சங்கீதம் 12:1
இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் காப்பாற்றும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்; உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும். நல்லோர் மடிந்துபோயினர். பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை.
Thiru Viviliam
⁽ஆண்டவரே, காத்தருளும்;␢ ஏனெனில் உலகில்␢ இறையன்பர்கள் அற்றுப் போயினர்;␢ மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.⁾
Title
செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
Other Title
உதவிக்காக மன்றாடல்§(பாடகர் தலைவர்க்கு: எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)
King James Version (KJV)
Help, LORD; for the godly man ceaseth; for the faithful fail from among the children of men.
American Standard Version (ASV)
Help, Jehovah; for the godly man ceaseth; For the faithful fail from among the children of men.
Bible in Basic English (BBE)
<For the chief music-maker on the Sheminith. A Psalm. Of David.> Send help, Lord, for mercy has come to an end; there is no more faith among the children of men.
Darby English Bible (DBY)
{To the chief Musician. Upon Sheminith. A Psalm of David.} Save, Jehovah, for the godly man is gone; for the faithful have failed from among the children of men.
World English Bible (WEB)
> Help, Yahweh; for the godly man ceases. For the faithful fail from among the children of men.
Young’s Literal Translation (YLT)
To the Overseer, on the octave. — A Psalm of David. Save, Jehovah, for the saintly hath failed, For the stedfast have ceased From the sons of men:
சங்கீதம் Psalm 12:1
இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.
Help, LORD; for the godly man ceaseth; for the faithful fail from among the children of men.
| הוֹשִׁ֣יעָה | hôšîʿâ | hoh-SHEE-ah | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| כִּי | kî | kee | |
| גָמַ֣ר | gāmar | ɡa-MAHR | |
| חָסִ֑יד | ḥāsîd | ha-SEED | |
| כִּי | kî | kee | |
| פַ֥סּוּ | passû | FA-soo | |
| אֱ֝מוּנִ֗ים | ʾĕmûnîm | A-moo-NEEM | |
| מִבְּנֵ֥י | mibbĕnê | mee-beh-NAY | |
| אָדָֽם׃ | ʾādām | ah-DAHM |
Cross Reference
ஏசாயா 57:1
நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
ஏசாயா 59:13
கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்.
மத்தேயு 24:12
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
எரேமியா 5:1
நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
ஏசாயா 63:5
நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று.
ஏசாயா 59:4
நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.
ஏசாயா 1:21
உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.
நீதிமொழிகள் 20:6
மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?
சங்கீதம் 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
ஆதியாகமம் 6:12
தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
மீகா 7:1
ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை.
மத்தேயு 14:30
காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.
மத்தேயு 8:25
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
ஏசாயா 1:9
சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
சங்கீதம் 54:1
தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும்.
சங்கீதம் 6:4
திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
சங்கீதம் 3:7
கர்த்தாவே எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
1 நாளாகமம் 15:21
மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள்.
Tags இரட்சியும் கர்த்தாவே பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான் உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்
Psalm 12:1 in Tamil Concordance Psalm 12:1 in Tamil Interlinear Psalm 12:1 in Tamil Image