எரேமியா 20:18
நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?
Tamil Indian Revised Version
நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாகக்கழிய நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?
Tamil Easy Reading Version
நான் ஏன் அந்த உடலைவிட்டு வந்தேன்? நான் பார்த்திருப்பதெல்லாம் தொல்லையும் துன்பமும்தான். என் வாழ்க்கை அவமானத்தில் முடியும்.
Thiru Viviliam
⁽கருவறைவிட்டு␢ ஏன்தான் வெளிவந்தேன்?␢ துன்ப துயரத்தை அனுபவிக்கவும்␢ என் வாழ்நாள்களை␢ வெட்கத்தில் கழிக்கவும்தான் வந்தேனோ?⁾
King James Version (KJV)
Wherefore came I forth out of the womb to see labour and sorrow, that my days should be consumed with shame?
American Standard Version (ASV)
Wherefore came I forth out of the womb to see labor and sorrow, that my days should be consumed with shame?
Bible in Basic English (BBE)
Why did I come from my mother’s body to see pain and sorrow, so that my days might be wasted with shame?
Darby English Bible (DBY)
Wherefore came I forth from the womb to see labour and sorrow, that my days should be consumed in shame?
World English Bible (WEB)
Why came I forth out of the womb to see labor and sorrow, that my days should be consumed with shame?
Young’s Literal Translation (YLT)
Why `is’ this? from the womb I have come out, To see labour and sorrow, Yea, consumed in shame are my days!
எரேமியா Jeremiah 20:18
நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?
Wherefore came I forth out of the womb to see labour and sorrow, that my days should be consumed with shame?
| לָ֤מָּה | lāmmâ | LA-ma | |
| זֶּה֙ | zeh | zeh | |
| מֵרֶ֣חֶם | mēreḥem | may-REH-hem | |
| יָצָ֔אתִי | yāṣāʾtî | ya-TSA-tee | |
| לִרְא֥וֹת | lirʾôt | leer-OTE | |
| עָמָ֖ל | ʿāmāl | ah-MAHL | |
| וְיָג֑וֹן | wĕyāgôn | veh-ya-ɡONE | |
| וַיִּכְל֥וּ | wayyiklû | va-yeek-LOO | |
| בְּבֹ֖שֶׁת | bĕbōšet | beh-VOH-shet | |
| יָמָֽי׃ | yāmāy | ya-MAI |
Cross Reference
யோபு 3:20
மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
புலம்பல் 3:1
ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.
யோபு 14:1
ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
சங்கீதம் 69:19
தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
சங்கீதம் 90:9
எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒருகதையைப்போல் எங்கள் வருஷங்களைக் களைத்துப்போட்டோம்.
1 கொரிந்தியர் 4:9
எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.
1 பேதுரு 4:14
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
எபிரெயர் 13:13
ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.
எபிரெயர் 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
எபிரெயர் 11:36
வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;
எபிரெயர் 10:36
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
யோபு 14:13
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.
ஏசாயா 1:6
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.
ஏசாயா 51:7
நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
எரேமியா 8:18
நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.
புலம்பல் 1:12
வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
யோவான் 16:20
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:41
அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
2 தீமோத்தேயு 1:12
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
ஆதியாகமம் 3:16
அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.
Tags நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன
Jeremiah 20:18 in Tamil Concordance Jeremiah 20:18 in Tamil Interlinear Jeremiah 20:18 in Tamil Image