Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 16:6 in Tamil

Home Bible Isaiah Isaiah 16 Isaiah 16:6

ஏசாயா 16:6
மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.

Tamil Indian Revised Version
மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் கோபத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மிகவும் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.

Tamil Easy Reading Version
மோவாபிலுள்ள ஜனங்கள் பெருமையும் மேட்டிமையும் கொண்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். அவர்கள் பிடிவாதமும் தற்பெருமையும் உடையவர்கள். அவர்களின் தற்பெருமைகள் வெற்று வார்த்தைகளாக உள்ளன.

Thiru Viviliam
⁽மோவாபின் இறுமாப்பைப்பற்றி␢ நாங்கள் கேள்வியுற்றோம்;␢ அவன் ஆணவம் பெரிதே;␢ அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும்␢ செருக்கையும் குறித்துக்␢ கேள்விப்பட்டோம்.␢ அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே.⁾

Isaiah 16:5Isaiah 16Isaiah 16:7

King James Version (KJV)
We have heard of the pride of Moab; he is very proud: even of his haughtiness, and his pride, and his wrath: but his lies shall not be so.

American Standard Version (ASV)
We have heard of the pride of Moab, `that’ he is very proud; even of his arrogancy, and his pride, and his wrath; his boastings are nought.

Bible in Basic English (BBE)
We have had word of the pride of Moab, how great it is; how he is lifted up in pride and passion: his high words about himself are false.

Darby English Bible (DBY)
We have heard of the arrogance of Moab, — [he is] very proud, — of his pride, and his arrogance, and his wrath: his pratings are vain.

World English Bible (WEB)
We have heard of the pride of Moab, [that] he is very proud; even of his arrogance, and his pride, and his wrath; his boastings are nothing.

Young’s Literal Translation (YLT)
We have heard of the pride of Moab — very proud, His pride, and his arrogance, and his wrath, Not right `are’ his devices.

ஏசாயா Isaiah 16:6
மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.
We have heard of the pride of Moab; he is very proud: even of his haughtiness, and his pride, and his wrath: but his lies shall not be so.

שָׁמַ֥עְנוּšāmaʿnûsha-MA-noo
גְאוֹןgĕʾônɡeh-ONE
מוֹאָ֖בmôʾābmoh-AV
גֵּ֣אgēʾɡay
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
גַּאֲוָת֧וֹgaʾăwātôɡa-uh-va-TOH
וּגְאוֹנ֛וֹûgĕʾônôoo-ɡeh-oh-NOH
וְעֶבְרָת֖וֹwĕʿebrātôveh-ev-ra-TOH
לֹאlōʾloh
כֵ֥ןkēnhane
בַּדָּֽיו׃baddāywba-DAIV

Cross Reference

ஆமோஸ் 2:1
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.

ஒபதியா 1:3
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.

எரேமியா 48:29
அவன் மெத்தப் பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் பெத்தரிக்கத்தையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.

1 பேதுரு 5:5
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

செப்பனியா 2:8
மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்துபெருமை பாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.

எரேமியா 50:36
பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள் மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.

எரேமியா 48:42
மோவாப் கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினபடியால், அது ஒரு ஜனமாயிராதபடிக்கு அழிக்கப்படும்.

எரேமியா 48:26
அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்திபண்ணி அதிலே புரளுவான்; அவன் பரியாசத்துக்கிடமாவான்.

ஏசாயா 44:25
நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.

ஏசாயா 28:18
நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.

ஏசாயா 28:15
நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.

ஏசாயா 2:11
நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.


Tags மோவாபின் பெருமையையும் அவன் மேட்டிமையையும் அவன் அகங்காரத்தையும் அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம் அவன் மெத்தப் பெருமைக்காரன் ஆனாலும் அவன் வீம்பு செல்லாது
Isaiah 16:6 in Tamil Concordance Isaiah 16:6 in Tamil Interlinear Isaiah 16:6 in Tamil Image