மத்தேயு 27:23
தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
“அவரை ஏன் கொல்ல விரும்புகிறீர்கள்? அவர் என்ன தவறு செய்தார்?” என்று பிலாத்து மக்களைக் கேட்டான். ஆனால் மக்கள் அனைவரும் “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமாய் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
Thiru Viviliam
அதற்கு அவன், “இவன் செய்த குற்றம் என்ன?” என்று கேட்டான். அவர்களோ, “சிலுவையில் அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.
King James Version (KJV)
And the governor said, Why, what evil hath he done? But they cried out the more, saying, Let him be crucified.
American Standard Version (ASV)
And he said, Why, what evil hath he done? But they cried out exceedingly, saying, Let him be crucified.
Bible in Basic English (BBE)
And he said, Why, what evil has he done? But they gave loud cries, saying, To the cross with him!
Darby English Bible (DBY)
And the governor said, What evil then has he done? But they cried more than ever, saying, Let him be crucified.
World English Bible (WEB)
But the governor said, “Why? What evil has he done?” But they cried out exceedingly, saying, “Let him be crucified!”
Young’s Literal Translation (YLT)
And the governor said, `Why, what evil did he?’ and they were crying out the more, saying, `Let be crucified.’
மத்தேயு Matthew 27:23
தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
And the governor said, Why, what evil hath he done? But they cried out the more, saying, Let him be crucified.
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| ἡγεμὼν | hēgemōn | ay-gay-MONE | |
| ἔφη | ephē | A-fay | |
| Τί | ti | tee | |
| γὰρ | gar | gahr | |
| κακὸν | kakon | ka-KONE | |
| ἐποίησεν | epoiēsen | ay-POO-ay-sane | |
| οἱ | hoi | oo | |
| δὲ | de | thay | |
| περισσῶς | perissōs | pay-rees-SOSE | |
| ἔκραζον | ekrazon | A-kra-zone | |
| λέγοντες | legontes | LAY-gone-tase | |
| Σταυρωθήτω | staurōthētō | sta-roh-THAY-toh |
Cross Reference
ஆதியாகமம் 37:18
அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:10
மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:22
இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும், இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:28
இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:5
விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:57
அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து,
மத்தேயு 21:38
தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
1 சாமுவேல் 22:14
அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்துவருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?
1 சாமுவேல் 20:31
ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.
1 சாமுவேல் 19:3
நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:12
விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.
Tags தேசாதிபதியோ ஏன் என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான் அதற்கு அவர்கள் அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்
Matthew 27:23 in Tamil Concordance Matthew 27:23 in Tamil Interlinear Matthew 27:23 in Tamil Image