சங்கீதம் 69:1
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.
Tamil Indian Revised Version
சோஷனீம் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல் தேவனே, என்னைக் காப்பாற்றும்; வெள்ளங்கள் என்னுடைய ஆத்துமாவரை பெருகிவருகிறது.
Tamil Easy Reading Version
தேவனே, எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னைக் காப்பாற்றும். என் வாய்வரை வெள்ளம் நிரம்பியுள்ளது.
Thiru Viviliam
⁽கடவுளே! என்னைக் காப்பாற்றும்;␢ வெள்ளம் கழுத்தளவு␢ வந்துவிட்டது.⁾
Title
“லீலிப் பூக்கள்” என்ற இசையில் பாடும்படி இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்.
Other Title
உதவிக்காக வேண்டல்§(பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்’ என்ற மெட்டு; தாவீதுக்கு உரியது)
King James Version (KJV)
Save me, O God; for the waters are come in unto my soul.
American Standard Version (ASV)
Save me, O God; For the waters are come in unto my soul.
Bible in Basic English (BBE)
<To the chief music-maker; put to Shoshannim. Of David.> Be my saviour, O God; because the waters have come in, even to my neck.
Darby English Bible (DBY)
{To the chief Musician. Upon Shoshannim. [A Psalm] of David.} Save me, O God; for the waters are come in unto [my] soul.
World English Bible (WEB)
> Save me, God, For the waters have come up to my neck!
Young’s Literal Translation (YLT)
To the Overseer. — `On the Lilies,’ by David. Save me, O God, for come have waters unto the soul.
சங்கீதம் Psalm 69:1
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.
Save me, O God; for the waters are come in unto my soul.
| הוֹשִׁיעֵ֥נִי | hôšîʿēnî | hoh-shee-A-nee | |
| אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| כִּ֤י | kî | kee | |
| בָ֖אוּ | bāʾû | VA-oo | |
| מַ֣יִם | mayim | MA-yeem | |
| עַד | ʿad | ad | |
| נָֽפֶשׁ׃ | nāpeš | NA-fesh |
Cross Reference
சங்கீதம் 69:14
நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.
ஏசாயா 43:2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
சங்கீதம் 45:1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
சங்கீதம் 42:7
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 17:15
பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
வெளிப்படுத்தின விசேஷம் 12:15
அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
யோனா 2:3
சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
புலம்பல் 3:54
தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.
ஏசாயா 28:17
நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்குநூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.
சங்கீதம் 80:1
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.
சங்கீதம் 69:2
ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
சங்கீதம் 60:1
தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
சங்கீதம் 32:6
இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.
சங்கீதம் 18:4
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
யோபு 22:11
நீர் பார்க்கக் கூடாதபடிக்கு இருள் வந்தது; ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.
Tags தேவனே என்னை இரட்சியும் வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது
Psalm 69:1 in Tamil Concordance Psalm 69:1 in Tamil Interlinear Psalm 69:1 in Tamil Image