
1 கொரிந்தியர் 3:19
இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
1 கொரிந்தியர் 2:6
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,
1 கொரிந்தியர் 1:19
அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது.
ஏசாயா 53:1
எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?
யோபு 12:24
அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.
யோபு 12:20
அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவரின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.
2 சாமுவேல் 17:23
அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.
2 சாமுவேல் 17:14
அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்லஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.
2 சாமுவேல் 16:23
அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனையெல்லாம் தேவனுடைய வாக்கைப்போல இருந்தது, அப்படியே அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.
2 சாமுவேல் 15:31
அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது, கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.
ஏசாயா 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?
Tags ஞானி எங்கே வேதபாரகன் எங்கே இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா
1 Corinthians 1:20 in Tamil Concordance 1 Corinthians 1:20 in Tamil Interlinear 1 Corinthians 1:20 in Tamil Image