சங்கீதம் 116:6
கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்து போனேன், அவர் என்னை இரட்சித்தார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னைப் பாதுகாத்தார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார். நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
Thiru Viviliam
⁽எளிய மனத்தோரை␢ ஆண்டவர் பாதுகாக்கின்றார்;␢ நான் தாழ்த்தப்பட்டபோது␢ எனக்கு மீட்பளித்தார்.⁾
King James Version (KJV)
The LORD preserveth the simple: I was brought low, and he helped me.
American Standard Version (ASV)
Jehovah preserveth the simple: I was brought low, and he saved me.
Bible in Basic English (BBE)
The Lord keeps the simple; I was made low, and he was my saviour.
Darby English Bible (DBY)
Jehovah keepeth the simple: I was brought low, and he saved me.
World English Bible (WEB)
Yahweh preserves the simple. I was brought low, and he saved me.
Young’s Literal Translation (YLT)
A preserver of the simple `is’ Jehovah, I was low, and to me He giveth salvation.
சங்கீதம் Psalm 116:6
கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்து போனேன், அவர் என்னை இரட்சித்தார்.
The LORD preserveth the simple: I was brought low, and he helped me.
| שֹׁמֵ֣ר | šōmēr | shoh-MARE | |
| פְּתָאיִ֣ם | pĕtāʾyim | peh-ta-YEEM | |
| יְהוָֹ֑ה | yĕhôâ | yeh-hoh-AH | |
| דַּ֝לֹּתִ֗י | dallōtî | DA-loh-TEE | |
| וְלִ֣י | wĕlî | veh-LEE | |
| יְהוֹשִֽׁיעַ׃ | yĕhôšîaʿ | yeh-hoh-SHEE-ah |
Cross Reference
சங்கீதம் 79:8
பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.
சங்கீதம் 19:7
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
சங்கீதம் 142:6
என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.
கொலோசெயர் 3:22
வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.
2 கொரிந்தியர் 11:3
ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
2 கொரிந்தியர் 1:12
மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
ரோமர் 16:19
உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.
மத்தேயு 11:25
அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
ஏசாயா 35:8
அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
சங்கீதம் 106:43
அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
சங்கீதம் 25:21
உத்தமமும் நேர்மையும் என்னைக்காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
Tags கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார் நான் மெலிந்து போனேன் அவர் என்னை இரட்சித்தார்
Psalm 116:6 in Tamil Concordance Psalm 116:6 in Tamil Interlinear Psalm 116:6 in Tamil Image