சங்கீதம் 118:6
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
Tamil Indian Revised Version
கர்த்தர் என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
Tamil Easy Reading Version
கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன். என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
Thiru Viviliam
⁽ஆண்டவர் என் பக்கம் இருக்க␢ நான் ஏன் அஞ்ச வேண்டும்?␢ மனிதர் எனக்கு எதிராக␢ என்ன செய்ய முடியும்?⁾
King James Version (KJV)
The LORD is on my side; I will not fear: what can man do unto me?
American Standard Version (ASV)
Jehovah is on my side; I will not fear: What can man do unto me?
Bible in Basic English (BBE)
The Lord is on my side; I will have no fear: what is man able to do to me?
Darby English Bible (DBY)
Jehovah is for me, I will not fear; what can man do unto me?
World English Bible (WEB)
Yahweh is on my side. I will not be afraid. What can man do to me?
Young’s Literal Translation (YLT)
Jehovah `is’ for me, I do not fear what man doth to me.
சங்கீதம் Psalm 118:6
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
The LORD is on my side; I will not fear: what can man do unto me?
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| לִ֭י | lî | lee | |
| לֹ֣א | lōʾ | loh | |
| אִירָ֑א | ʾîrāʾ | ee-RA | |
| מַה | ma | ma | |
| יַּעֲשֶׂ֖ה | yaʿăśe | ya-uh-SEH | |
| לִ֣י | lî | lee | |
| אָדָֽם׃ | ʾādām | ah-DAHM |
Cross Reference
எபிரெயர் 13:6
அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.
சங்கீதம் 56:4
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 56:9
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
சங்கீதம் 56:11
தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
ஏசாயா 51:12
நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?
எரேமியா 20:11
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
சங்கீதம் 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
மீகா 7:8
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.
ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
சங்கீதம் 23:4
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
சங்கீதம் 146:5
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
சங்கீதம் 46:11
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)
சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.
Tags கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார் நான் பயப்படேன் மனுஷன் எனக்கு என்னசெய்வான்
Psalm 118:6 in Tamil Concordance Psalm 118:6 in Tamil Interlinear Psalm 118:6 in Tamil Image