பிரசங்கி 10:15
ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.
Tamil Indian Revised Version
ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் சோர்வடையச்செய்யும்.
Tamil Easy Reading Version
முட்டாள் தன் வீட்டுக்குரிய வழியை அவ்வளவு சுறுசுறுப்பாக அறிந்துகொள்ளமாட்டான். எனவே வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலைச் செய்வான்.
Thiru Viviliam
⁽மூடர் அளவுமீறி உழைத்துத்␢ தளர்ந்து போவார்.␢ ஊருக்குத் திரும்பிப்போகவும்␢ வகை அறியார்.⁾
King James Version (KJV)
The labour of the foolish wearieth every one of them, because he knoweth not how to go to the city.
American Standard Version (ASV)
The labor of fools wearieth every one of them; for he knoweth not how to go to the city.
Bible in Basic English (BBE)
The work of the foolish will be a weariness to him, because he has no knowledge of the way to the town.
Darby English Bible (DBY)
The labour of fools wearieth them, because they know not how to go to the city.
World English Bible (WEB)
The labor of fools wearies every one of them; for he doesn’t know how to go to the city.
Young’s Literal Translation (YLT)
The labour of the foolish wearieth him, In that he hath not known to go unto the city.
பிரசங்கி Ecclesiastes 10:15
ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.
The labour of the foolish wearieth every one of them, because he knoweth not how to go to the city.
| עֲמַ֥ל | ʿămal | uh-MAHL | |
| הַכְּסִילִ֖ים | hakkĕsîlîm | ha-keh-see-LEEM | |
| תְּיַגְּעֶ֑נּוּ | tĕyaggĕʿennû | teh-ya-ɡeh-EH-noo | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| לֹֽא | lōʾ | loh | |
| יָדַ֖ע | yādaʿ | ya-DA | |
| לָלֶ֥כֶת | lāleket | la-LEH-het | |
| אֶל | ʾel | el | |
| עִֽיר׃ | ʿîr | eer |
Cross Reference
சங்கீதம் 107:4
அவர்கள் தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தர வழியாய்,
ஆபகூக் 2:6
இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எந்தமட்டும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.
எரேமியா 50:4
அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 57:1
நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
ஏசாயா 55:2
நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.
ஏசாயா 47:12
நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.
ஏசாயா 44:12
கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
ஏசாயா 35:8
அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
பிரசங்கி 10:10
இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிகபலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்.
பிரசங்கி 10:3
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.
சங்கீதம் 107:7
தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
மத்தேயு 11:28
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.
Tags ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால் அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்
Ecclesiastes 10:15 in Tamil Concordance Ecclesiastes 10:15 in Tamil Interlinear Ecclesiastes 10:15 in Tamil Image