புலம்பல் 4:10
இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
Tamil Indian Revised Version
இரக்கமுள்ள பெண்களின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் மகளாகிய மக்களின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
Tamil Easy Reading Version
அப்பொழுது, மிக மெல்லிய இயல்புடைய பெண்களும்கூடத் தம் சொந்த குழந்தைகளைச் சமைத்தனர். அக்குழந்தைகள் தம் தாய்மார்களின் உணவாயிற்று. என் ஜனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டபோது இது நிகழ்ந்தது.
Thiru Viviliam
⁽இரங்கும் பெண்டிரின் கைகள்␢ தம் குழந்தைகளை வேகவைத்தன!␢ என் மக்களாகிய மகள்␢ அழிவுற்றபோது␢ பிள்ளைகளே அன்னையர்க்கு␢ உணவாயினர்!⁾
King James Version (KJV)
The hands of the pitiful women have sodden their own children: they were their meat in the destruction of the daughter of my people.
American Standard Version (ASV)
The hands of the pitiful women have boiled their own children; They were their food in the destruction of the daughter of my people.
Bible in Basic English (BBE)
The hands of kind-hearted women have been boiling their children; they were their food in the destruction of the daughter of my people.
Darby English Bible (DBY)
The hands of pitiful women have boiled their own children: they were their meat in the ruin of the daughter of my people.
World English Bible (WEB)
The hands of the pitiful women have boiled their own children; They were their food in the destruction of the daughter of my people.
Young’s Literal Translation (YLT)
The hands of merciful women have boiled their own children, They have been for food to them, In the destruction of the daughter of my people.
புலம்பல் Lamentations 4:10
இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
The hands of the pitiful women have sodden their own children: they were their meat in the destruction of the daughter of my people.
| יְדֵ֗י | yĕdê | yeh-DAY | |
| נָשִׁים֙ | nāšîm | na-SHEEM | |
| רַחֲמָ֣נִיּ֔וֹת | raḥămāniyyôt | ra-huh-MA-NEE-yote | |
| בִּשְּׁל֖וּ | biššĕlû | bee-sheh-LOO | |
| יַלְדֵיהֶ֑ן | yaldêhen | yahl-day-HEN | |
| הָי֤וּ | hāyû | ha-YOO | |
| לְבָרוֹת֙ | lĕbārôt | leh-va-ROTE | |
| לָ֔מוֹ | lāmô | LA-moh | |
| בְּשֶׁ֖בֶר | bĕšeber | beh-SHEH-ver | |
| בַּת | bat | baht | |
| עַמִּֽי׃ | ʿammî | ah-MEE |
Cross Reference
புலம்பல் 2:20
கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?
ஏசாயா 49:15
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
எரேமியா 19:9
அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,
லேவியராகமம் 26:29
உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்தியின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.
உபாகமம் 28:53
உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.
2 இராஜாக்கள் 6:26
இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின் மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.
புலம்பல் 3:48
என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.
புலம்பல் 4:3
திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே.
எசேக்கியேல் 5:10
ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tags இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின
Lamentations 4:10 in Tamil Concordance Lamentations 4:10 in Tamil Interlinear Lamentations 4:10 in Tamil Image