சங்கீதம் 18:15
அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிப்பினாலும் உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் வல்லமையாகப் பேசினீர், உமது வாயிலிருந்து வல்லமையுள்ள காற்று வீசிற்று, தண்ணீரானது பின்னே தள்ளப்பட்டது. கடலின் அடிப்பகுதியைப் பார்க்க முடிந்தது. பூமியின் அஸ்திபாரங்கள் எங்கள் கண்களுக்குப் புலப்பட்டன.
Thiru Viviliam
⁽ஆண்டவரே, உமது கடிந்துரையாலும்␢ உமது மூச்சுக் காற்றின் வலிமையாலும்␢ நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது;␢ நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.⁾
King James Version (KJV)
Then the channels of waters were seen, and the foundations of the world were discovered at thy rebuke, O LORD, at the blast of the breath of thy nostrils.
American Standard Version (ASV)
Then the channels of waters appeared, And the foundations of the world were laid bare, At thy rebuke, O Jehovah, At the blast of the breath of thy nostrils.
Bible in Basic English (BBE)
Then the deep beds of the waters were seen, and the bases of the world were uncovered, because of your words of wrath, O Lord, because of the breath from your mouth.
Darby English Bible (DBY)
And the beds of the waters were seen, and the foundations of the world were uncovered at thy rebuke, Jehovah, at the blast of the breath of thy nostrils.
Webster’s Bible (WBT)
Yes, he sent out his arrows, and scattered them; and he shot out lightnings, and discomfited them.
World English Bible (WEB)
Then the channels of waters appeared, The foundations of the world were laid bare at your rebuke, Yahweh, At the blast of the breath of your nostrils.
Young’s Literal Translation (YLT)
And seen are the streams of waters, And revealed are foundations of the earth. From Thy rebuke, O Jehovah, From the breath of the spirit of Thine anger.
சங்கீதம் Psalm 18:15
அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
Then the channels of waters were seen, and the foundations of the world were discovered at thy rebuke, O LORD, at the blast of the breath of thy nostrils.
| וַיֵּ֤רָא֨וּ׀ | wayyērāʾû | va-YAY-ra-OO | |
| אֲפִ֥יקֵי | ʾăpîqê | uh-FEE-kay | |
| מַ֗יִם | mayim | MA-yeem | |
| וַֽיִּגָּלוּ֮ | wayyiggālû | va-yee-ɡa-LOO | |
| מוֹסְד֪וֹת | môsĕdôt | moh-seh-DOTE | |
| תֵּ֫בֵ֥ל | tēbēl | TAY-VALE | |
| מִגַּעֲרָ֣תְךָ֣ | miggaʿărātĕkā | mee-ɡa-uh-RA-teh-HA | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| מִ֝נִּשְׁמַ֗ת | minnišmat | MEE-neesh-MAHT | |
| ר֣וּחַ | rûaḥ | ROO-ak | |
| אַפֶּֽךָ׃ | ʾappekā | ah-PEH-ha |
Cross Reference
சங்கீதம் 106:9
அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.
யாத்திராகமம் 15:8
உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.
மீகா 6:2
பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.
யோனா 2:6
பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.
எரேமியா 31:37
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 30:33
தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.
ஏசாயா 30:27
இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.
ஏசாயா 11:4
நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
சங்கீதம் 104:5
பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.
சங்கீதம் 76:6
யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
சங்கீதம் 74:15
ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.
யோபு 38:4
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
யோபு 4:9
தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.
2 இராஜாக்கள் 19:7
இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
2 சாமுவேல் 22:16
கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
யோசுவா 3:13
சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.
Tags அப்பொழுது கர்த்தாவே உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது
Psalm 18:15 in Tamil Concordance Psalm 18:15 in Tamil Interlinear Psalm 18:15 in Tamil Image