Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 20:10 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 20 Jeremiah 20:10

எரேமியா 20:10
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயம் சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னுடன் சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்வரை காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் கோபத்தைத் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் எனக்கு எதிராக முணுமுணுப்பதை நான் கேட்கிறேன். எங்கெங்கும் என்னைப் பயப்படுத்தும் செய்தியைக் கேட்கிறேன். என் நண்பர்களும் கூட, “அவனைப்பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்வோம்” என கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஜனங்கள் நான் தவறு செய்வேன் என்று காத்திருக்கிறார்கள். அவர்கள், “எங்களைப் பொய் சொல்லவிடுங்கள். அவன் தீயவற்றைச் செய்தான் என்று சொல்லவிடுங்கள். நாங்கள் எரேமியாவிடம் தந்திரம்செய்ய முடியும். பிறகு அவனைப் பெறுவோம். இறுதியாக நாங்கள் அவனைத் தொலைத்து ஒழிப்போம். பிறகு அவனை இறுகப்பிடிப்போம். அவன் மேலுள்ள வஞ்சத்தை தீர்த்துக்கொள்வோம்” என்றார்கள்.

Thiru Viviliam
⁽‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று␢ பலரும் பேசிக் கொள்கின்றார்கள்;␢ ‘பழிசுமத்துங்கள்; வாருங்கள்,␢ அவன்மேல் பழி சுமத்துவோம்’␢ என்கிறார்கள்.␢ என் நண்பர்கள்கூட␢ என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்;␢ ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்;␢ நாம் அவன்மேல் வெற்றி கொண்டு␢ அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்’␢ என்கிறார்கள்.⁾

Jeremiah 20:9Jeremiah 20Jeremiah 20:11

King James Version (KJV)
For I heard the defaming of many, fear on every side. Report, say they, and we will report it. All my familiars watched for my halting, saying, Peradventure he will be enticed, and we shall prevail against him, and we shall take our revenge on him.

American Standard Version (ASV)
For I have heard the defaming of many, terror on every side. Denounce, and we will denounce him, `say’ all my familiar friends, they that watch for my fall; peradventure he will be persuaded, and we shall prevail against him, and we shall take our revenge on him.

Bible in Basic English (BBE)
For numbers of them say evil secretly in my hearing (there is fear on every side): they say, Come, let us give witness against him; all my nearest friends, who are watching for my fall, say, It may be that he will be taken by deceit, and we will get the better of him and give him punishment.

Darby English Bible (DBY)
For I have heard the defaming of many, terror on every side: Report, and we will report it. All my familiars are watching for my stumbling: Peradventure he will be enticed, and we shall prevail against him; and we shall take our revenge on him.

World English Bible (WEB)
For I have heard the defaming of many, terror on every side. Denounce, and we will denounce him, [say] all my familiar friends, those who watch for my fall; peradventure he will be persuaded, and we shall prevail against him, and we shall take our revenge on him.

Young’s Literal Translation (YLT)
For I have heard the evil report of many, Fear `is’ round about: `Declare, and we declare it,’ All mine allies are watching `for’ my halting, `Perhaps he is enticed, and we prevail over him, And we take our vengeance out of him.’

எரேமியா Jeremiah 20:10
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.
For I heard the defaming of many, fear on every side. Report, say they, and we will report it. All my familiars watched for my halting, saying, Peradventure he will be enticed, and we shall prevail against him, and we shall take our revenge on him.

כִּ֣יkee
שָׁמַ֜עְתִּיšāmaʿtîsha-MA-tee
דִּבַּ֣תdibbatdee-BAHT
רַבִּים֮rabbîmra-BEEM
מָג֣וֹרmāgôrma-ɡORE
מִסָּבִיב֒missābîbmee-sa-VEEV
הַגִּ֙ידוּ֙haggîdûha-ɡEE-DOO
וְנַגִּידֶ֔נּוּwĕnaggîdennûveh-na-ɡee-DEH-noo
כֹּ֚לkōlkole
אֱנ֣וֹשׁʾĕnôšay-NOHSH
שְׁלֹמִ֔יšĕlōmîsheh-loh-MEE
שֹׁמְרֵ֖יšōmĕrêshoh-meh-RAY
צַלְעִ֑יṣalʿîtsahl-EE
אוּלַ֤יʾûlayoo-LAI
יְפֻתֶּה֙yĕputtehyeh-foo-TEH
וְנ֣וּכְלָהwĕnûkĕlâveh-NOO-heh-la
ל֔וֹloh
וְנִקְחָ֥הwĕniqḥâveh-neek-HA
נִקְמָתֵ֖נוּniqmātēnûneek-ma-TAY-noo
מִמֶּֽנּוּ׃mimmennûmee-MEH-noo

Cross Reference

சங்கீதம் 41:9
என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

சங்கீதம் 31:13
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள்.

ஏசாயா 29:21
ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.

எரேமியா 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

1 இராஜாக்கள் 19:2
அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்கு செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.

யோபு 19:19
என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.

சங்கீதம் 55:13
எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.

சங்கீதம் 64:2
துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும் அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.

நீதிமொழிகள் 10:18
பகையை மறைக்கிறவன் பொய்உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.

எரேமியா 6:25
வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.

எசேக்கியேல் 22:9
இரத்தஞ்சிந்தும்படிக்கு அபாண்டம் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள்.

லுூக்கா 11:53
இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,

நெகேமியா 6:6
அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:13
இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:1
ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.

1 இராஜாக்கள் 22:8
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.

1 இராஜாக்கள் 22:27
இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே வருமளவும், இவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக்கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

சங்கீதம் 57:4
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

மத்தேயு 26:59
பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.

மாற்கு 6:19
ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று.

லுூக்கா 12:52
எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.

லுூக்கா 20:20
அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:33
அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:11
அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை எற்படுத்தி;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:54
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:12
விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.

1 இராஜாக்கள் 21:20
அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.


Tags அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன் பயஞ்சூழ்ந்திருந்தது அறிவியுங்கள் அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள் என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான் அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்
Jeremiah 20:10 in Tamil Concordance Jeremiah 20:10 in Tamil Interlinear Jeremiah 20:10 in Tamil Image