எஸ்றா 7:16
பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.
Tamil Indian Revised Version
பாபிலோன் தேசமெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய மக்களும் ஆசாரியர்களும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்திற்கென்று மனஉற்சாகமாகக் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிகளாலும் அனுப்பப்படுகிறாய்.
Tamil Easy Reading Version
பாபிலோனிய எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் நீ போகவேண்டும். உங்கள் ஜனங்களிடமிருந்து அன்பளிப்புகளைச் சேகரியுங்கள், ஆசாரியர்களிடமிருந்தும், லேவியர்களிடமிருந்தும் அன்பளிப்புகளைச் சேகரியுங்கள். இவை எருசலேமில் உள்ள அவர்களுடைய தேவனுடைய ஆலயத்திற்கு உரியவை.
Thiru Viviliam
மற்றும், பாபிலோன் நாடெங்கும் உமக்குக் கிடைக்கும் பொன்னையும் வெள்ளியையும், அவற்றோடு எருசலேமில் உள்ள தங்கள் கடவுளின் இல்லத்திற்காக ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளையும் எடுத்துச் செல்லவும் நாங்கள் அனுமதி அளிக்கிறோம்.
King James Version (KJV)
And all the silver and gold that thou canst find in all the province of Babylon, with the freewill offering of the people, and of the priests, offering willingly for the house of their God which is in Jerusalem:
American Standard Version (ASV)
and all the silver and gold that thou shalt find in all the province of Babylon, with the freewill-offering of the people, and of the priests, offering willingly for the house of their God which is in Jerusalem;
Bible in Basic English (BBE)
As well as all the silver and gold which you get from the land of Babylon, together with the offering of the people and of the priests, freely given for the house of their God, which is in Jerusalem:
Darby English Bible (DBY)
and all the silver and gold that thou canst find in all the province of Babylon, besides the voluntary offering of the people, and of the priests, who offer willingly for the house of their God which is at Jerusalem.
Webster’s Bible (WBT)
And all the silver and gold that thou canst find in all the province of Babylon, with the free-will-offering of the people, and of the priests, offering willingly for the house of their God which is in Jerusalem:
World English Bible (WEB)
and all the silver and gold that you shall find in all the province of Babylon, with the freewill-offering of the people, and of the priests, offering willingly for the house of their God which is in Jerusalem;
Young’s Literal Translation (YLT)
and all the silver and gold that thou findest in all the province of Babylon, with the free-will offerings of the people, and of the priests, offering willingly, for the house of their God that `is’ in Jerusalem,
எஸ்றா Ezra 7:16
பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.
And all the silver and gold that thou canst find in all the province of Babylon, with the freewill offering of the people, and of the priests, offering willingly for the house of their God which is in Jerusalem:
| וְכֹל֙ | wĕkōl | veh-HOLE | |
| כְּסַ֣ף | kĕsap | keh-SAHF | |
| וּדְהַ֔ב | ûdĕhab | oo-deh-HAHV | |
| דִּ֣י | dî | dee | |
| תְהַשְׁכַּ֔ח | tĕhaškaḥ | teh-hahsh-KAHK | |
| בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE | |
| מְדִינַ֣ת | mĕdînat | meh-dee-NAHT | |
| בָּבֶ֑ל | bābel | ba-VEL | |
| עִם֩ | ʿim | eem | |
| הִתְנַדָּב֨וּת | hitnaddābût | heet-na-da-VOOT | |
| עַמָּ֤א | ʿammāʾ | ah-MA | |
| וְכָֽהֲנַיָּא֙ | wĕkāhănayyāʾ | veh-ha-huh-na-YA | |
| מִֽתְנַדְּבִ֔ין | mitĕnaddĕbîn | mee-teh-na-deh-VEEN | |
| לְבֵ֥ית | lĕbêt | leh-VATE | |
| אֱלָֽהֲהֹ֖ם | ʾĕlāhăhōm | ay-la-huh-HOME | |
| דִּ֥י | dî | dee | |
| בִירֽוּשְׁלֶֽם׃ | bîrûšĕlem | vee-ROO-sheh-LEM |
Cross Reference
1 நாளாகமம் 29:6
அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனப்பூர்வமாய்,
1 நாளாகமம் 29:9
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.
எஸ்றா 1:4
அந்த ஜனங்களில மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.
எஸ்றா 1:6
அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
1 நாளாகமம் 29:17
என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்.
எஸ்றா 8:25
ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்.
2 கொரிந்தியர் 8:12
ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.
2 கொரிந்தியர் 9:7
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
Tags பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும் உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும் நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்
Ezra 7:16 in Tamil Concordance Ezra 7:16 in Tamil Interlinear Ezra 7:16 in Tamil Image