Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 2:3 in Tamil

Home Bible Lamentations Lamentations 2 Lamentations 2:3

புலம்பல் 2:3
அவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; சத்துருவுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினிஜுவாலையைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.

Tamil Indian Revised Version
அவர் தமது கடுங்கோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; விரோதிகளுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதை எரித்துப்போடுகிற நெருப்புத்தழலைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கோபமாக இருந்து இஸ்ரவேலின் பலத்தை அழித்தார். அவர் தனது வலது கையை இஸ்ரவேலிலிருந்து எடுத்தார். பகைவர்கள் வந்தபோது அவர் இதனைச் செய்தார். அவர் யாக்கோபில் அக்கினி ஜூவாலைப் போல் எரித்தார். அவர் சுற்றிலும் உள்ளவற்றை எரிக்கிற நெருப்பைப் போன்று இருந்தார்.

Thiru Viviliam
⁽அவர் வெஞ்சினம் கொண்டு␢ இஸ்ரயேலின் கொம்பை␢ முற்றிலும் வெட்டிவிட்டார்;␢ பகைவன் வந்தபொழுது␢ தம் வலக்கையைப்␢ பின்புறம் மறைத்துக்கொண்டார்;␢ சூழ்ந்திருக்கும் யாவற்றையும்␢ எரிக்கும் தீப்பிழம்பென,␢ அவர் யாக்கோபின் மீது␢ பற்றியெரிந்தார்.⁾

Lamentations 2:2Lamentations 2Lamentations 2:4

King James Version (KJV)
He hath cut off in his fierce anger all the horn of Israel: he hath drawn back his right hand from before the enemy, and he burned against Jacob like a flaming fire, which devoureth round about.

American Standard Version (ASV)
He hath cut off in fierce anger all the horn of Israel; He hath drawn back his right hand from before the enemy: And he hath burned up Jacob like a flaming fire, which devoureth round about.

Bible in Basic English (BBE)
In his burning wrath every horn of Israel has been cut off; his right hand has been turned back before the attacker: he has put a fire in Jacob, causing destruction round about.

Darby English Bible (DBY)
He hath cut off in fierce anger all the horn of Israel: he hath withdrawn his right hand from before the enemy; and he burned up Jacob like a flaming fire, devouring round about.

World English Bible (WEB)
He has cut off in fierce anger all the horn of Israel; He has drawn back his right hand from before the enemy: He has burned up Jacob like a flaming fire, which devours round about.

Young’s Literal Translation (YLT)
He hath cut off in the heat of anger every horn of Israel, He hath turned backward His right hand From the face of the enemy, And He burneth against Jacob as a flaming fire, It hath devoured round about.

புலம்பல் Lamentations 2:3
அவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; சத்துருவுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினிஜுவாலையைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.
He hath cut off in his fierce anger all the horn of Israel: he hath drawn back his right hand from before the enemy, and he burned against Jacob like a flaming fire, which devoureth round about.

גָּדַ֣עgādaʿɡa-DA
בָּֽחֳרִיbāḥŏrîBA-hoh-ree
אַ֗ףʾapaf
כֹּ֚לkōlkole
קֶ֣רֶןqerenKEH-ren
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
הֵשִׁ֥יבhēšîbhay-SHEEV
אָח֛וֹרʾāḥôrah-HORE
יְמִינ֖וֹyĕmînôyeh-mee-NOH
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
אוֹיֵ֑בʾôyēboh-YAVE
וַיִּבְעַ֤רwayyibʿarva-yeev-AR
בְּיַעֲקֹב֙bĕyaʿăqōbbeh-ya-uh-KOVE
כְּאֵ֣שׁkĕʾēškeh-AYSH
לֶֽהָבָ֔הlehābâleh-ha-VA
אָכְלָ֖הʾoklâoke-LA
סָבִֽיב׃sābîbsa-VEEV

Cross Reference

சங்கீதம் 74:11
உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.

ஏசாயா 42:25
இவர்கள்மேல் அவர் தமதுகோபத்தின் உக்கிரத்தையும், யுத்தத்தின் வலிமையையும் வரப்பண்ணி, அவர்களைச்சூழ அக்கினிஜுவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களைத் தகித்தும், அதைமனதிலே வைக்காதேபோனார்கள்.

சங்கீதம் 75:10
துன்மார்க்கருடைய கொம்பρகளையெல்லாம் வெΟ்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

சங்கீதம் 75:5
உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள், இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.

எரேமியா 48:25
மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 89:46
எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?

சங்கீதம் 79:5
எதுவரைக்கும் கர்த்தாவே! நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?

லுூக்கா 3:17
தூற்றுக்கூடை அவர் கையிலிருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

லுூக்கா 1:69
அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;

மல்கியா 4:1
இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 21:14
நான் உங்கள் கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டிலே தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள யாவையும் பட்சிக்கும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 21:4
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,

எரேமியா 7:20
ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எரேமியா 4:4
யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.

ஏசாயா 1:31
பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோம் என்று சொல்லுகிறார்.

சங்கீதம் 132:17
அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம் பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்.

சங்கீதம் 89:24
என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும், என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.

யோபு 16:15
நான் இரட்டுச்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.

உபாகமம் 32:22
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.


Tags அவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார் சத்துருவுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினிஜுவாலையைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்
Lamentations 2:3 in Tamil Concordance Lamentations 2:3 in Tamil Interlinear Lamentations 2:3 in Tamil Image