Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 13:20 in Tamil

Home Bible Mark Mark 13 Mark 13:20

மாற்கு 13:20
கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

Tamil Easy Reading Version
அக்கேடு காலம் குறுகியதாக இருக்கட்டும் என்று தேவன் தீர்மானித்திருக்கிறார். அக்கேடு காலம் குறுகியதாக இல்லாமல் இருந்தால் பின்னர் உலகில் ஒருவரும் உயிரோடு இருக்க முடியாது. அவர் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய மக்களுக்கு உதவும்பொருட்டு தேவன் அக்கேடு காலத்தினைக் குறுகியதாக ஆக்குவார்.

Thiru Viviliam
ஆண்டவர் அந்நாள்களைக் குறைக்காவிடில் எவரும் தப்பிப் பிழைக்க முடியாது. ஆனால், தாம் தேர்ந்து கொண்டவர்களின் பொருட்டு அவர் அந்நாள்களைக் குறைத்திருக்கிறார்.⒫

Mark 13:19Mark 13Mark 13:21

King James Version (KJV)
And except that the Lord had shortened those days, no flesh should be saved: but for the elect’s sake, whom he hath chosen, he hath shortened the days.

American Standard Version (ASV)
And except the Lord had shortened the days, no flesh would have been saved; but for the elect’s sake, whom he chose, he shortened the days.

Bible in Basic English (BBE)
And if the Lord had not made the time short, no flesh would have been kept from destruction; but because of the saints he has made the time short.

Darby English Bible (DBY)
and if [the] Lord had not cut short those days, no flesh should have been saved; but on account of the elect whom he has chosen, he has cut short those days.

World English Bible (WEB)
Unless the Lord had shortened the days, no flesh would have been saved; but for the sake of the chosen ones, whom he picked out, he shortened the days.

Young’s Literal Translation (YLT)
and if the Lord did not shorten the days, no flesh had been saved; but because of the chosen, whom He did choose to Himself, He did shorten the days.

மாற்கு Mark 13:20
கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.
And except that the Lord had shortened those days, no flesh should be saved: but for the elect's sake, whom he hath chosen, he hath shortened the days.

καὶkaikay
εἰeiee
μὴmay
κύριοςkyriosKYOO-ree-ose
ἐκολόβωσενekolobōsenay-koh-LOH-voh-sane
τὰςtastahs
ἡμέραςhēmerasay-MAY-rahs
οὐκoukook
ἂνanan
ἐσώθηesōthēay-SOH-thay
πᾶσαpasaPA-sa
σάρξ·sarxSAHR-ks
ἀλλὰallaal-LA
διὰdiathee-AH
τοὺςtoustoos
ἐκλεκτοὺςeklektousake-lake-TOOS
οὓςhousoos
ἐξελέξατοexelexatoayks-ay-LAY-ksa-toh
ἐκολόβωσενekolobōsenay-koh-LOH-voh-sane
τὰςtastahs
ἡμέραςhēmerasay-MAY-rahs

Cross Reference

ஏசாயா 65:8
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.

சகரியா 13:8
தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.

மத்தேயு 24:22
அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.

ரோமர் 11:28
சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.

ஏசாயா 1:9
சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.

ஏசாயா 6:13
ஆகிலும் அதில் இன்னும் பத்திலொரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.

ரோமர் 11:5
அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.

ரோமர் 11:23
அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள், அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராயிருக்கிறாரே.


Tags கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால் ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்
Mark 13:20 in Tamil Concordance Mark 13:20 in Tamil Interlinear Mark 13:20 in Tamil Image