Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 52:12 in Tamil

Home Bible Isaiah Isaiah 52 Isaiah 52:12

ஏசாயா 52:12
நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

Tamil Indian Revised Version
நீங்கள் துரிதமாகப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பின்னே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

Tamil Easy Reading Version
நீங்கள் பாபிலோனை விடுவீர்கள். ஆனால், அவர்கள் உங்களை அவசரப்படுத்தி வெளியேற்ற முடியாது. நீங்கள் வெளியே ஓடும்படி அவர்கள் உங்களைப் பலவந்தப்படுத்த முடியாது. நீங்கள் வெளியேறி நடப்பீர்கள், கர்த்தர் உங்களோடு நடப்பார். கர்த்தர் உங்கள் முன்னால் இருப்பார். இஸ்ரவேலின் தேவன் உங்கள் பின்பக்கமும் இருப்பார்.

Thiru Viviliam
⁽நீங்கள் அவசரப்பட்டு␢ வெளியேறப் போவதில்லை;␢ தப்பியோடுவது போல்␢ செல்வதுமில்லை;␢ ஏனெனில், ஆண்டவர்␢ உங்கள்முன்னே செல்வார்;␢ இஸ்ரயேலின் கடவுள்␢ உங்கள்பின்னே பாதுகாப்பாய் இருப்பார்.⁾

Isaiah 52:11Isaiah 52Isaiah 52:13

King James Version (KJV)
For ye shall not go out with haste, nor go by flight: for the LORD will go before you; and the God of Israel will be your rereward.

American Standard Version (ASV)
For ye shall not go out in haste, neither shall ye go by flight: for Jehovah will go before you; and the God of Israel will be your rearward.

Bible in Basic English (BBE)
For you will not go out suddenly, and you will not go in flight: for the Lord will go before you, and the God of Israel will come after you to keep you.

Darby English Bible (DBY)
For ye shall not go out with haste, nor go by flight; for Jehovah will go before you, and the God of Israel will be your rear-guard.

World English Bible (WEB)
For you shall not go out in haste, neither shall you go by flight: for Yahweh will go before you; and the God of Israel will be your rearward.

Young’s Literal Translation (YLT)
For not in haste do ye go out, Yea, with flight ye go not on, For going before you `is’ Jehovah, And gathering you `is’ the God of Israel!

ஏசாயா Isaiah 52:12
நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
For ye shall not go out with haste, nor go by flight: for the LORD will go before you; and the God of Israel will be your rereward.

כִּ֣יkee
לֹ֤אlōʾloh
בְחִפָּזוֹן֙bĕḥippāzônveh-hee-pa-ZONE
תֵּצֵ֔אוּtēṣēʾûtay-TSAY-oo
וּבִמְנוּסָ֖הûbimnûsâoo-veem-noo-SA
לֹ֣אlōʾloh
תֵלֵכ֑וּןtēlēkûntay-lay-HOON
כִּֽיkee
הֹלֵ֤ךְhōlēkhoh-LAKE
לִפְנֵיכֶם֙lipnêkemleef-nay-HEM
יְהוָ֔הyĕhwâyeh-VA
וּמְאַסִּפְכֶ֖םûmĕʾassipkemoo-meh-ah-seef-HEM
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Cross Reference

ஏசாயா 58:8
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

மீகா 2:13
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.

ஏசாயா 45:2
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.

உபாகமம் 20:4
உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்.

யாத்திராகமம் 14:19
அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.

யாத்திராகமம் 13:21
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.

யாத்திராகமம் 12:39
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக் கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை.

யாத்திராகமம் 12:33
எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.

யாத்திராகமம் 12:11
அதைப் புசிக்க வேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.

ஏசாயா 51:14
சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.

ஏசாயா 28:16
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான்.

1 நாளாகமம் 14:15
முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.

நியாயாதிபதிகள் 4:14
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.

யாத்திராகமம் 14:8
கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.

எண்ணாகமம் 10:25
அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.


Tags நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை கர்த்தர் உங்கள் முன்னே போவார் இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்
Isaiah 52:12 in Tamil Concordance Isaiah 52:12 in Tamil Interlinear Isaiah 52:12 in Tamil Image